தை அமாவாசை மற்றும் அபிராமி அந்தாதி
இன்று தை அமாவாசை மற்றும் அபிராமி பட்டருக்கு அம்பிகை அருளியதாள் அபிராமி அந்தாதி உருவன நாள்
இவற்றை தானம் செய்யுங்கள்.
ஜென்ம பாவம் தீரும்.
முன்னோர்களின் ஆசிகள் கிடைக்கும்!
முன்னோர்களின் ஆசிகள் கிடைக்க இந்த பொருட்களை தை அமாவாசையில் தானமாக கொடுங்கள்.
இந்து மத சாஸ்திரங்களின்படி வருடம் முழுவதும் வரும் அமாவாசை சிறப்பானது என்றாலும் தை அமாவாசை அதிக முக்கியத்துவம் வாய்ந்தது.
அமாவாசை என்பது முன்னோர்கள் வழிபாட்டிற்குரிய நாளாக கருதப்படுவதால்,
அந்நாளில் அவர்களுக்கு தர்ப்பணம் செய்து அவர்களை வழிபட வேண்டும்.
அதன்படி இந்தாண்டுதை அமாவாசை உங்கள் முன்னோர்களுக்கு திதி கொடுக்கலாம்.
அமாவாசை நாளில் பக்தர்கள் புனித நதிகள் மற்றும் ஏரிகளில் மூழ்குவார்கள்.
அதன் பிறகு வழிபாடு, தவம், தானம் முதலியவை செய்யப்படுகின்றன. அதுமட்டுமின்றி இந்நாளில் தர்ப்பணம், திதி வழங்குவது மூலம் முன்னோர்கள் முக்தி அடைகின்றன.
அமாவாசை நாளில் தானம் செய்வது சிறப்பு வாய்ந்தது. அமாவாசை தினத்தன்று தானம் செய்வதால் ஒவ்வொருவருக்கு நிச்சயம் வளம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இதில் வீட்டில் மகிழ்ச்சியும் செழிப்பையும் தருகிறது. எனவே இந்த பொருட்களை தை அமாவாசையில் தானம் செய்ய வேண்டும்.
தை அமாவாசை அன்று முன்னோர்களை மகிழ்விக்க பிராமணர்களுக்கு உணவு வழங்கல் அவ்வாறு செய்வதன் மூலம் முன்னோர்கள் மகிழ்ச்சி அடைந்து உங்களுக்கும் உங்கள் சந்ததியினருக்கும் மகிழ்ச்சியையும், செழிப்பையும் தருவார்கள்.
தை அமாவாசை நாளில் தீபம் மற்றும் விளக்கு தானமாக கொடுக்கலாம். இதனால் உங்களுக்கு பார்வை கோளாறு அல்லது கண்ணில் பிரச்சனைகள் இருந்தால் அவை அனைத்தும் நீங்கும்.
தை அமாவாசை அன்று அரிசி தானம் செய்யலாம் இதனால் உங்கள் பாவங்கள் அனைத்தும் நீங்கும். இந்த தானம் செய்யும் போது பிரார்த்தனை செய்து கொடுங்கள்.
அதுபோல தை அமாவாசை தினத்தில் யாருக்காவது தேன் வழங்கலாம். இதனால் குழந்தை பாக்கியம் உண்டாகும். வீட்டில் பிள்ளை செல்வம் இல்லை என்ற குறை நீங்கும்.
சாஸ்திரம் படி, ஒருவருக்கு தேங்காயை தானமாக கொடுத்தால் செய்யும் காரியங்கள் அனைத்திலும் வெற்றி நிச்சயம் உண்டு.
ஒருவேளை இவை எதுவுமே உங்களால் செய்ய முடியவில்லை என்றால், இயலாதாவர் ஒருவருக்காவது தயிர் சாதமாவது வாங்கி கொடுங்கள். இதனால் பித்துக்களின் ஆசி உங்களுக்கு பரிபூரணமாக கிடைக்கும்.
#அபிராமிப்பட்டரின்வரலாறு
தை அமாவாசை என்றால் நமக்கு நினைவு வருவது அபிராமி பட்டரின் அபிராமி அந்தாதி உருவான விதம் மற்றும் திருகடையூர் அபிராமி தாய்.
அபிராமி பட்டர் தேவி அபிராமி அம்பாளின் நினைவில் மூழ்கி மகிழ்ச்சியோடு இருந்தார்.
ஒருவர் இவரிடம் இன்றையநாள் எதுவாகும்? எனக் கேட்டார்.
அன்று அமாவாசை என்பது தெரியாமல் அன்று பெளர்ணமி என அபிராமி பட்டர் கூறினார்.
இதைக் கேட்டு எல்லோரும் சிரித்தனர். கோயிலுக்கு வந்த அரசன் இதைப் பார்த்து பட்டரிடம் விசாரிக்க அவர் மனக் கண்ணில் அபிராமி சோதி வடிவினளாகத் தெரிவதால் அன்று பெளர்ணமி எனவே கூறினார்.
கோபங் கொண்ட அரசன் இவர் கூறுவதுபோல் இன்று #பெளர்ணமி என இவர் நிரூபிக்காது போனால் இவரை உயிரோடு நெருப்பில் இட உத்தரவிட்டான்.
பட்டரை 100 கயிற்றுத் துண்டுகளால் கட்டித் தூங்கும் மேடையில் ஏற்றி கீழே நெருப்பு வைத்தார்கள்.
பட்டர் அபிராமியிடம் முறையிட்டார். அம்பாளே உன்னாலேயே எனக்கு இந்த நிலை ஏற்பட்டது. இன்றைய பொழுதை பெளர்ணமியாக்கி என்னைக் காப்பாற்று என முறையிட்டார்.
அபிராமி மேல் 100 பாடல்கள் பாடினார். ஒவ்வொரு பாடல்களின் முடிவும் அடுத்த பாட்டின் தொடக்கமாக 100 தெய்வீகமான தமிழ் பாடல்கள் அபிராமியின் அருளால் ஒரு இரவில் பாடினார்.
ஒவ்வொரு பாடல் முடியும்போது ஒரு கயிறை வெட்டினார்கள்.
79வது பாடல் பாடும்போது அம்பாள் அபிராமி பட்டர் முன் தோன்றிக் காட்சி கொடுத்து தனது காதில் உள்ள குண்டலங்களில் ஒன்றைக் கழட்டி வானில் எறிந்தாள்.
அது பூரண சந்திரனாக வானில் எல்லோருக்கும் காட்சி கொடுத்தது. அரசனோடு எல்லோரும் அம்பாளை வணங்கினர்.
அரசன் அபிராமிப் பட்டரிடம் மன்னிப்புக் கோரினான்.
ஓம் நமசிவாய!

Comments
Post a Comment