கர்மா பற்றி எனது ஜோதிட நண்பரின் அனுபவ பதிவு
கர்மா பற்றி எனது ஜோதிட நண்பர்
சதீஸ்குமாரின் அவர்களின் பதிவு.
இதில் அவரவர் தனது அனுபவத்தை பதிவாக பதிவிடுகின்றனர்.
கர்மா என்றால் என்ன,,என்று நண்பர் ஒருவர் கேட்டிருந்தார்,,,
பிராப்த கர்மா
சஞ்சிதா கர்மா,,
போன ஜென்ம கர்மா
இந்த ஜென்ம கர்மா,,,
அடுத்த ஜென்ம கர்மா,,
இப்படி நிறைய சொல்லலாம்,,
ஏனென்றால் நாம் போன ஜென்மத்துலயும்,,,,
அடுத்த ஜென்மத்துலயும்,,,
என்ன செஞ்சோம் செய்ய போறோம் நமக்கே தெரியாது,,
ஆக கர்மா பத்தி எதுவாகவும் இருந்துவிட்டு போகட்டும்,,,,,,
மனித பிறவி எடுத்தால் தப்பு செய்யாமல் வாழ முடியாது என்றே ஆகிவிட்டது,,,
பிறவி பெருங்கடல் நீந்தி அடுத்து என்ன பிறவி எடுக்க போறோமோ தெரியாது,,,,
ஆனால் மனித பிறவி அரிய பிறவி அந்த பிறவியிலும் நாம் தவறு செய்து கர்மாவை அனுபவிக்கிறோம் என்பதே உண்மை,,,
,ஜோதிடத்தில் கூட 5ஆம் வீடு
பூர்வ புண்ணியம் என்று சொல்வோம் அது கூட பலருக்கும் கெட்டு தான் இருக்கு,,அது போகட்டும்,,,
.கர்மா என்றால் நோய் தான்,
,நமது ,கர்மவினை தான் நோய் பிறப்பு அல்லவா,,
வேறொன்றுமில்லை
சனி கர்மா காரஹன்,
சனி என்றால்
pain வலி,
தண்டனை,,
நம் உறவில் ஏற்படும் துக்கம்,
நோய் ,
இருட்டு குகை
பாதாளம்,,
சிறை,,
நாம் என்ன செய்கிறோமோ அது தான் கர்மவாக மாறுகிறது,,
மரம் செடி வெட்டுபவர்களுக்கு கடுமையான மூட்டு வலி,,
கனியாகாத பழத்தை காயாக பரித்தால்,,
மற்றும்
பசுவின் கன்றுக்கு பால் இல்லாமல் மொத்தத்தையும் கறந்தால்
குழந்தை கரு சார்ந்த நோய்,,,
பொய் பேசுபவர்கள்
புறம் பேசுவார்கள்
மார்பு கட்டி நாக்கு புண்,,புற்றுநோய்,
90வகையான கண் நோய்,,
பிறர் குடி கெடுத்தவர்களுக்கு
தொழுநோய்,
நீர் வாழ் உயிரை நிலத்தில் இட்டு வதைத்தல்,,
ஊர்வன நடப்பன
அவைகளை வழிமறித்து இடயூர் செய்வது,,
பறவைகளை கவட்டை கொண்டு கல் வீசுவது,,,
அதிகம் மது குடிப்பது,,,
.
நேர காலம் தவறி
நடு ஜாமாதில் உண்பது,,,
யோகிகளையும் பெரியோர்களையும் அவமதிப்பது,,,
தன் வலிமையை நாமே சோதித்தல்,,,
தன்னை தாழ்வு மனபாண்மைக்கு உட்படுத்துவது,,
போன்றவைகள்
கடுமையான விஷகாய்ச்சல்,,
, மூலம் வியாதி,,,
முடக்கு நோய் தொழுநோய்,,,..
சர்க்கரை நோய்,,ஆஸ்துமா,,,சிறுநீரக கோளாறு,,காமலை,
போன்ற நோய்களை உருவாக்கும்,,,
இதை நான் கூறவில்லை,,
ஊர்வசி ரசவாத சிட்கா நூல் மற்றும் அகத்தியரின் கர்மா காண்டம் 300 ம் சொல்கிறது,,,
அது போகட்டும்,,,
ஜோதிடப்படி
ஒரு கிரகம் நம் ஜாதகத்தில் எப்படி பிரச்சனை கொடுக்கும் என்றால்
அகம் சார்ந்த பிரச்சனை
அல்லது
புறம் சார்ந்த பிரச்சனை,,, கொடுக்கும்,,
அகம் என்றால் உடல் மனம் கெடுதல்,,,
புறம் என்றால் சேர்த்து வைத்த பொருள் சேர்த்து வைத்த கெளரவம் கெடுதல்,,,
(உசுருக்கு வந்தது பொருளோடு போனது என்று சொல்வோம் )
சிலருக்கு வழக்கு( சனி )சிலருக்கு நோய் (சனி )இப்படி அகம் புறம்,,,
அதுக்குத்தான் சனியின் காரக பவாகம் 6,8,10,12என்று சொல்லி இருக்கிறார்கள்,,
6ல்நோய் எதிரி கடன் அடிமை வேலை,,
8ல்வழக்கு விபத்து மருந்து செலவு,,
12ல்விரயம் படுக்கை பக்கவாதம்,, மூப்பு,,
10ல் நம் தொழில்,, நாம் என்ன தொழில் செஞ்சாலும் கர்மா தான்,,,
நாம் ஆசிரியராக இருந்தாலும் நர்சிங் டாக்டர் ஆக இருந்தாலும்,,
போலீஸ் மிலிட்டரி என்றாலும் ஜோசியர் என்றாலும்,,,
பூசாரி என்றாலும்
கொத்தனார் என்றாலும்,,
குவாரி உடைப்பவன் என்றாலும்
ஆடு மாடு கொல்லும் கொலை தொழில் என்றாலும்
கர்மா தான்,,,
ஏன் இந்த கர்மா நமக்கு குடும்பம் ஒன்னு இருக்கே
அப்போ கர்மா வில் உழன்று தான் சம்பாதிக்க முடியும்,,,
இதுக்கு தான் சித்தர்கள் ஞானிகள் குடும்பம் வேண்டாம் என்று
சன்யாசம் தேடி கொண்டனரோ என்றெல்லாம் தோன்றுகிறது,,,
நம் வாயும் நம் வாயால் உண்ணும் உணவும் கர்மா தான்,,
அதனால் தான் பல வருடம் உண்ணாமல்
தவத்தில் இருந்தார்களோ சித்தர்கள் என்றும் எண்ண தோன்றுகிறது,,
எதனால் கெட்டோம்
வாயால கெட்டோம்,,
நுணலும் தன் வாயால் கெடும் பழமொழிக்கு ஏற்ப,,,
எதாவது பேசி அதனால் பின்னாடி பிரச்சனை ஆகி நிற்கும்,,,
வார்த்தைய அளந்து பேசு
பின்னாடி நீதான் கஷ்டபடுவ
என்று நாமே பிறரிடம் சொல்வோம் தானே,,,
உணவும் பசியும் ருசியும் அப்படியே,,
நம் உணவு கூட கர்மா தான்,,
இது தீங்கு என்று தெரிந்தும் நாம் உண்கிறோம்,,
அதனால கூட பின் விளைவு வருது தானே,,
இதுவும் கர்மா தான்,,
மருந்து சாப்பிட்டா கூட கர்மா தான்,,
அதில் பின் விளைவு பக்க விளைவு இருக்கே
இந்த விளைவு தான் கர்மா என்று எண்ணுகிறேன்,,
ஏனென்றால் ஜோதிடத்தில் ராகுவும் கர்மாகாரகன் தான்,,,
ஆசை
பேராசை
உணவு
வாக்கு
மருந்து குறிப்பவர்,,,,
அவர் காலனின் 2இல் உச்சம்,,
விருந்தும் மருந்தும் 3நாளைக்கு பழமொழி,,
ஆனால் நாம் வருடம் கணக்கில் மருந்து உன்கிறோம்,,
அதுவும் கர்மா தானே,,
,அதுவே பின்விளைவு தான்,,
நாம் இப்பவும்
நாம் பிறந்தது
நாம் வாழ்வதற்கே
நாம் Enjoy பண்ன்னுவதற்கே என்று சொல்லி தேற்றி கொண்டு வாழ்க்கையை வாழ தொடங்குவோம் என்ன செய்வது,,,
கர்மா என்றால் என்ன இன்னும் தேடுவோம் தேடிக்கொண்டே இருப்போம்
அதில் திருப்தி கிடைக்காது,,,
இது என்னோட கோணத்தில் சொல்கிறேன்,,
இதை ஏற்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை,,,
கர்மா என்பதை பற்றி
பலரும் பல விதமாக உணர்ந்து வைத்திருப்பார்கள்,,,,
ஓம் நமசிவாய நம
சதீஸ்குமார்

Comments
Post a Comment