கருப்பு நிறம் காளி

 கருப்பு நிறம் காளியைக்


குறிக்கிறது என்றால்?. அவள் எவ்வாறு சாத்வீகமான தாயாகிறாள்.

காளி குணம் என்பது அவளுடைய கோரமான மற்றும் சாந்தமான இரண்டு தன்மைகளையும் குறிக்கிறது.


அவள் ஆக்ரோஷமான, அழிக்கும் சக்தி கொண்டவளாகவும், 


அதே சமயம் அருள் புரியும் தாயாகவும் கருதப்படுகிறாள்.


அது எவ்வாறு தமது குழந்தையான பக்தர்கள் துன்படும் போது அந்த லோக ஜனனியான தாயான அமாபாள் துன்பத்தை கொடுப்பவர்களை அழிப்பதற்கு உக்ரமான காளி ஆகிறாள்.


இதை தான் சங்கரபகவத்பாதாள் உக்ரமான தெய்வமான அப்பாளை சாந்தபடுத்துவதற்காக 


திருவானக்கா 


காஞ்சிபுரம்


திருவொற்றியூர் போன்ற தலங்களில் ஶ்ரீ சக்ரத்தை நிறுவி அம்பாளை சாந்தமாகிறார் என்று புராணங்கள் கூறுகிறது.


அவள் தாயானவள் அவள் நல்ல சேயுமானாள்.


அசுரனை அழித்த பிறகு அவளுடைய உக்கிரம் குறையாத போது, 


ஒரு குழந்தை வடிவில் இருந்த பசியால் அழுத சிவனின் மாயையால்,


தாயன்புடன் அணைத்து பாலூட்டி, அவள் சாந்தமானாள். 


அழிக்கும் குணம்: 


தீமைகளை அழிக்கும் சக்தி, அசுரர்களைக் கொல்வது போன்றவை காளியின் உக்கிரமான குணத்தைக் குறிக்கின்றன.


அவளுடைய கோரமான தோற்றம், இருள் மற்றும் குழப்பத்தைக் குறிக்கும் அதே வேளையில், 


அவை உண்மையான வெளிச்சத்தை நோக்கிய ஒரு குறியீடாகவும் பார்க்கப்படுகிறது.


அருள் புரியும் குணம்: 


காளி தாயாகவும், பக்தர்களின் துரதிர்ஷ்டங்களிலிருந்து பாதுகாப்பவராகவும் கருதப்படுகிறாள். 


அவள் பசியுடன் இருந்த குழந்தை வடிவில் இருந்த சிவனைக் கண்டபோது, அவளுக்குத் தாய்மை குணம் ஏற்பட்டு, சாந்தமானாள். அவளுடைய பற்கள் நன்மை மற்றும் தூய்மையைக் குறிக்கின்றன.


குறியீடுகள்:


சிவனுடைய மார்பில் நிற்பது: காளி சிவனின் மார்பின் மேல் நிற்பது, அவளுடைய ஆற்றல் மற்றும் அழிக்கும் மற்றும் படைக்கும் சக்தியின் சமநிலையைக் குறிக்கிறது.


சிவப்பு நாக்கு: 


காமத்தின் மீதான வெற்றியையும், இருளையும் குறிப்பதாகக் கருதப்படுகிறது.


சத்வ மற்றும் தமஸ் குணங்கள்:


 காளியின் உருவம் சத்வ (நன்மை மற்றும் தூய்மை) 


மற்றும் 


தமஸ் (இருள்) ஆகிய இரண்டு குணங்களையும் உள்ளடக்கியுள்ளது.


Comments

Popular posts from this blog

துஷ்ட சக்திகள் விலக Deliverance from the hold of evil spirits

தனது பக்தைக்காக ஶ்ரீலலிதா சஹஸ்ர நாம உச்சரிப்பை மாற்றிய அம்பாள்ச

பெண் குழந்தைகளுக்கு வைப்பதால் அதன் சிறப்பு).