எது உறவு?கவிஞரின் விளக்கம்.
எது உறவு?கவிஞரின் விளக்கம்.
பிறப்பால் தொடரும் உறவுகள் அல்லாமல்
பிணைப்பால் தொடரும் உறவுகளே உன்னதமானவை..
பிறப்பின் உறவுகள் பெற்ற தந்தையை பிச்சைக்கு அலையவிடும் மகன் இருக்கின்றான்.
கட்டிய தாரத்தையும் பட்டினி போடும் கணவன் இருக்கின்றான்.
தாயை தவிக்கவிட்டு தாரத்தின் பிடியில் லயித்துக் கிடக்கும் பிள்ளை இருக்கிறான்.
கூடப் பிறந்தவனே கோர்ட்டு படிக்கட்டுகளில் ஏறி எதிராக நிற்கிறான்.
சமூக மரபுகள் இவற்றை ஒழுக்கக்கேடாக கருதவில்லை.
அலுவலகத்தில்,
வேலை பார்க்கும் நேரத்தில்இருந்து விலகியதும் வேலை பார்த்த இடத்தை மறந்து விடுகிறோம்.
ஹோட்டலில் அறை எடுத்துக் கொண்டு தங்குவது போல் சில உறவுகள் சொந்த வீட்டில் வாழ்வது போல் சில உறவுகள்.
ஆயிரம் வாசல் இதயம் யாரோ வருகிறார்கள் யாரோ போகிறார்கள்..
வாழ்ந்தால் சிரிக்கிறார்கள்
வறண்டால் ஒதுங்குகிறார்கள்.
செத்தபின் ஒப்புக்காக அழுகிறார்கள்.
இரண்டு ஆத்மாக்கள் ஐக்கியமாகி ஓர் ஆத்மா தாக்கப்படும்போது,
இன்னொரு ஆத்மாவும் இயற்கையாகத் துடிக்கும் ..
அந்த உறவே புனிதமான உறவு.
பிறப்பில் சொந்தம் இருந்தாலும் சரி
இல்லாவிட்டாலும் சரி
அது மனிதன் ஆயினும் சரி,
நாய், பூனை ஆனாலும் சரி. எங்கே பந்தம்,
ஏற்றத்தாழ்வுகள் சேர்ந்து வருகிறதோ அங்கேதான் உறவு இருக்கிறது.
கண்ணீரைத் துடைக்கின்ற கைகள்,
காயத்துக்குக் கட்டுப் போடும் கைகள், வறுமையில் பங்கு கொள்ளும் உள்ளம்,
சோதனையில் கூடவே வரும் நட்பு..
உறவு பூர்த்தி ஆகி விடுகிறது.
படித்ததில் பிடித்தது.
கவியரசர் கண்ணதாசன்.
"அர்த்தமுள்ள இந்து மதத்தில்" இருந்து..

Comments
Post a Comment