#செங்கண்மால்திருத்தங்கச்சியே")

 நேற்றைய பதிவின் நோக்கம்


#செங்கண்மால்திருத்தங்கச்சியே") 



அனைத்தும் பரம் பொருளே என்று கண்டோம்.


அது எவ்வாறு என்பதை காண்போம்.


அது அப்பனாக இருக்கலாம் அல்லது ஹரியாக இருக்கலாம்.


எல்லாம் ஒன்றில் அடக்கம்.


அது தாயாகிய லோகஜனனி.


அதை உணர்த்தவே திருவண்ணாமலையில் அர்த்தநாரீஸ்வராக இடப்பாகத்தை அம்பாளுக்கு அளித்தார்.


அதே இடப்பாகத்தை சங்கரன் கோவிலில் நாரயணனுக்கு அளித்தார்.


காரணம் அம்பாள் வேறு,


நாராயணண் வேறு இல்லை.


இரண்டு ஒன்றே என்பதை தான்

பட்டர் திருமாள் திருதங்கச்சியே என்றார்.


#திருமால்திருத்தங்கச்சியே" என்பது அபிராமி அந்தாதி பாடலில் வரும் 


ஒரு வரி ("செங்கண் மால் திருத்தங்கச்சியே"), 


இது உலகைக் காக்கும் திருமாலின் சகோதரியான பார்வதி தேவியைக் குறிக்கிறது, இமவான் மகளான அம்பிகையை "திருமாலின் தங்கையே" என்று அபிராமி பட்டர் போற்றிப் பாடியுள்ளார்.


பொருள்:


சிவந்த கண்களையுடைய திருமாலின் தங்கையே.


விளக்கம்: 


உலகைக் காக்கும் கடமையில் எப்போதும் விழித்திருப்பதால் திருமாலின் கண்கள் சிவந்திருக்கும்,


அந்த மகாவிஷ்ணுவின் சகோதரியான பார்வதி தேவியே என்று அபிராமி பட்டர், அபிராமி அன்னையை அழைக்கிறார்.


சூழல்: 


அபிராமி அந்தாதி 61-ஆம் பாடலில், "நாயேனையும் இங்கொரு பொருட்டாக மதித்து விரும்பி ஏற்றுக் கொண்டது" 


என்று தொடங்கும் பாடலில் 


இந்த வரியைக் காணலாம், இது அம்பிகையின் கருணையைக் குறிக்கிறது. 


அது நாமசாம்யம்


நாராயணன் நாராயணியாக கேரளாவில் சோட்டாணிகரையில் அம்பாள் எழுந்தருளியுள்ளார்.


இங்கு நாராயணி என்பது அம்பாளை கூறிக்குமே தவிர தாயரை குறிக்காது.


அவளே விஷ்ணு துர்க்கையாக உள்ளவர்.


இதை உணர்த்தவே கிருஷ்ணா அவதாரத்தில் காளியாக உருவெடுத்து கம்சனிடம் உன்னை கொல்வதற்கு கிருஷ்ணணாக அவதாரம் எடுத்து கோகுலத்தில் வளர்கிறான் என்று சொல்லி மறைவாள்.


காளியும் கரிய நிறம் கிருஷ்ணணும் கரியநிறம்.


கரிய நிறம் என்பது தர்மம் தவறும் போது தெய்வங்கள் அவதாரம் எடுத்து தர்மத்தை நிலைநாட்டுவது.


தாமசம் கறுப்பு நிறத்தினையும் குறிக்கும் என்பர்.


எனவே எல்லாம் ஒன்றில் அடக்கம்.


காரணம் பரம்பொருளிலிருந்து தான் அனைத்தும் வெளிப்பட்டது.


யார் யார்க்கு எந்த எந்த தெய்வமோ அந்த தெய்வத்தை சரணாகதி அடைந்து.


நாம் மேம்பெறுவோம் என்பதே இந்த பதிவின் நோக்கம்.


#ஓம்ஶ்ரீகாளியாயநமஹ#

#ஓம்ஶ்ரீகிருஷ்ணாயநமஹ#

Comments

Popular posts from this blog

துஷ்ட சக்திகள் விலக Deliverance from the hold of evil spirits

தனது பக்தைக்காக ஶ்ரீலலிதா சஹஸ்ர நாம உச்சரிப்பை மாற்றிய அம்பாள்ச

பெண் குழந்தைகளுக்கு வைப்பதால் அதன் சிறப்பு).