#அபிராமிஅந்தாதிபாடல்-28
#அபிராமிஅந்தாதிபாடல்-28
பலன்: இம்மை, மறுமை இவைகளில் இன்பம் அளிக்கும்
சொல்லும்
பொருளும் என,
நடமாடும் துணைவருடன்
புல்லும்,
பரிமள பூங்கொடியே,
நின் புது மலர் தாள்
அல்லும் பகலும்
தொழுமவர்க்கே
அழியா அரசும்,
செல்லும்
தவநெறியும்,
சிவலோகமும்
சித்திக்குமே
பொருள்:
சொல்லையும் பொருளையும் ஒன்றிலிருந்து ஒன்றை பிரிக்க முடியாது.
ஒருமொழிக்கு சொல்லும் அதன் அர்த்தமும் முக்யம்.
மொழி தெரிந்து அதற்கு அர்த்தம் தெரியவில்லை எனில் அந்த மொழி தெரிந்து எந்த பிரஜோனமும் இல்லை.
அதுபோல,
சிவபெருமானோடு கூடி நடம் புரியும் அன்னையே,
இரண்டர கலந்த உமையொருபாகன் சிதம்பரம் நடராஜரையும் மற்றும் சிவகாமசுந்தரியை குறிப்பிடுக்கிறார்.
#சிவகாமிஆடவந்தால்நடராஜர்# நடமாடி பார்க்கட்டுமே
வாசம் வீசும் பூங்கொடி நீ.
அம்பாள் இளம் பூங்கொடி போன்றவள்.
உன் பாதங்கள்,
அன்றலர்ந்த புது மலர்கள்.
இதனை இரவு பகல் பாராது யார் துதிக்கிறார்களோ,
அவர்களுக்கு இப்பிறவி இன்பமாக அரச போகமும்,
இவ்வுலகை விட்டு நீங்கி முக்தி அடையும் வழியாக தவ நெறியும்,
பின் சிவலோகமும் கிடைக்கும்.
அம்பாளை துதித்தால் அம்பாளின் மூலம் சிவலோகம் அடைவது எளிது.
எல்லாம் மஹான்களும் குறிபாபிடுவது அவளின் திருவடி தாமரை பாதத்தில் பணித்தல். அவ்வாறு பணிந்தால் வாழ்வு மேன்மை பெறும்.
#ஓம்ஶ்ரீலலிதாம்பிகையேநமஹ#.

Comments
Post a Comment