ஸிந்தூராருணவிக்ரஹாம்

 #ஸிந்தூராருணவிக்ரஹாம்


#


அம்பாளின் முகவிராந்தம்


புலி தன் உணவுகாக இறையைத் தேடும் போது அதன் முகமானது சிவந்து அதன் கோர பற்கள் மூலம் இறையைத் தேடும் அதன் முகமானது 

உக்கிர சூரியன் போல் இருக்கும்.


அது புலி இரண்டு நாளான  குட்டி ஒரு இடத்திலிருந்து அடுத்த இடத்திற்கு எடுத்து செல்லும் போது  அதே புலி தனது தனது பல்லால் அதற்கு வலி இல்லாமல் எடுத்து செல்லும்.


ஒரு மிருகத்திற்கு வித்தியாசம் நம்மை பெற்று லோகமாதாவிற்கு இருவேறுப்பட்ட முகம் இருப்பத்தில் என்ன சந்தேகம்.


இந்த முகத்தை தான் ஆதிசங்கரர் அம்பாளை 


உத்யத்பானு ஸஹஸ்ர கோடி ஸதிர்ஸாம்


என்று அம்பாளின் முகத்தை குறிப்பிடுகிறார்.


ஆயிரம் சூரியன் உதிக்கும் போது எவ்வளவு பிரகாசம் அவ்வளவு பிரகாசம் என்கிறார்.


அபிராமி பட்டரும் தானும் சாமனியபட்டவன் இல்லை என்பதை தனது முதல் பாடலில்


உதிக்கின்ற செங்கதிர் உச்சி திலகமுடையாய்  என ஆரம்பிக்கிறார்.


அம்பாளின் நெற்றியில் இருக்கும் திலகம் எப்படி இருக்கிறதாம்


காலையில் உதிக்கின்ற காலை சூரியன் எப்படி இளம்சிவப்பாக இருக்குமோ அதை போல் அவளது நெற்றி திலகம் இருக்கிறதாம் என அபிராமி பட்டர் தனது முதல் பாடலில் வெளிபடுத்துகிறார்.


அவளின் முக வர்ணணை இவ்வாறு வர்ணிக்கிறார் இரு மஹான்கள்.

Comments

Popular posts from this blog

துஷ்ட சக்திகள் விலக Deliverance from the hold of evil spirits

தனது பக்தைக்காக ஶ்ரீலலிதா சஹஸ்ர நாம உச்சரிப்பை மாற்றிய அம்பாள்ச

பெண் குழந்தைகளுக்கு வைப்பதால் அதன் சிறப்பு).