ஆன்மாவைப்பற்றிசிறிதுவிளங்கிக்கொண்டு பகுதி4

 #முதலில்ஆன்மாவைப்பற்றிசிறிதுவிளங்கிக்கொண்டுபகுதி4


.


பின்னர் மனிதனின் ஆறாம் அறிவு பற்றி ஆராயலாம்.


ஆன்மா இந்த உயிருடலில் எப்போது இணைந்து கொள்கிறது, 


உயிருடலில் ஆன்மா வாழும்போது அதன் செயற்பாடு என்ன, 


எப்போது இந்த ஆன்மாவானது உயிருடலில் இருந்து பிரிந்து செல்கிறது, 


ஆன்மா எங்கே செல்கிறது என்ற கேள்விகள் எல்லோரிடமும் உண்டு.


மனித உடலினுள் ஆன்மா எப்போது புகுந்து கொள்கிறது என்று பார்ப்போமானால் 


ஒரு தாயின் கர்ப்பப்பையில் இருந்து ஒரு முழு வளர்ச்சியடைந்த சிசு வெளியேறி முதற் சுவாசம் நடைபெறும்போது அதன் உடலினுள் ஆன்மாவானது குடிபுகுந்து கொள்கிறது. 


அப்போது குழந்தை அழுதவாறு தனது இவ்வுலக சம்சாரத்தினை ஆரம்பிக்கின்றது. 


அதுவே அக்குழந்தையின் பிறப்பாக நேரம் குறிக்கப்படுகிறது.


ஒரு விதையின் கோதை உடைத்து வெளிவரும் தாவர முளை 


அல்லது


ஒரு முட்டையின் கோதை உடைத்து வெளிவரும் மீன் 


அல்லது 


பறவையின் குஞ்சுகளுக்கும் இவ்வுதாரணம் பொருந்தும்.


ஐம் புலன்கள் கொண்டு அறியும் திறன் ஆன்மாவினால் கையாளப்படுகிறது. 


இப்போது ஒரு உயிருக்கும் ஆன்மாவுக்கும் இடையில் உள்ள வித்தியாசம் புலப்படுகின்றது.


 உதாரணமாக


கண் என்ற அங்கம் உயிரோடு இருக்க உயிர் உதவுகிறது. இந்த கண் என்ற அங்கத்தினைக் கொண்டு பார்த்து அறிந்துகொள்ளும் பக்குவம் ஆன்மாவினால் கையாளப்படுகிறது.


ஆன்மா உயிரினங்களில் உடலினை இயக்கியும் பாதுகாத்துக் கொண்டும் இருக்கின்றது. 


மேலும் ஆன்மாவின் இயக்கம் உயிரினங்களுக்கு ஏற்றவாறு வேறுபடுகின்றது.


அதாவது ஒரு ஆன்மாவானது தான் குடிபுகும் உயிரினத்தின் அவ்வுடலின் தன்மைக்கும் அதன் ஆற்றலுக்கும் ஏற்றவாறே செயற்பட வேண்டியுள்ளது என்பதுதான் உண்மையாகும்.


அதாவது ஓரறிவு உயிரினங்களில் ஆன்மா செயல்படும் முறை வேறு,


ஈரறிவு உயிரினங்களில் ஆன்மா செயல்படும் முறை வேறு.


காரணம் அந்த உயிரினங்கள் வெவ்வேறு தன்மையை உடையவை. ஈரறிவு உயிரினம் கூடுதலாக சுவை உணர்வினை தரும் வாயினைப் பெற்று இருக்கின்றது, 


எனவே அவ்வுயிரினத்தின் ஆன்மா அந்த புலனையும் இயக்கும் தன்மைப் பெற்றதாக இருக்கின்றது. இந்த வேறுபாடு அனைத்து வகையான உயிரினங்களுக்கும் பொருந்தும்.


எனவே ஒரே ஆன்மா, வேறு வேறு உயிரினங்களில் வாழும்போது, 


தான் வாழும் உயிரினத்தின் தன்மைக்கு ஏற்றவாறு அந்த ஆன்மாவின் செயல்பாடுகள் மாறுபடுகின்றது 


(கட்டுப்படுத்தப் படுகிறது).

Comments

Popular posts from this blog

துஷ்ட சக்திகள் விலக Deliverance from the hold of evil spirits

தனது பக்தைக்காக ஶ்ரீலலிதா சஹஸ்ர நாம உச்சரிப்பை மாற்றிய அம்பாள்ச

பெண் குழந்தைகளுக்கு வைப்பதால் அதன் சிறப்பு).