சகலுமும் கிருஷ்ர்ணர்ப்பம்
இங்கு சகலத்திலும் பகவன் வியாபித்து இருக்கிறான்.
இதை தான் அர்ஜீனனுக்கு கீதை உபதேசம் செய்யும் போது இவ்வாறு கூறுகிறார்.
போர் புரிய மனம் வராமல் திகைத்துத் தன்னைச் சரணடைந்த அர்ஜுனனை
நோக்கிக் கண்ணன் உரைக்கின்றான்:-
“அர்ஜுனா,
நீ வருந்துவது முற்றிலும் தவறு.
எதிரிகளின் ஆன்மாவைப் பற்றி வருந்துகின்றாயா?
அல்லது
அவர்களின் உடலைப் பற்றி வருந்துகின்றாயா
இரண்டும் சரியல்ல.
ஆன்மா என்றும் அழிவற்றது.
அதைக் கத்தியால் வெட்டவும், தீயினால் எரிக்கவும் முடியாது.
உடலோ அழியும் இயல்பு வாய்ந்தது.
நீ அழிக்காவிடினும் அது தானே அழிய வேண்டியதுதான்.
ஆன்மாவுக்கு ஓருடல் அழிந்ததும்,
மற்றோருடல் தானே வந்து சேரும்.
ஆன்மாவின் இயற்கையை எண்ணி உனக்கு ஏற்படுத்தப்பட்ட செயல்களை நீ செய்தே தீரவேண்டும்.
அச்செயல்களைச் செய்யுங்கால்,
நாம் செய்ய வேண்டியதைச் செய்கிறோம்.
அதுவும் ஈசுவரப் பிரீதிக்காகவே என்று எண்ணிச் செய்.
இதனால் ஆத்மஞானம் பெருகி,
அதில் நிலைபெற்று நற்கதி அடைவாய்.
ஈசுவர பிரீதியைத் தவிர மற்ற பலனைக் கோரினால் சம்சாரக்கட்டிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள முடியாது.
இங்கு சகலும்
நானே என்னில்
அனைத்தும் அடக்கம்.
படைப்பவன் நானே
காப்பவன் நானே
அழிப்பவன் நானே
மன்னனும் நானே,
மக்களும் நானே,
சொன்னவன் கண்ணன்,
சொல்பவன் கண்ணன்,
துணிந்து நில் தர்மம் வாழ;
புண்ணியம் இதுவென்று
உலகம் சொன்னால்
அப்புண்ணியம் கண்ணனுக்கே,
போற்றுவார் போற்றலும்
தூற்றுவார் தூற்றலும்
போகட்டும் கண்ணனுக்கே;
கண்ணனே காட்டினான்,
கண்ணனே தாக்கினான்,
கண்ணனே கொலை செய்கின்றான்;
காண்டீபம் எழுக -
கைவண்ணம் எழுக,
இக்களமெல்லாம் சிவக்க -
வாழ்க''.
சகலுமும் கிருஷ்ர்ணர்ப்பம்
என்பதன் உட்பொருள் அது தான்.
கர்மாவே நம்மை எங்கு பிறக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கிறது.
இங்கு பிறந்த மனிட பிறவியில் நல்கர்மாவை சேர்த்து இறைவனை சரணாகதி அடைந்து நற்கதி பெறுவாயாக.


Comments
Post a Comment