அபிராமிஅந்தாதிபாடல்# - 34
#அபிராமிஅந்தாதிபாடல்# - 34
சிறந்த நிலங்கள் கிடைக்கும்
வந்தே
சரணம் புகும்
அடியாருக்கு,
வானுலகம்
தந்தே பரிவோடு
தான்போய் இருக்கும்,
சதுர்முகமும்
பைந்தேன்
அலங்கல் பருமணி
ஆகமும், பாகமும்
பொன்
செந்தேன் மலரும்,
அலர்கதிர் ஞாயிறும்
திங்களுமே
பொருள்:
அன்னை அபிராமி எதிலெல்லாம் இருக்கிறாள் என்று பட்டர் இப்பாடலில் கூறுகிறார்.
அவள் லோகமாதா சகலுத்திலும் வியாபித்து இருப்பவள்.
சிருஷ்டிக்கு அவள் காரண பிந்து.
அதனாலேயே பாரதி
காக்கைச் சிறகினிலே நந்தலாலா-
நின்றன்
கரியநிறந் தோன்றுதையே
நந்தலாலா;
(கண்ணணை - காளியை)
2. பார்க்கு மரங்கலெல்லாம்
நந்தலாலா -
நின்றன்
பச்சைநிறந் தோன்றுதையே
(அன்னை மீனாக்ஷி).
நந்தலாலா
1. சதுர்முகனின் (பிரம்மா) படைப்புத்தொழில் -
#ஸ்ருஷ்டிகர்த்ரீபிரம்மரூபா#என்று லலிதா சஹஸ்ரநாமம் கூறுகிறது.
2. தேன் சிந்தும் மலர்கள் நிறைந்த மாலை, துளசி, அணிகலன்கள் அணிந்தவரான திருமாலின் மனத்தில் -
அவர் செய்யும் காப்புதொழில் -
#கோப்த்ரீகோவிந்தரூபிணி# என்று லலிதா சஹஸ்ரநாமம் கூறுகிறது.
3. பாகமும் - ஈசனின் இட பாகத்தில் - அதாவது சிவனின் அழிக்கும் தொழிலில்.
#சம்ஹாரினீருத்ரரூபா# என்று லலிதா சஹஸ்ரநாமம் கூறுகிறது.
4. தேன் ததும்பும் தாமரை மலரில் (பொன் செந்தேன் மலரும்)
5. அலர் கதிர் ஞாயிறு -
விரிந்த கதிர்கள் உடைய சூரியன் - #பானுமண்டலமத்யஸ்தா# என்று லலிதா சஹஸ்ரநாமம் கூறுகிறது.
6. திங்களுமே - சந்திரனிலும்.
#சந்திரமண்டலமத்யாகா# என்று லலிதா சஹஸ்ரநாமம் கூறுகிறது.
நான் அடிக்கடி மேல் கோடிட்டு காண்பிபது.
லலிதா சஹஸ்ர நாமத்தின் சமஸ்கிருத பாஸ்யம் ஆச்சாரியரின் சௌந்தர்யலஹரி.
சௌந்தர்யலஹரி தமிழ் அர்த்தம் அபிராமி அந்தாதி.
இவை மூன்றுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்று பதிவிடுகிறேன்.
கொஞ்சம் இடம் மாறி வரும் ஆனால் மூன்றுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.
அதை தான் பட்டர் இங்கு குறிப்பிடுகிறார்.
மேலும் அன்னை தன்னிடம் வந்து சரணம் புகுவோற்கு
உயர்ந்த தேவலோகத்தை தருகிறாள்.

Comments
Post a Comment