ஸகல ரோக நிவர்த்தி. Relief from all diseases

 பகுதி 89.


ஸகல ரோக நிவர்த்தி


Relief from all diseases 



லலிதா சஹஸ்ர நாமத்திற்கு ஒப்புநோக்கதக்க சௌந்தயலஹரி ஸ்லோகம் மற்றும் அபிராமி அந்தாதி பாடல்.


#லலிதாசஹஸ்ரநாமம்#


#நகதீதிஸஞ்சந்நநமஜ்ஜநதமோகுணா#


நகதீதி ஸஞ்சந்ந நமஜ்ஜந தமோகுணா -- 


அம்பாளின் கை விரல்  நகங்கள் செய்யும் சேவையை என்னவென்று சொல்வது.  


நமது மனதின்  இருளை  

(தமோ குணத்தை) போக்கும்  

ஒளி வீசுபவை .  


அப்படி பளபளவென்று  கண்ணாடி மாதிரி ஜொலிக்கும்  நகங்கள்.


#சௌந்தயலஹரி#


கரகமலங்களை குவியச்செய்யும் நகச்சந்திர்கள்.


(ஸகல ரோவநிவர்த்தி).


"நகைர்நாகஸ்ரீணாம் காரகமலாஸங்கோச்சஷஷிபிஹி

தாரூணாம் திவ்யாநாம் ஹஸத இவ தே சண்டி சரணௌ!


ஃபாலாநி ஸ்வஹஸ்தேப்யஹ கிசலயகராக்ரேண ததாதாம்

தரித்ரேப்யோ பத்ரம் ஶ்ரியமநிஷாமாஹ்நாய ததாதௌ!"


"ஓ! சண்டி! 


தேலலோகத்தில் உள்ள கற்பகம் முதலான வ்ருஷங்கள் தங்களுடைய துளிராகிய கைகளினால் ஸ்வர்கலோகத்தில் சகல சம்பத்துடன் இருக்கும் தேவர்களுக்கு வேண்டியவற்றைக் கொடுக்கின்றன.


உன்னுடைய பாதங்களோ தரித்தர்களுக்கு சிறந்த ஐஸ்வர்யாத்தை அளிக்கவல்லது.  இதனால்தானோ உன்னுடைய பாதங்களில் இருக்கும் பரிஹாசிப்பது   போன்று தெரிகிறது.


உன் பாத நகங்களின் ஒளியானது சந்திரனது ஒளிபாபோல் தோன்றுவதால் தானோ தேவலோக ஸ்தீரிகளது தாமரைப் போன்ற கரங்கள்  (சந்திரனை கண்ட தாமரை கைகூப்புவது போல்).  உனது தாமரைப்போன்ற பாதம் கண்டு கைக்கூப்பி வணங்குகின்றனர்.


அன்னை சண்டாமுண்டாசுரர்களை  வதைத்த சண்டியாக இந்த பாடலில் விவரிக்கிறார்.


அவளது சரணங்களை ஸ்வர்கலோகத்தில் இருக்கும் கற்பக விருக்ஷ்கத்திற்கு ஒப்பாகச் சொல்லி அந்த கற்பகமரமாவது தேவர்களுக்கு எல்லாம் தரும்.


ஆனால் அன்னையின் சரணங்கள் சாதாரணர்கள் கேட்பவதை விட அதிகமாக எல்லாம் தரும் என்கிறார்.


இவ்வாறு சரணங்கள் கற்பக மரத்தை விட சிறப்பாக இருப்பதால்.  அம்மரங்கள் அன்னையின் பாதங்களில் உள்ள நகங்கள் பரிசாஹம் செய்கிறதாம்.


இவ்வாறு பகவத் பாதாள் அன்னையின் பாதாங்களை வர்ணிக்கிறார்.


 


#அபிராமிஅந்தாதி#


வந்தே சரணம் புகும் அடியாருக்கு, வானுலகம்

தந்தே பரிவொடு தான் போய் இருக்கும்--சதுர்முகமும்,

பைந்தேன் அலங்கல் பரு மணி ஆகமும், பாகமும், பொற்

செந்தேன் மலரும், அலர் கதிர் ஞாயிறும், திங்களுமே : 


இந்தப் பாடலில், பட்டர் நமக்கு, அன்னையின் ஸ்வரூபத்தினை அழகாகக் காட்டுகிறார்.


அன்னை என்பது யார்? 


எங்கெல்லாம் அவள் இருக்கிறாள்?


 யாராகவெல்லாம் அவள் இருக்கிறாள்?


தன்னை வந்து சரணம் புகும் அடியார்க்கு, அவள் என்னதான் செய்துவிட மாட்டாள்? 


அவள் உடனடியாக, வானுலகையே அல்லவா வழங்கி விடுகிறாள்?


 எப்படிப்பட்ட உலகம் வழங்குகிறாள் அன்னை? 


வந்த அடியாருக்கு எந்த உலகம் பிடிக்குமோ, அதனையே வழங்கி விடுகிறாள்.


நாங்கு முகம் கொண்ட பிரம்மவாக இருப்பவளும் அவளே.


தேன் ஒழுகும் துழாய் மாலை அணிந்த, அந்த பருத்த கவுஸ்துப மணி அணிந்த திருமாலும் அவளே.


 ஈசனின் வாம பாகம் கொண்டவளும் அவளே. 


பொன்னிறமாக விளங்கும் தாமரை இதழ்களில் வீற்றிருப்பவளும் அவளே. 


கதிரவனாகவும், திங்களாகவும் திகழ்பவளும் அவளே. 


ஒரு பக்கம் வெம்மை தந்து தண்டிப்பவளும் அவளே. 


மறு பக்கம், ஒளி தந்து வாழ்விப்பவளும் அவளே.


எல்லாம் அவளே அவளே ஸர்வமும்.


#ஓம்ஶ்ரீஆதிபராசக்தி#.

Comments

Popular posts from this blog

துஷ்ட சக்திகள் விலக Deliverance from the hold of evil spirits

தனது பக்தைக்காக ஶ்ரீலலிதா சஹஸ்ர நாம உச்சரிப்பை மாற்றிய அம்பாள்ச

பெண் குழந்தைகளுக்கு வைப்பதால் அதன் சிறப்பு).