வாராஹி அம்மன்

 சில விஷயங்கள் நம் மனதை வருடும்.


அதில் ஒன்று நேற்றைய முன் தினம் பிள்ளையார் கோவில் குருக்கள், என்ன நினைதாரோ தெரியவில்லை.  மாமா நாளை அனுஷத்திற்கு அபிஷேகத்திற்கு திரவியங்கள் வாங்கிக் கொடுங்கள் என கூறினார்.


அவர் கூறியது போல் மறுநாள் மாலை திரவியங்கள் மற்றும் பாலை எடுத்துக்கொண்டு கோவிலை நோக்கி விரைந்த போது. கோவில் மாமா உங்களை தான் எதிர்பார்த்துக்கொண்டு இருந்தேன் என கூறினார்.


மேலும் நேற்று கைங்கர்ய கார்யத்தில்  ஈடுபட முடியவில்லை. எனவே மஹாபெரியவாளை தரிசினம் செய்து எனது பணிக்கு கிளம்பிவிட்டேன்.


சரி கைங்கர்யம் செய்ய முடியவில்லை மஹாபெரியவாளை தரிசனம் செய்யலாம் என எண்ணி மாலை கோவிலை நோக்கி பயணித்த போது,என்ன ஆச்சரியம் மஹாபெரியவாவுலுடன் வாராஹி தரிசனம்.


கோயில் குருக்கள் நானே எதிர்பார்க்க வில்லை நீங்கள் வந்த போன பிறகு அம்பாள் வாராஹி கோவிலில் எழுந்தளினாள். தங்கள் வாங்கி கொடுத்த அனைத்து திரவியங்களும் வாராஹி அம்பாளுக்கு தனக்கு அபிஷேகத்திற்கு ஏற்றுக்கொண்டாள் என கூறினார்.


மேலும் அம்பாளை தரிசனம் முடித்த சில நொடிகளில் அம்பிளை கோவிலுக்கு கொண்டு வந்த உடமஸ்தர்,திரும்பவும் எடுத்து செல்ல ஆயுத்தம் ஆனார்.


ஒரு சில விநாடிகள் தாமத்தி இருந்தால் அம்பாள் தரிசனத்தை தவற விட்டு இருப்பேன்.


ஆனால் சதாசர்வ காலம் அவளது சிந்தனை என்பதால் நம்மை எப்போது வேண்டுமோ அப்போது நம்மை அவளுடன் இணைக்கிறாள்.


மேலும் அதற்கு முன்பு தான் சப்த கன்னியரை பற்றி பதியலாம் என எண்ணி அதைப்பற்றி பதிவுகாக தயார் செய்துக் கொண்டு இருந்தேன்.


மேலும் நான் பதிவிட்டது போல் இது உடல் அல்ல  ஆத்மா அல்லது உயிர்.


நாம் நம்முள் நினைப்பதை அவள் வெளியிலிருந்து நிறை வேற்றுகிறாள் என்பதற்கு பதிவே சாட்சி.


#ஓம்வாராஹியேநமஹ#


Comments

Popular posts from this blog

துஷ்ட சக்திகள் விலக Deliverance from the hold of evil spirits

தனது பக்தைக்காக ஶ்ரீலலிதா சஹஸ்ர நாம உச்சரிப்பை மாற்றிய அம்பாள்ச

பெண் குழந்தைகளுக்கு வைப்பதால் அதன் சிறப்பு).