#அபிராமிஅந்தாதிபாடல் -30#

 #அபிராமிஅந்தாதிபாடல் -30#


பலன்: 


தொடரும் துன்பம் நீங்கும்


அன்றே தடுத்து 


என்னை ஆண்டு கொண்டாய்,


கொண்டது அல்ல 


என்கை


நன்றே, உனக்கு? 


இனி நான் 


என் செயினும், 


நடுக்கடலுள்


சென்றே விழினும், 


கரை ஏற்றுகை நின் திருவுளமோ


ஒன்றே, 


பல உருவே, 


அருவே என் உமையவளே.


பொருள்:


அன்னையே, 


என்னை அன்றொரு நாளே, 


நான் பாவங்கள் செய்வதற்கு முன்பே, 


தடுத்து ஆட்கொண்டாய். 


அவ்வாறு செய்யவில்லை என்றால் அது உனக்கு நல்லதாகாது.


ஏனென்றால், 


கருணையே உருவான உமையவள் நீ. 


இனி நான் என்ன செய்தாலும் சரி,


பாவங்கள் செய்து நடுக்கடலில் வீழ்ந்தாலும், 


என்னை கரை எற்ற வேண்டியது உன் திருவுள்ளத்தின் பொறுப்பு. 


ஒரு உருவமாகவும், 


அவளே ஆதிபராசக்தி


பல உருவமாகவும், 


அதிலிருந்து தோன்றிய


பிரம்மா/விஷ்ணு/சிவன்


சரஸ்வதி/லெக்ஷ்மி/பார்வதி


இவை அனைத்தும் நீ


உருவமே இல்லாமலும் 


லிங்கமும் ஆவுடையுமான அர்த்தநாரீஸ்வரர் தத்துவம்


காட்சி அளிக்கும் அன்னையே 


அனைத்துமும் நீ


என பட்டர் அம்மையை நோக்கி தன்னை ஆட்கொள்ளுமாறு கோரிக்கை வைக்கிறார்.


அபிராமி அன்னையே


 என்னை காத்தருள்வாயாக.


Comments

Popular posts from this blog

துஷ்ட சக்திகள் விலக Deliverance from the hold of evil spirits

தனது பக்தைக்காக ஶ்ரீலலிதா சஹஸ்ர நாம உச்சரிப்பை மாற்றிய அம்பாள்ச

பெண் குழந்தைகளுக்கு வைப்பதால் அதன் சிறப்பு).