எதற்கு ஶ்ரீலலிதா சஹஸ்ரநாம பாராயணம். தொடர்ந்து உடல்நலக் குறைபாடுகளால் அவதியுறும் அன்பர்கள், பிணிகளில் இருந்து விடுபட்டு தேக ஆரோக்கியம் பெறுவதற்கு என்ன வழிபாடு செய்யலாம்? அதற்கான தெய்வ ஸ்துதி என்ன? அம்பாளை மனமுருக வேண்டி வழிபடலாம். தாயினும் மேலாக நம் மீது கருணை பொழியும் ஜகன்மாதா அம்பிகை. அவளின் திருநாமங்களைச் சொல்லி வழிபட்டாலே இன்னல்கள் யாவும் நீங்கும். குறிப்பாக லலிதா சகஸ்ரநாமம் சொல்லி வழிபடலாம். இதன் மகிமையை அகத்தியருக்கு ஹயக்ரீவர் விளக்கியுள்ளார். இந்த ஆயிரம் நாமங்கள் ரகசியமானவையாகவும் தேவிக்கு மிகவும் பிரியமானவையாகவும் இருப்பதுடன், நோய்களைப் போக்குவதாகவும், நீண்ட ஆயுளைத் தருவதாகவும், மழலைச் செல்வம் இல்லாதவர்களுக்குக் குழந்தை பாக்கியம் அருள்வதாகவும் திகழ்கின்றன. அம்பாளின் ஆயிரம் நாமங்களில் ஏதேனும் ஒரு நாமாவைப் பக்தியுடனும் நம்பிக்கையுடனும் துதிப்பவர்களுக்குப் பாவங்கள் நீங்கும், கங்கை முதலிய புண்ணிய நதிகளில் நீராடிய புண்ணியம் வாய்க்கும். பௌர்ணமியன்று சந்திரனில் அம்பிகை இருப்பதாகப் பாவித்து, இந்த ஸ்தோத்திரத்தைப் பாராயணம் செய்தால், தீராத நோய்கள் நீங்கி நீண்ட ஆயுள் பெறலாம். ஜுரம் முதலியவற்றால் பீடிக்கப்பட்டவர்களின் தலையைத் தொட்டுக் கொண்டு பாராயணம் செய்தால், அந்தப் பிணிகள் நீங்கும். அதேபோல், விபூதியைத் தொட்டுக்கொண்டு பாராயணம் செய்து, அந்த விபூதியை இட்டுக் கொள்ள நோய்கள் நீங்கும். NANDRI: SAKTHI VIKATAN - ஷண்முக சிவாசார்யர்#
எதற்கு ஶ்ரீலலிதா சஹஸ்ரநாம பாராயணம்.
தொடர்ந்து உடல்நலக் குறைபாடுகளால் அவதியுறும் அன்பர்கள்,
பிணிகளில் இருந்து விடுபட்டு தேக ஆரோக்கியம் பெறுவதற்கு என்ன வழிபாடு செய்யலாம்?
அதற்கான தெய்வ ஸ்துதி என்ன?
அம்பாளை மனமுருக வேண்டி வழிபடலாம்.
தாயினும் மேலாக நம் மீது கருணை பொழியும் ஜகன்மாதா அம்பிகை. அவளின் திருநாமங்களைச் சொல்லி வழிபட்டாலே இன்னல்கள் யாவும் நீங்கும். குறிப்பாக லலிதா சகஸ்ரநாமம் சொல்லி வழிபடலாம்.
இதன் மகிமையை அகத்தியருக்கு ஹயக்ரீவர் விளக்கியுள்ளார்.
இந்த ஆயிரம் நாமங்கள் ரகசியமானவையாகவும் தேவிக்கு மிகவும் பிரியமானவையாகவும் இருப்பதுடன்,
நோய்களைப் போக்குவதாகவும்,
நீண்ட ஆயுளைத் தருவதாகவும், மழலைச் செல்வம் இல்லாதவர்களுக்குக் குழந்தை பாக்கியம் அருள்வதாகவும் திகழ்கின்றன.
அம்பாளின் ஆயிரம் நாமங்களில் ஏதேனும் ஒரு நாமாவைப் பக்தியுடனும் நம்பிக்கையுடனும் துதிப்பவர்களுக்குப் பாவங்கள் நீங்கும், கங்கை முதலிய புண்ணிய நதிகளில் நீராடிய புண்ணியம் வாய்க்கும்.
பௌர்ணமியன்று சந்திரனில் அம்பிகை இருப்பதாகப் பாவித்து, இந்த ஸ்தோத்திரத்தைப் பாராயணம் செய்தால்,
தீராத நோய்கள் நீங்கி நீண்ட ஆயுள் பெறலாம். ஜுரம் முதலியவற்றால் பீடிக்கப்பட்டவர்களின் தலையைத் தொட்டுக் கொண்டு பாராயணம் செய்தால், அந்தப் பிணிகள் நீங்கும். அதேபோல்,
விபூதியைத் தொட்டுக்கொண்டு பாராயணம் செய்து, அந்த விபூதியை இட்டுக் கொள்ள நோய்கள் நீங்கும்.
NANDRI: SAKTHI VIKATAN -
ஷண்முக சிவாசார்யர்#

Comments
Post a Comment