உடல் உயிர் ஆன்மா பகுதி 1

 உடல் உயிர் ஆன்மா


என்றால் என்ன நண்பரின் அருமையான பதிவு.

நாம் ஆன்மீக நாட்டம் கொண்டு ஆன்மீகத்தினுள் பிரவேசிக்கும்போது அதாவது யோகப் பயிற்சிகள் செய்ய ஆரம்பிக்கும்போது அறிந்து கொள்ளும் சொற்களான 


உடல், உயிர், ஆன்மா, குண்டலினி என்பனபற்றி எனது எண்ணத்தில் கருத்தில் தோன்றிய விடயங்களை இங்கு ஆராய்ந்து பார்க்கலாம் என்று எண்ணியுள்ளேன். 


எனது குருவான பிரம்மஸ்ரீ நித்தியானந்த சுவாமிகளது கேள்வி பதில்களையும் மேலும் பல தேடல்களில் இருந்தும் நான் அறிந்துகொண்ட,உணர்ந்து கொண்ட, புரிந்துகொண்ட கருத்துக்களை இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.


முதலில் உடல் என்றால் என்ன என்பதனை பார்க்கலாம். 


உடல் என்பது பல சிறிய கலங்களால் ஆன ஓர் அமைப்பு.


அதாவது பல அணுக்களால் ஆனது உலோகம். 


அதாவது ஒரு உலோகத்தின் மிகச்சிறிய துகள் அணு என்று அழைக்கப்படும். 


இன்னும் விரிவாக்கப் பார்க்கப் போனால் ஒரு உலோகத்தை மேலும் மேலும் சிறிய துண்டுகளாக வெட்டிக்கொண்டு போகும்போது இறுதியில் மிஞ்சிவது அணு எனக் கொள்ளலாம்.


எனவே உலோகங்கள் அணுக்களால் (அணு) ஆனவை போல உடல்கள் கலங்களால் (கலம்) உயிரணுக்களால் ஆனவை.


அணுவை எப்படி எமது வெறும் கண்ணால்ப் பார்க்க முடியாதோ அவ்வாறே கலன்களையும் வெறும் கண்ணால்ப் பார்க்க முடியாது.


சகல உயிரினங்களும் ஓன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கலன்களால் ஆனவை.


சில உயிரினங்கள் தனிக்கலத்தாலான


 (unicellular) உயிரினங்கள் ஆகும்.


அதாவது ஒரே ஒரு உயிரணுவினால் உருவாக்கப்பட்டவை. 


உதாரணம் #பாக்டீரியா


மற்றயவை பல்கல (multi-cellular) உயிரினங்கள். 


அதாவது பல உயிரணுக்களினால் ஆனவை.


ஒரு அணுவானது எலக்ட்ரான் ப்ரோட்டானா நியூட்டாரன் என்ற கட்டமைப்பினால் ஆனதுபோல ஒரு கலத்தினுள்ளும் சிறிய கட்டமைப்புக்கள் உண்டு. 


அதில் முக்கியமானது DNA எனப்படும். 


இந்த DNA என்று சொல்லப்படும் கட்டமைப்பே 


ஒரு உயிரினத்தின் அதாவது ஒரு உடலின் (தாவரமோ, விலங்கோ) வடிவத்தை


 (உதாரணமாக உயரம், நிறம்) 


அதன் குணாதிசயத்தை (குயில் கூவும், புலி பாயும்) தனது அடுத்த சந்ததிக்குக் கடத்துகின்றது


ஒவ்வொரு உயிரினத்தினதும் தனித்துவத்தை தமது பரம்பரைக்கு கடத்துவது இந்த DNA ஆகும்.


ஒரு உயிருள்ள கலத்தின் மூலமாகத்தான் இன்னொரு உயிருள்ள கலத்தை உருவாக்க முடியும்.


 உதாரணமாக ஒருகல உயிரினமான ஒரு பாக்டீரியா இருந்து பிரிந்துதான் இன்னொரு பாகாடீரியா உருவாகும்.


ஒரு அங்கமானது பல கலங்களால் ஆனது.


பல அங்கங்கள் சேர்ந்தது ஒரு உடலாகும்.


ஒரு உடல் அல்லது அங்கம் உயிருடன் இருப்பதற்கு சில அடிப்படை


சூழ்நிலைகள், 


தகைமைகள் தேவைப்படுகின்றன.


அதில் சில உதாரணங்களைப் பார்க்கலாம்.


1. மரம், செடி, கொடிகளின் விதைகள் உயிருடன் பாதுகாக்கப்படுகின்றன. விதை மரத்தின் ஒரு அங்கமாகும்.


2. மனித குருதி (இரத்தம்) குளிர்நிலையில் உயிருடன் பாதுகாக்கப் படுகின்றது. 


(குருதி உடலின் ஒரு அங்கமாகக் கொள்ளலாம்.)


3. தானமாகப் பெறப்படும் மனித அங்கங்கள் (கண்கள், இதயம்) உயிருடன் சேகரிக்கப்பட்டு தேவைப் படுபவர்களுக்குப் பாவிக்கப்  படுகின்றது.


இதிலிருந்து நாம் புரிந்துகொள்வது என்னவென்றால், 


ஒரு அங்கமானது (உடலின் பாகம்) உயிருடன் இருப்பதற்கு சில அடிப்படை சூழ்நிலைகள் தகைமைகள் தேவைப்படுகின்றன.


உயிருடன் இருக்கும் அங்கம் மீண்டும் தேவைப்படும்போது பாவிக்கப் படலாம். 


இதனை வேறு விதமாகக் கூறுவதானால் உயிர் இருக்கும் ஒரு அங்கம் (உடலின் பாகம்) அழியாது பாதுகாக்கப்பட்டு மீண்டும் தேவைப்படும்போது உபயோகிக்க முடியும்.


ஒரு மரத்தினை எடுப்போமானால் வேரில் இருந்து நுனி வரை உயிருள்ள அங்கங்களால் ஆக்கப்பட்டுள்ளது. 


அங்கு உயிரற்றுப் போகும் அங்கங்கள் (கலங்கள்) காய்ந்து சருகாக, காய்ந்த பட்டைகளாக உதிர்ந்து உக்கிப் போகும்


மரத்திலிருந்து கிடைக்கப்பெறும் உயிருள்ள விதையானது மீண்டும் ஒரு புதிய உயிருள்ள உடலை (மரத்தை) உருவாக்கும்.


இதில் கவனிக்கப்பட வேண்டிய இன்னொரு விடயம் என்னவென்றால் ஒரு இலை உருவாகி வளர்வதென்பது, 


உயிருள்ள குருத்திலுள்ள ஒருகலம் இன்னொரு கலத்தை உருவாக்கும். அதானால் குருத்து பெருத்து இலையாகும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் அந்தக் கலம் இறந்துபோகும்.


Comments

Popular posts from this blog

துஷ்ட சக்திகள் விலக Deliverance from the hold of evil spirits

தனது பக்தைக்காக ஶ்ரீலலிதா சஹஸ்ர நாம உச்சரிப்பை மாற்றிய அம்பாள்ச

பெண் குழந்தைகளுக்கு வைப்பதால் அதன் சிறப்பு).