உடல் உயிர் ஆன்மா- பகுதி 2.


 உடல் உயிர் ஆன்மா- பகுதி 2.

இவ்விடத்தில் உயிருடலின் தன்மையினை சிறிது ஆராந்து கொண்டு #ஆன்மாவைப் பற்றி ஆராயலாம்.


ஒரு மனித உயிருடல் பற்றிப் பார்க்கும்போது ஒரு தாயின் கருப்பையில் வளரும் ஒரு கருவானது #ஆன்மா இல்லாத ஒரு உயிருடலாகும். 


அக்கருவானது கை கால்களை அசைக்கும். 


தாயில் இருந்து தொப்புள் கொடிமூலமாக கிடைக்கும் உணவை உள்வாங்கும். 


அதன் உள் அங்கங்களின் செயற் பாட்டினால் சமிபாடடையும். அதன் இதய துடிப்பு காரணமாக இரத்த ஓட்டம் நடைபெறும். 


ஆன்மா இல்லாத போதும் ஒரு உயிருடலில் இச்செயல்முறைகள் நடைபெறும்.


இன்னொரு உதாரணமாக 


ஒரு மரத்தில் இருந்து கிடைக்கும் ஒரு விதையினை ஒரு தாயின் கருவில் வளரும் கருவுக்கு ஒப்பிட முடியும். ஒரு விதையினை ஒரு மரத்தின் அங்கமாக எடுத்துக் கொள்ளலாம்.


அது மட்டுமல்லாமல் ஒரு மரத்தில் இருந்து வெட்டி எடுக்கப்படும் ஒரு உயிருள்ள தடி அல்லது ஒரு கம்பு 


ஒரு மரத்தின் அங்கமாக எடுத்துக் கொள்ளலாம்.


ஒரு உடலில் உணவு செரிமானம், செரிக்கப்பட்ட உணவு இரத்தத்தோடு கலக்கப்படல்,


இரத்தம் சுத்தமாக்கப்படல், சுத்தமாக்கப்பட்ட இரத்தம் உடல் முழுவதும் இதயம் மூலமாக அனுப்பப்படல், 


தேவையற்ற பொருள்கள் கழிவுகளாக வெளியேற்றப்படல், ஆகிய செயல்களை, 


உடலின் உறுப்புக்களை இயக்குவதன் மூலம் உயிர் செய்து கொண்டு இருக்கின்றது.


இது உயிருள்ள அனைத்து உயிரினங்களுக்கும் பொருந்தும். எனவே ஒரு உயிருடனானது (தாவரங்களோ அன்றி விலங்குகளோ) அதனதன் தன்மைக்கு ஏற்றவாறு செயல்படும்.


இவ்விடத்தில் இன்னொரு


உதாரணமாக #மயக்க (coma stage) நிலையிலுள்ள ஒரு உடலையும் இங்கு எடுத்துக்கொள்ள முடியும்.


மயக்க நிலை எனப்படுவது ஏதோ காரணத்தினால் ஆன்மாவின் தொடர்பை உடல் இழந்துவிடும்போது மயக்க நிலை எனப்படும். 


ஆனால் ஆன்மாவின் தொடர்பு இல்லாத நிலையிலும் மயக்க நிலையில் உயிருடனுள்ள உடலில் நடைபெறும் சுவாசம், இரத்த ஓட்டம் சமிபாடு போன்ற. உடலின் உள் தொழில்ப்பாடுகள் நடைபெறும்.


அதாவது #உயிர் எனப்படுவது இந்த உடலை அசைத்திடும், இயக்கிடும் ஒரு சக்தி என எடுத்துக் கொள்ளலாம். 


இது மரம், செடி, கொடி, பூச்சி, விலங்கினம், பறப்பவை, நீரில் நீந்துபவை, நீரில், மண்ணில் ஊரும் பிராணிகள் என அனைத்து உயிரினங்களும் இயங்க தேவையான ஒரு சக்தி. 


அதாவது தேகத்தை #உடலை) இயக்கும் மின்சாரம் போன்றது #உயிர்.


ஒரு அணுவை எப்படி மனிதனால் ஒரு ஆய்வுகூடத்தில் உருவாக்க முடியாதோ, 


உதாரணமாக 


தங்கம் (gold), இரும்பு போன்ற அணுக்களை ஆய்வு கூடத்தில் உருவாக்க முடியாது,


நிலத்திலிருந்துதான் எடுக்க முடியும்). அப்படியாக ஒரு உயிரையும் மனிதனால் ஆய்வு கூடத்தில் உருவாக்க முடியவில்லை.


Comments

Popular posts from this blog

துஷ்ட சக்திகள் விலக Deliverance from the hold of evil spirits

தனது பக்தைக்காக ஶ்ரீலலிதா சஹஸ்ர நாம உச்சரிப்பை மாற்றிய அம்பாள்ச

பெண் குழந்தைகளுக்கு வைப்பதால் அதன் சிறப்பு).