கர்மா

 சில சில விஷயங்கள் ஏன் நடக்கிறது என்ற கேள்விக்கான பதில்.

இதை நாள்வரை புரியாமல் இருந்தது தற்போது அதைப்பற்றி பதிவை பதிவிட்டு வருகிறேன் .

அதற்கு காரணம் கர்மா


என்பதே ஆகும் .

கர்மா பற்றியும் பல விஷயங்களை பதிவிட்டு வருகிறேன்.

தினசரி அம்பாளுக்கும் ,மேருவிற்கும் லலிதா சஹஸ்ரநாமம், சௌந்தர்ய லஹரி ,  அபிராமி அந்தாதி மற்றும் தேவிகட்கமாலா பாராயணம் செய்வது வழக்கம்.

அவ்வாறு நேற்று பூஜை செய்துக் கொண்டு இருக்கும் போது , எனது மச்சினியும் ஷெட்டகரும் கேத்தாரிநாத் முக்திநாத் மற்றும் கைலாஷ் யாத்திரை முடித்து, இன்று எனது வீட்டிற்கு வருகை தந்தனர்.

அவர்கள் வரும் சமயம் ஆராத்தி காட்டிக்கொண்டு இருந்தேன். அவர்கள் உள்ளே நுழைவதற்கும் கற்பூர ஆராத்தி எடுத்துச் செல்வதற்கும் சரியாக இருந்தது.

அவர்கள் வந்த பிறகு தான் தெரிந்தது 

அவர்கள் சாலகிரமம் , முக்திநாத் மற்றும் மானசரோவர்  தீர்த்தங்கள் மற்றும் மானசரோவரில் எடுத்த புனித  கல்லை  கொடுப்பதற்காக வந்துள்ளனர் என்று தெரிந்தது.

பூஜை முடித்து கற்பூர ஹாரத்தி போது இவை கிடைக்கப்பெற்றேன்.

பூஜை செய்த போது இவைகள் கிடைக்கப்பெற்றது, நான் செய்த பாக்கியம் என கருதுகிறேன்.

அம்பாளை இடைவிடாது அவளது சரணாரவிந்ததை பிடித்ததால்,இந்த பாக்கியம் கிடைத்தது என்பதை உணர முடிகிறது.

எல்லாம் அவள் செயல்.

#ஓம்ஶ்ரீமாத்ரேநமஹ#.

Comments

Popular posts from this blog

துஷ்ட சக்திகள் விலக Deliverance from the hold of evil spirits

தனது பக்தைக்காக ஶ்ரீலலிதா சஹஸ்ர நாம உச்சரிப்பை மாற்றிய அம்பாள்ச

பெண் குழந்தைகளுக்கு வைப்பதால் அதன் சிறப்பு).