கோவிலைநிர்மாணிப்பதற்கான மேலாண்மைகொள்கை#.
முப்பாட்டன் இராஜராஜன் மற்றும் இராஜேந்திர சோழன் ஏன் கோவிலை மையமாக வைத்து நகரத்தை அமைத்தான்?.
#கோவிலைநிர்மாணிப்பதற்கான மேலாண்மைகொள்கை#.
#ManagementPrincipleconstructingKovil.
மன்னன் கோயில் கட்ட ஆரம்பித்தவுடன்,
கட்டுமான பணிக்கு
அந்த ஊரை சுற்றி உள்ள
கட்டுமான கலைஞர்கள்,
சிற்ப கலைஞர்கள்,
கல் தச்சர்கள்,
கட்டுமான பொருட்களான செங்கல்,
சுண்ணாம்பு போன்றவற்றை உற்பத்தி செய்வோர்,
அதை ஓரிடத்தில் இருந்து கோயில் கட்டும் இடத்திற்கு கொண்டு செல்லும் போக்குவரத்து,
வர்ணம் அடிக்க,
ஓவிய கலைஞர்கள்,
இப்படி அனைவருக்கும் வேலை வாய்ப்பு,
அதுவும் அரசரால் கொடுக்கப்படும், அரசு வேலை.
கோவிலுக்கு மானியமாக கொடுக்கப்படும் நிலங்கள்,
குத்தகை மூலமாக விவசாயிகளுக்கு விடப்பட்டு…
அதன் மூலம் விவசாய உற்பத்தி, அதற்கு ஒரு சமூகம்,
பண்டம் மாற்று முறையில், தன்னிறைவு பெற்ற பொருளாதாரம்.
கோவிலுக்கு கொடுக்கப்பட்ட பசுமாடுகள்,
அதை கவனித்தல், அதற்கு ஒரு சமூகம்…
இதனால் கோயிலுக்கும் அந்த கிராமத்தாருக்கும் பால் சார்ந்த பொருட்கள்.
நைவேத்தியம் சமைக்க சமையல் கலைஞர்கள்.
அதற்கு ஒரு சமூகம்.
சமையல் செய்ய பாத்திரங்கள் செய்ய மண்பானை செய்வோர் மற்றும் உலோக பாத்திரம் செய்வோர், அதற்கு ஒரு சமூகம்.
அவர்களுக்கு தொடர்ந்து வேலை.
நந்தவனம் மூலம் தெய்வத்திற்கு பூ மாலை மற்றும் அலங்கார சேவை செய்ய நந்தவனம் காப்போருக்கு வேலை.
அதற்கு ஒரு சமூகம்.
அவருக்கு தொடர்ந்து வேலை இருக்க,
அதற்கேற்ப கோவில் உற்சவங்கள்.
மங்கள இசை இசைக்கும் கலைஞர்கள் ஓர் சமூகம்.
கூத்து கலைஞர்கள் என,
அவர்களுக்கும் வருட மானியம் மற்றும் வேலை.
மாலை வேளைகளில் ஆன்மீக கச்சேரி என்று மனதிற்கு இனிய பொழுது போக்கு நிகழ்ச்சிகள்.
தெய்வத்தின் வஸ்திரங்கள் நெய்ய ஒரு சமூகம்.
அந்த வஸ்திரங்களை துவைக்க ஓரு சமூகம்,
அவருக்கும் தொடர்ந்து கோவில் மானியம் மூலம் வேலை.
கோயிலை சுத்தமாக வைத்துக்கொள்ள ஒரு தேவை,
அதை செய்ய ஒரு சமூகம். அவருக்கும் கோயில் மூலம் மானியம், வருட வருமானம்.
இவை அனைத்தையும் நிர்வாகம் செய்ய, கணக்கு பார்க்க, ஒரு சமூகம்.
இவர்கள் அனைவரும் அவரவர் வேலையை பார்க்க,
அதன் மூலம் வாழ்வாதாரம் பெறவும்… கோயில் ஒரு மிகப்பெரிய தொழிற்சாலை போல் இயங்கியது.
The temple operated like a huge factory.
ஆன்மீகம் ஒட்டிய வாழ்வாதாரம்.
பெரு வெள்ளம் வந்து ஊரே மூழ்கி போனாலும்,
கோயிலின் கோபுரத்தில்,
கலசம் மூலம்,
செறிந்த விஞ்ஞான அறிவுடன்,
அதனுள் 12 வருடம் வரை கெடாத அந்த கிராமத்தில் மண்ணுக்கேற்ப விளையும் விளை பொருட்களின் விதை பொருட்கள்.
12 வருடத்திற்கு ஒரு முறை அதை மாற்றி அமைத்து,
மராமத்து பணிகள் மேற்கொள்ள மேற் சொன்ன அனைவருக்கும் ஒரு கூட்டு வேலை வாய்ப்பு.
இப்படி அவர் அவருக்கு தெரிந்த பணி, அதை சார்ந்த சமூகம்,
ஓன்றிணைந்து தன்னையும் காப்பாற்றிக்கொண்டு…
தன்னிறைவு வாழ்க்கை என வாழ்வதற்கு கட்டமைக்கப்பட்டதே,
அதுவே அந்த காலத்து #தற்சார்புவாழ்க்கை#
நம் கோயில்கள்..!
ஊருக்கு ஒரு கோயில்,
அதை சுற்றிலும் அனைத்து சமூகம், அந்த அந்த ஊரை சுற்றி உள்ள இயற்கை வளங்கள் பாதுகாக்கபட்டு,
மூலிகை மூலம் வைத்தியம்,
அதற்க்கென ஒரு சமூகம்.
இவ்வாறு… ஊரை சுற்றியே,
ஓர் தன்னிறைவு வாழ்க்கை.
🔥இப்படி அமைக்கப்பட்டது தான் நம் பொருளாதார கட்டமைப்பு.🔥
மாத சம்பளம் பணமாக,
பணத்திற்கு பொருள்,
அதன் விலை ஏற்ற இறக்கம்,
பண வீக்கம்,
இவை எதுவுமே சாராமல் ஓர் தன்னிறைவு வாழ்க்கை.
இதை உடைக்கத்தான், கோயில்கள் தகர்க்கப்பட்டன.
இதை தகர்க்கத்தான் கோயிலின் மேல் மாற்று மத படையெடுப்பு நடந்தது.
கோயில்கள் இல்லாமல் போனால் வாழ்வாதாரம் கெடும் என அந்நிய சக்திகள் அறிந்திருந்தனர்.
தெய்வங்களுக்கு உயிரூட்டி, அந்த தெய்வங்கள் அங்கே வாழ்வதாகவும், அந்த கோயிலின் சொத்துக்கள்,
அந்த தெய்வங்களின் சொத்துக்கள் என்றும், எப்படி, உயிருள்ள ஒருவரின் சொத்தை அவர் சம்மதம் இல்லாமல் மற்றவர் அபகரித்து கொண்டாலும், அது அபகரித்தவரின் சொத்து ஆகாதோ,
அதே போல, அனைத்து கோயிலின் சொத்துக்களும், அந்த கோயிலில் வாழும் அந்த தெய்வத்திற்கே சொந்தம் என்று காலம் காலமாக நமது சனாதன தர்மத்தில் இருக்கும் நம்பிக்கையும் வகுக்கப்பட்ட கொள்கையும்.
உயிருள்ள ஒருவர்,
எப்படி தினமும் குளிப்பாரோ,
உடை உடுத்தி கொள்வாரோ,
தினமும் உணவு உண்பாரோ,
நம் வாழ்வாதாரத்திற்கு உதவும் ஒருவரை நாம் எப்படி போற்றி கவனிப்போமோ,
அப்படி அவருக்கு நன்றி செலுத்தும் விதமாக, அனைவரின் சார்பாக, பூஜைகளை கவனிக்க ஒரு சமூகம்.
இப்படி ஒரு கோயிலை வைத்து, ஆன்மீகம் மூலமாக ஒரு தன்னிறைவு பொருளாதாரத்தை உலகிற்கு வாழ்ந்து காட்டியதாலேயே,
தமிழகம் உலக குருவாக திகழ்ந்தது. பைந்தமிழ் நாடு...
இதுவே நாம் உலகிற்கு விஷ்வகுரு என்பதற்கு சான்று.
நாம் சொல்ல மறந்ததை நமது பிரதமர் உலக நாடுகளுக்கு அடிக்கடி எடுத்து உறைக்கிறார்.
எனது நண்பரின் பதிவு அதை சோழர்கள் கோயில் மையமாக வைத்து நகரத்தை அமைத்தனர் என்பதற்காக சிறு சிறு மாற்றங்களுடன்… 🙏

Comments
Post a Comment