#அபிராமிஅந்தாதிபாடல்# - 33

 #அபிராமிஅந்தாதிபாடல்# - 33



இறக்கும் தருவாயிலும் நல்ல நினைவிருக்கும்


இழைக்கும் வினைவழியே,


அடும்காலன் 


எனை நடுங்க 


அழைக்கும் பொழுது  


அஞ்சல் என்பாய், 


அத்தர் சித்தமெல்லாம்


குழைக்கும் களப 


குவிமுலையாமளை 


கோமளமே


உழைக்கும் பொழுது 


உன்னையே அன்னையே 


என்பன் ஓடிவந்தே 


அத்தர் - சிவபெருமான்.


சிவபெருமானின் சித்தம் அனைத்தையும் தன்வயத்தில் வைத்திருக்கும், 


சித்தம் எல்லாம் சிவமயமே,


அம்பாளின் சித்ததில் இருப்பவர் சிவப்பெருமான்.


கொங்கை மலை கொண்டிறைவர் வலியநெஞ்சை, 


நடங்கொண்ட கொள்கை நலங்கொண்ட நாயகி" (42) என்பர் 


பின்; 


“பாகனகங்குழை வித்த பவித்ர பயோதரி" (தக்க, 74). 


யாமளைக் கோமளம்:


 “கோமள யாமளைக் கொம்பு” (7).


கோமளம்-மெல்லியல், 'கோமலாகாரா',கோமலாங்கி' 


(லலிதா, 437, 721),


அன்னையே என்பதனோடு சரணம் என்று ஒரு சொல்லை வருவித்து முடிக்க.


அன்னையின் அழகை வர்ணிக்கிறார் பட்டர்.


சந்தனக் குவியல் போன்ற முலைகளை கொண்டிருக்கும் அழகிய இளைய பெண்ணே,


நான் செய்த தீவினையால், 


கர்மா என்பதை தீவினை என்கிறார்.


என் இறுதி காலத்தில், 


கொடிய எமன் என்னை துன்புறுத்தும் போது, 


எனக்கு அச்சம் உண்டாகும் போது,


இதை தான் முண்டாசு கவி பாரதி


காலா, 


என் காலருகே வாடா, 


உன்னை என் காலால் மிதிப்பேன் "என்றான் பாரதி. 


காரணம் அவன் ஒரு 


சக்தி தாசன் 


அம்பாள் உபாசகன் 


சுதேச மித்ரன் பத்திரிகையில் வேளைச் செய்த பொழுது,


தினசரி தம்பு செட்டி தெருவில் வீற்றிருக்கும் காளிம்பாளை வணங்குவதை வழக்கமாக கொண்டவர் பாரதி.


அன்னையான உன்னை அழைப்பேன். 


என்கிறார் பட்டர்.


அம்பாளை உபசானை செய்பவர்களுக்கு யம பயம் இல்லை என்கிறார்கள் பட்டரும் பாரதியும்.


காரணம் அவர்கள் அம்பாளின் திருவடியை இருக்க பற்றியவர்கள் அதனால் அவர்களுக்கு எம பயம் இல்லை.


இதை தான் இங்கு திரும்பவும் குறிப்பிடுகிறார் பட்டர்


(அன்றே தடுத்து என்னை ஆண்டு கொண்டாய்! 


கொண்டது அல்ல 


என்கை


நன்றே உனக்கு? 


இனி நான் 


என் செய்யினும், 

நடுக்கடலுள்

சென்றே வீழினும், 


கரை ஏற்றுகை நின் திருவுளமே!


ஒன்றே, 


பல உருவே, 


அருவே, 


என் உமையவளே!


ஓர் உருவமாகவும், பல உருவமாகவும், அருவமாகவும் திகழும் உமை அன்னையே! 


என்னை நீ என்றோ தடுத்து ஆடக்கொண்டு விட்டாய். 


அதனை மறப்பது உனக்கு நன்றாகுமா? 


இனி நான் என்ன பிழை செய்தாலும் பொறுப்பதும், 


கடலின் நடுவே சென்று நான் வீழ்ந்தாலும் என்னைக் கரை ஏற்றுவதும் உன் கடமையே!)


அப்போது, 


நீ "அஞ்சேல்" என்று ஓடிவந்து அருள் செய்வாய்.


இறைவனின் பாதங்களை பற்றியவர்களுக்கு எமபயம் இல்லை என்கிறார் பட்டர்.

Comments

Popular posts from this blog

துஷ்ட சக்திகள் விலக Deliverance from the hold of evil spirits

தனது பக்தைக்காக ஶ்ரீலலிதா சஹஸ்ர நாம உச்சரிப்பை மாற்றிய அம்பாள்ச

பெண் குழந்தைகளுக்கு வைப்பதால் அதன் சிறப்பு).