ஆன்மீகம் என்பது என்ன?.
ஆன்மீகம் என்பது என்ன?.
ஆன்மீகம் என்பது ஆன்மாவை மேம்படுத்தல்.
ஆன்மாவை மேம்படுத்தல் என்பது இறைவனை நோக்கிய பயணமா?.
ஆன்மீகம் எதைப்பற்றி பேசுகிறது.
ஆன்மீகம் என்பது ஆன்மவைப் பற்றியது.
அதன் தன்மையைப் பற்றியது.
அதன் தன்மை படி நாம் வாழுகிறோமா என்பதைப் பற்றியது என டாக்டர் உ.வே. வெங்கடேசன் அழகாக தனது உபன்யாசத்தில் விளக்குகிறார்.
இது மூன்றும் உள்ளடக்கியதே ஆன்மீகம் என்கிறார்.
இதை சங்கரபகவத் பாதாள் வாழ்க்கையில் நடந்த சம்பவத்தின் மூலம் விளக்கலாம்.
பகவத்பாதாள் தனது சிஷ்யக்களுடன் கங்கை கரையில் ஸ்தானத்தை முடித்து வரும்வழியில் அவர்களுக்கு குறுக்கே ஒரு புலயையன் நாய்களுடன் வருகிறான்.
அந்த புலையனை பார்த்த ஶ்ரீசங்கர பகவத் பாதாள் அவரை விலகச் சொல்கிறார்.
அதற்கு அந்த புலையன் இந்த அழியும் தேகத்தை நகரச் சொல்லுகிறாயா
அல்லது
இந்த அழியாத ஆன்மாவை நகரச் சொல்கிறாயா என கேள்வி எழுப்புவார்.
மேலும் நீ எழுப்பிய கேள்வி உனது அத்வைத தத்துவத்திற்கு நேர் எதிரானது எனவும் சுட்டிக்காட்டுவார்.
நாம் ஞானத்தை யாரிடமிருந்தும் பெறலாம்,
தான் இன்னும் பக்குவபடவில்லை என உணர்ந்த பகவத் பாதாள் அவரது காலில் சாஷ்டங்கமாக விழுந்து வணங்குவார்.
எவ்வாறு ஔவையிடம் முருகன் சுட்டபழம் வேண்டுமா அல்லது சுடாத பழம் வேண்டுமா என வினாவியது போல்.
உடனே புலையனாக வந்த சிவப்பெருமான் அவர் முன் தோன்றி அவரை ஆசீர்வாதிப்பார்.
அப்பேர்ப்பட்ட ஆன்மீகத்தைப் பற்றிய பதிவை நாம் காணும் போது
நம்மை நாமே அளவிட்டுக் கொள்ளலாம்
நாமும் பக்குவபட்டு இருக்கிறோமா
அல்லது
இன்னும் பக்குவபட வேண்டுமா என்பதை அவரவர் உணரலாம்.
எனவே வரும்நாட்களில் அதைப்பற்றிய பதிவை காணலாம்.
அவற்றில் ஆன்மீகம் என்பது இவை மூன்றையும் உள்ளடக்கியது.
இது உடல் அல்ல உயிர் என்பதை உணரவேண்டும்.
அடுத்ததாக அந்த ஆன்மாவின் தன்மை என்ன.
அந்த ஆன்மாவின் தன்மைக்கு ஏற்ப நமது வாழ்க்கையில் நாம் வாழ்க்கையில் கடைபிடிக்கிறோமா .
இவை மூன்றுயும் உள்ளடக்கியதே ஆன்மீகம் அதைப்பற்றி விரைவில் விரிவான பதிவாக காணலாம்.
#ஜெயஜெயசங்கரஹரஹரசங்கர

Comments
Post a Comment