#அபிராமிஅந்தாதிபாடல்-31#
#அபிராமிஅந்தாதிபாடல்-31#
பலன்:
மறுபிறவியில் இன்பம் அளிக்கும்
உமையும்
உமையொரு பாகனும்
ஏக உருவில்
வந்திங்கு
எமையும்
தமக்கு அன்பு
செய்யவைத்தார்,
இனி எண்ணுதற்கு
சமையங்களும்
இல்லை,
ஈன்றெடுப்பாள்
ஒரு தாயும் இல்லை
அமையும்
அமையுறு தோளியர்
மேல் வைத்த ஆசையுமே
பொருள்:
அன்னை அபிராமி,
அவள் மறுபாகமான சிவ பெருமான், இருவரும் ஒரே உருவில்,
அர்த்தநாரீஸ்வர ரூபம் கொண்டு என் முன் வந்து,
உமையொருபாகன்
என்னை தங்களுக்கு தொண்டு செய்ய வைத்தார்கள்.
இதுவே பெரும் பாக்கியம்.
இதற்கு மேல் எனக்கு எண்ண வேறொன்றுமில்லை.
நான் வணங்கும் தெய்வம்
அன்னை அபிராமி.
என் சமயபக்ஷம் சாக்தம்
#அவர்ஒருதெய்வவழிபாட்டை# குறிப்பிடுகிறார்
(சக்தி வழிபாடு,
அம்பாள் உபாசனை).
அன்னை அபிராமி
எனக்கு உன்னையன்றி வேறு தாயும் மற்றும் அன்னையும் இல்லை.
இவர் அனைத்து பெண்களையும் அம்பாளாக அதாவது அன்னையாக பார்பதால்,வேறு எண்ணம் தோன்றுவதில்லை.
இது சக்தி உபாசனையில் மிக உயர்ந்த தத்துவம்.
இவ்வாறு எண்ணுவதால் மூங்கில் நிற தோளுடைய மற்ற பெண்கள் மேலும் எனக்கு ஆசை இல்லாமல் போய்விட்டது.
அன்னையை தொழுதால் முக்தி கிடைக்கும்.
மறுபிறவி கிடையாது.
எனினும் பலனில் மறுபிறவியில் இன்பம் அளிக்கும் என்று உள்ளது.
இதற்கு காரணம், மறுபிறவியே கிடையாது என்பதே பேரின்பம் இன்பம் தான்.
உமாதேவியும், அத் தேவியை ஒரு பாகத்தில் உடைய சிவபிரானும் சேர்ந்து ஓருருவாக எழுந்தருளி வந்து,
பரிபக்குவமற்ற என் போன்றோரையும் தம் திருவடிக்கு அன்பு செய்யும்படி நன்னிலையில் வைத்தருளினர்;
ஆதலின் இனிமேல் கடைப்பிடிப்போமென்று எண்ணி நாம் ஆராய்தற்குரிய சமயங்கள் வேறு இல்லை;
எமக்குப் பிறவிப் பிணி நீங்கியதாதலின் இனி எம்மைப் பெற்று எடுப்பதற் குரியவளாகிய தாயும் இல்லை:
மூங்கிலைப்போல் உள்ள தோளையுடைய மகளிர்பால் வைத்த மோகம் போதும்.
ஏகவுருவென்றது அர்த்த நாரீசத் திருக்கோலத்தை.
எமையென்றது ஏனைய அன்பர்களையும் உளப்படுத்திக் கூறியது;
ஆட்கொள்ளப்பெற்ற பெருமிதம் தோன்றக் கூறியதெனலும் ஆம்.
அர்த்தநாரீசுவர மூர்த்தித் தியானம் பெண்ணாசையை ஒழிக்க வழியென்பது. “

Comments
Post a Comment