ஆன்மீகம் மற்றுமொரு விளக்கம்


நேற்று ஆன்மீகம் என்பது என்ன என்ற பதிவை கண்டோம்.

அம்மையும் அப்பனும் இணைந்த இணைவே இந்த உலகு என கண்டோம்.


அது எவ்வாறு உடல் அப்பன் ஆனால் உயிர் அல்லது ஆன்மா அம்மை ஆவாள்.


உடல் இல்லாமல் உயிருக்கு மதிப்பில்லை


அதே போல் உயிர் இல்லாமல் உடலுக்கு மதிப்பில்லை.


அப்பனின் வலது பாகம் ஆண் பாகம் .


அவரது இடது பகுதி பெண்பாகம்.


அம்பாள் வேறு நாராயணன் வேறல்ல அதற்கு சான்றுகள்


அம்மை அப்பன் இணைவே அர்த்தநாதீஸ்வரர் தத்துவம்.


அந்த இடப்பாகத்தை நாராயணுக்கு தந்து சங்கர நாராயணண் ஆனார்.


அந்த இடபாகமே அம்மை பாகம் அந்த அர்த்தநாதீஸ்வரர் தத்துவத்தில்.


சிவன் சக்தியாகிய நாராயணனால் ஹரஹரசுதன் உருவானார்.


நாராயணன் நாராயணி நாம சாம்யம் தான் கேரளா சோட்டாணிகரை பகவதி.


அங்கு அம்பாளுக்கு மூன்று அலங்காரங்கள்.


சரஸ்வதி/லெக்ஷ்மி/தேவி அலங்காரங்கள்.


மஹான்கள் உடலை விடுத்து அதாவது அழிக்கின்ற உடலை விடுத்த ஆன்மாவை இறுக்கப் பற்றினர்.


அதனால் ஆன்மாவை மேம்படுத்துதலே ஆன்மீகம்.


இந்த ஆன்மா,ஆலயத்தில் ஆன்மா லயித்தால்.


அங்கு மன அமைதிப் பிறக்கும் அதனால் தான் அதற்கு ஆ+லயம்.


ஆன்மா லயிக்கும் இடம் ஆலயம்.


அல்லது 


கோயில் கோ என்ற பசு. கோ என்றால் ஆன்மா. 


ஆன்மா உள்ளே இருப்பது. எதன் உள்ளே உடலில் உள்ளே இருப்பது.


அதை தான் கர்ப்பகிரஹத்தில் இறைவனை காண்கிறோம்.


ஏன் கடந்து உள்ளே இருப்பவன் கடவுள்.


கட+வுள் அந்த #வுள் என்பது ஆலயத்தில் உள்ளே உள்ள கர்ப்பகிரஹம்.


அதனால் அவன் இறைவன். அதே மாதிரி நமது உள்ளே இருப்பது ஆன்மா.


அங்கே இறைவனை காணலாம் . அதுவே ஆன்மாவின் தன்மை.


இதை தான் மனம் அது செம்மையானால் மந்திரம் தேவையில்லை என்றனர்.


இதை தான் திருமூலர்.


மனம் கோயில்:


 உள்ளம் பெருங்கோயில், ஊனுடம்பு ஆலயம்.


கடவுள் வசிப்பிடம்:


 மனச்சாட்சிக்குள்ளே இறைவன் வாழ்கிறான்.


பொருள்: 


அன்பே சிவமாகவும், வாய் கோபுர வாசலாகவும், ஜீவன் சிவலிங்கமாகவும் கருதப்படுகிறது.


உண்மை வழிபாடு: 


மனத் துயரம் நீங்கி அமைதி பெற, நல்லெண்ணங்களும் நற்செயல்களும் அவசியம். 


மனதை தூய்மையாக வைத்திருப்பதன் மூலம் 


ஒருவன் தனக்குள் இருக்கும் இறைத்தன்மையை உணர முடியும்


Comments

Popular posts from this blog

துஷ்ட சக்திகள் விலக Deliverance from the hold of evil spirits

தனது பக்தைக்காக ஶ்ரீலலிதா சஹஸ்ர நாம உச்சரிப்பை மாற்றிய அம்பாள்ச

பெண் குழந்தைகளுக்கு வைப்பதால் அதன் சிறப்பு).