மலரடியை நாடும் உயிர் வண்டு. Removal of charms and enchantments by enemies.
பகுதி 90
துர்மந்திர சேதனம்
Removal of charms and enchantments by enemies.
கிட்டத்தட்ட 89 ஸ்லோகங்களை வர்ணிக்க காரணம்
ஆச்சாரியார் தன்னை முழ சரணாகதி அம்பாளின் திருபாதங்களில் அடைவதற்காக தான்.
அனைவரும் சென்று அடைய வேண்டியது இதை தான்.
அதாவது இறைவனது சரணை இருக்கப் பற்றிக்கொள்வது.
அதற்காக தான் இத்தனை தலை முதல் பாத வர்ணணை.
லலிதா சஹஸ்ர நாமத்திற்கு ஒப்புநோக்கதக்க சௌந்தயலஹரி ஸ்லோகம் மற்றும் அபிராமி அந்தாதி பாடல்.
#லலிதாசஹஸ்ரநாமம்#
வாஞ்சிதார்த ப்ராதாயிநீ
வாஞ்சிதார்த்த ப்ரதாயினி என்பது,
பக்தர்களின் இச்சைகளை நிறைவேற்றும் அம்சம் கொண்டவர். #வாஞ்சிதார்த்த# என்றால்
இச்சை, விருப்பம், ஆசை என்று பொருள்.
ப்ரதாயின் என்றால் வழங்குதல் என்று பொருள்.
#மஹாலக்ஷ்மி# மந்திரத்தில், #வாஞ்சிதார்த்தப்ரதாயினி# என்ற சொல் இடம்பெற்றுள்ளது.
#பக்தசௌபாக்யதாயிநீ#
வாஞ்சிதார்த்த =
இச்சை - விருப்பம்- ஆசை
ப்ரதாயின் = வழங்குதல்
வாஞ்சிதார்த்த ப்ரதாயினீ; =
(பக்தர்களின்) அபிலாஷைகளை பூர்த்தி செய்பவள்
#வந்தாருஜநவத்ஸலா#
வணங்கும் பக்தர்களிடம் வாக்ஸல்யம் உள்ளவள்
#சௌந்தயலஹரி#
மலரடியை நாடும் உயிர் வண்டு
ததானே தினேப்யாஹ் ஶ்ரியம் அனிஷாம் ஆஷானுசத்ருசிம்
அமந்தம் சௌந்தர்ய-ப்ரகார-மகரந்தம் விகீரதி |
தவ'ஸ்மின் மந்தர-ஸ்தபக-சுபகே யது சரணே
நிமஜ்ஜன் மஜ்ஜீவஹ் கரண-சரணா ஸத்-சரணாதம் ||
தீய மந்திரங்களை அறுத்தல்.
தாயே
எளியவர்களுக்கும்கூட ஆசைப்பட்ட அளவு ஸம்பத்தை/செல்வத்தை எப்போதும் கொடுப்பதும்,லாவண்யம் மிகுந்த கற்பக விருக்ஷங்களின் மகரந்தம் நிறைந்த பூக்களாலான பூங்கொத்துப் போன்ற அழகான உனது பாதங்களைச் சுற்றி வரும் வண்டாக எனது ஆத்மா இருக்க வேண்டுகிறேன்.
மகரந்தம் நிறைந்த மலர்களை வண்டுகள் சுற்றிவருவது சகஜம். அம்பிகையின் பாதங்களது தேவலோக மலர்க்கொத்துப் போல இருப்பத்தாகச் சொல்லி, அதைச் சுற்றும் வண்டாக தன்னை ஏற்கவேண்டும் என்று கூறுகிறார் ஆச்சார்யார்.
வண்டுகளுக்கு ஆறுகால்கள் இருப்பதால் அதை ஷட்-சரணம் என்று கூறுவார்கள்.
இங்கே தனது ஆத்மாவை வண்டாகச் சொல்லி கொள்வதன் மூலம் ஜீவனுக்கு உண்டான ஆறு கரணங்ககளை (பஞ்சேந்திரியங்கள் ஐந்தும்+மனஸ்) சரணங்களாகச் சொல்லி வண்டாகச் சொன்ன
உதாரணத்தை விளக்குகிறார் தேதியூரார்.
ஸ்ரீதேவி!
ஆதரவற்றவர்களுக்கு அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப,
உமது தாமரை பாதங்கள் எப்போதும் செல்வத்தை அளிக்கின்றன.
அவை ஏராளமான அழகு மற்றும் மங்களத்துடன் அமிர்தத்தை வலுவாகப் பாய்ச்சுகின்றன.
மந்தார மலர்களைப்போன்ற உமது தாமரை பாதங்களை அடைய ,
ஆறு கால்களைக் கொண்ட நான் தேனீயாக மாறட்டும்!
நுண்ணறிவு:
ஸ்ரீதேவியின் தீவிர பக்தர்களுக்கு செல்வத்தையும் விடுதலையையும் வழங்கும் சக்தியைப் புகழ்ந்து ரைக்கும் ஸ்லோகம் இது.
நாம் தெளிவாகப் புரிந்துகொள்வோம்.
செல்வத்தை ஆளும் தெய்வம் ஸ்ரீ லட்சுமி.
இந்த ஸ்லோகத்தின் முதல் வரி, செல்வத்தையும் மங்களத்தையும் வழங்கும் ஸ்ரீ லட்சுமியின் சக்தியைப் பற்றியது.
ஸ்ரீதேவியின் தாமரை பாதங்களே பக்தர்களுக்கு அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப தொடர்ந்து செல்வத்தை அளிக்கும் திறன் கொண்டவை என்று அது கூறுகிறது
.
இந்தப் பதத்தின் இரண்டாவது வரி, வாழ்க்கை மற்றும் இறப்பு என்ற தீய சுழற்சியில் இருந்து விடுதலையை ( மோட்சம் ) அளிக்கும் ஸ்ரீ பார்வதியின் சக்தியைப் பற்றி பேசுகிறது .
மகரந்தம் (தேன் அல்லது அமிர்தம் என்று பொருள்) என்ற சொல், இறுதி யதார்த்தத்தின் அத்தியாவசிய இயல்பான எல்லையற்ற பேரின்பத்தைக் குறிக்கிறது .
ஸ்ரீதேவியின் தாமரை பாதங்கள் பேரின்பம் நிறைந்த நித்திய தங்குமிடம் என்றும், முழுமையான விடுதலைக்குப் பிறகு நாம் அடைய வேண்டியவை என்றும் இந்த வசனம் கூறுகிறது .
இந்த ஸ்லோகத்தின் கடைசி இரண்டு வரிகள், ஸ்ரீதேவியின் தாமரை பாதங்கள் சொர்க்கத்தில் வளரும் தெய்வீக மந்தார மலர்களின் கொத்து போன்றவை என்று கூறுகின்றன .
ஸ்ரீ தேவியின் தாமரை பாதங்களிலிருந்து வெளிப்படும் அழகையும் நித்தியத்தின் அமிர்தத்தையும் முழுமையாக அனுபவிப்பதில் அவர் ஒரு தேனீயாக மாற வேண்டும் என்று பக்தர் ஸ்ரீதேவியைப் பிரார்த்தனை செய்கிறார்.
முழுமையான சரணாகதி மற்றும் பக்தியின் என்ன ஒரு சிறந்த கருத்து!
#அபிராமிஅந்தாதி#
இல்லாமை சொல்லி,
ஒருவர் தம்பால் சென்று,
இழிவுபட்டு
நில்லாமை நெஞ்சில் நினைகுவிரேல்,
நித்தம் நீடு தவம்
கல்லாமை கற்ற கயவர் தம்பால்
ஒரு காலத்திலும்
செல்லாமை வைத்த திரிபுரை பாதங்கள் சேர்மிண்களே ...
அந்தக் காலத்தில், மெத்தப் படித்தவர்கள்,
புலவர்கள் எல்லோரும் பெரும் பொருள் சேர்ப்பதில் ஆர்வமுடையவர்களாக இருந்தது இல்லை.
தாம் கற்றக் கல்வியை மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுப்பதிலும், இருக்கும் பொருள் கொண்டு,
தமது வாழ்வினை அமைத்துக் கொள்வதிலுமே அவர்கள் ஈடுபட்டு இருந்தார்கள்.
ஆனாலும், பொருள் ஈட்ட முடியாமல் போகும்போது, வறுமை வந்து வாட்டும்போது, அடுத்த வேளைக்கே கஞ்சி இல்லை என்று ஆகும்போது, அவர்கள், செல்வந்தர்களை, தனவந்தர்களை அணுகி, தானம் பெற்று வாழ்ந்து வந்தார்கள்.
மிகப் பெரும் புலவர்கள் கூட, இப்படித்தான் இருந்திருக்கிறார்கள். வள்ளல்களையும், அரசர்களையும் அணுகி,
அவர்களைப் புகழ்ந்து பாடி, பரிசுகள் பெற்று, தமது வறுமையை ஓரளவு போக்கிக் கொண்டு இருந்திருக்கிறார்கள்.
சங்கப் பாடல்களில், பலவும், மன்னர்களைப் பற்றி, புலவர்கள் புகழ்ந்து பாடிய பாடல்களாக இருக்கின்றன.
தனது மனைவி மக்களை பிரிந்து, வெகு தூரம் சென்று, தனவந்தர்களை,
மன்னர்களைக் கண்டு, அவர்களை 'ஆஹா', 'ஓஹோ' எனப் புகழ்ந்து பரிசுகள் பல பெற்றுத் திரும்பிய புலவர்கள் பெரும்பாலோர்.
'இரப்பது இகழ்ச்சி' என்று நன்றகப் படித்திருந்தும், தெரிந்திருந்தும், வேறு எந்த மார்கமும் தெரியாமல், 'இப்படி, தராதரம் இல்லாதவர்களை யெல்லாம் புகழ்ந்து பாடும்படி நேர்ந்து விட்டதே' என்று, தம்மைத் தாமே நொந்து கொண்ட புலவர்களும் நிறைய உண்டு.
இப்படிப்பட்ட 'இரந்து பிழைக்கும்' நிலை வராமல் இருக்க வேண்டுமானால், அன்னை அபிராமியிடம் சரணடையுங்கள் என்று நமக்கெல்லாம் சொல்ல்லிகொடுக்கிறார் பட்டர் பெருமான்.
"நீங்கள் இப்படி உங்களது இல்லாமையைப் பற்றி நினக்கவே வேண்டியது இல்லை. ஒருவரிடம் சென்று, நிற்கவும் வேண்டியது இல்லை.
கண்ட கண்டவர்களைப் புகழ்ந்து பாட வேண்டிய கொடுமையும் உங்களுக்கு நேராது. 'தவம்' என்றால் என்ன என்றே தெரியாத கயவர்கள்பால் சென்று நீங்கள் நிற்காமல் இருக்க வேண்டுமானால், நீங்கள் தவம் உடையவராக இருக்க வேண்டும். அபிராமி அன்னையிடம் தவம் உடையவராக இருக்க வேண்டும்.
அப்படி, அபிராமி அன்னையிடம் சரணடைந்து விட்டீரகள் என்றால், உங்களுக்கு ஒரு குறையும் வாராது" - என்று நமக்கெல்லாம் சொல்லிக் கொடுக்கிறார் பட்டர்.

Comments
Post a Comment