சங்கரன்கோவில்கோமதியம்மனுக்கு
#சங்கரன்கோவில்கோமதியம்மனுக்கு
திருவண்ணாமலை உண்ணாமலை அம்மனுக்கு உள்ள ஓற்றுமை.
ஒன்று ஹரியும் ஹரனும் என்பதை உணர்த்த #சங்கரநாராயணன்
கோமதியம்மன் ஆடி தபசு(தவம்)
மற்றொன்று
அம்மனும் அப்பனும் ஒன்றே என்பதை உணர்த்த #அர்த்தநாரீஸ்வரர்#
உண்ணாமலையம்மன் கார்த்திகை தவம்.
ஆடி தபசு என்பது ஆடி மாதத்தில்,
சங்கரன்கோவிலில் உள்ள கோமதியம்மன்,
சங்கர நாராயணருக்காக தவம் செய்த நிகழ்வைக் குறிக்கும் ஒரு திருவிழா ஆகும்.
இந்தக் கடுமையான தவத்தின் முடிவில்,
சங்கரநாராயணர் அம்மனுக்குக் காட்சி தந்ததாகப் புராணங்கள் கூறுகின்றன.
இந்த விழாவின் முக்கிய நோக்கம்,
சிவனும் விஷ்ணுவும் ஒன்றே என்பதை உணர்த்தும் சங்கரநாராயணராக காட்சியளித்த நிகழ்வைக் கொண்டாடுவதாகும்.
#அதுபோல்திருவண்ணாமலையில்
ஈசனின் இடப்பாகம் பெற்ற உண்ணாமுலை அம்பாள்.
பார்வதி தேவி சிவபெருமான் தேகத்தில் பாதியைப் பெற்று அர்த்தநாரியாக வரம் வேண்டினார்.
சிவபெருமானின் வழிகாட்டுதலின் படி காஞ்சிபுரம் வந்து அங்கு மணலால் ஒரு லிங்கம் அமைத்து தவம் இருந்தாள்.
பின்னர், அக்னி ஸ்தம்பமாக சிவபெருமான் காட்சி கொடுத்த திருவண்ணாமலையில் கெளதம ரிஷியின் ஆச்ரமத்துக்கு வந்தாள்.
மலை வடிவமாக லிங்கம் காட்சிதரும் திருவண்ணாமலையில் தவத்தை தொடருமாறு முனிவர் கூற தேவியும் தனது தவத்தை தொடர்ந்தாள்.
அங்குதான் மகாவிஷ்ணுவுக்கும், பிரம்மாவுக்கும் அக்னி ஸ்வரூபமாக சிவபெருமான் காட்சி கொடுத்து, தனது இடதுபாகத்தை அன்னைக்கு அளித்தார்.
திருவண்ணாமலையில் திருக்கார்த்திகை நாளில் அர்த்தநாரீச்வரராக சிவபெருமான் எழுந்தருள்வதையும்,
தொடர்ந்து மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றப்படுவதையும் இப்போதும் நாம் தரிசிக்கிறோம்.
எல்லாம் ஒன்றில் அடக்கம் என்பதை நாளை பதிவாக காணலாம்.
#ஓம்சங்கரநாராயணாயநமஹ#
#ஓம்அர்த்தநாதீஸாவராயநமஹ#.

Comments
Post a Comment