மூத்தவளே யாருக்கு மூத்தவள் யாருக்கு இளையவள்
ஓம் ஸ்ரீ மாத்ரே நமஹ 🙏🏾!
ஓம் நமஹ சிவாய!🙏🏾
ஸந்ஹாரிணீ ருத்ரரூபா திரோஸ்நகரீஶ்வரீ ।ஸாஶிவாயநுக்ரஹதா பஞ்சக்த்யபராயணா
அபிராமி அந்தாதி
மூத்தவளே
என்றும்
மூவாமுகுந்தற் கிளையவளே
மாத்தவளே
உன்னை அன்ற
மற்றோர்தெய்வம் வந்திப்பதே.
உலகம் பதினான்கையும் திருவருளால் ஈன்றோய்,
அவ்வாறு அருள் கொண்டு ஈன்றது போலவே
அவற்றைப் பாதுகாத்தோய்,
பின்னர் அவற்றைச்
சங்காரம் செய்வோய்,
விடத்தையுடைய நீலகண்டப் பெருமானுக்கு முன் பிறந்தோய்,
மூப்பை அடையாத திருமாலுக்குத் தங்கையே,
பெரிய தவத்தையுடையவளே,
அடியேன் உன்னையே தெய்வமாக வழிபடுவதன்றி
வேறு ஒரு தெய்வத்தை வழிபடுவது ஆகுமா?
ஆக்கல் முதலிய முத்தொழிலுக்கும் மூல காரணமாயிருத்தல் பற்றிப
பூத்தவளே, காத்தவளே; கரந்தவளே என்றார்.
"ஈரேழ் புவனமும் பூத்தவுந்திக் கொங்கிவர் பூங்குழலாள்" (75)
எனஎன்பர் பின்.
பூத்தவண்ணம் என்ற உவமை,
அருள் பெருகிப் பூத்தவாறே அருள் பெருகிக் காத்தாய் என்பதைப் புலப்படுத்தியது (பயன்).
பிரமன் முதலிய மூவரிடத்தும் இருந்த முத்தொழிலையும் இயற்றுபவள் அம்பிகை யென்றவாறு;
லலிதாம்பிகையின் திருநாமங்களாகிய
ஸ்ருஷ்டி கர்த்ரீ,
ப்ரஹ்மரூபா,
கோப்த்ரீ.
கோவிந்த ரூபிணி,
ஸம்ஹாரிணீ,
ருத்ரரூபா (264-9).
த்ரிமூர்த்தி (628)
என்பவற்றைக் காண்க.
சக்தி தத்துவத்தினின்றும்
சதாசிவ தத்துவம்
தோன்றுதலின் மூத்தவள் என்றார்.
தவம் புரிபவள் (44),
சாரியை வேண்டிய வழி இல்லையாயிற்று.
வந்திப்பதே :
ஏகாரம், வினா.
வந்திப் பவர் உன்னை வானவர்
தானவர் ஆனவர்கள்
சிந்திப்பவர் நற்றிசைமுகர்
நாரணர் சிந்தையுள்ளே.
இதை தான் லலிதா சஹஸ்ர நாமம்
ஸந்ஹாரிணீ ருத்ரரூபா திரோஸ்நகரீஶ்வரீ ।ஸாஶிவாயநுக்ரஹதா பஞ்சக்த்யபராயணா
பிரபஞ்சத்தை அழிப்பவள் அவள்.
அவள் பிரபஞ்சத்தின் கலைப்புக்காக ருத்ர (சிவன்) வடிவத்தை எடுத்தாள்.
எல்லாப் பொருள்களும் மறைவதற்குக் காரணமானவள்.
அனைத்தையும் பாதுகாத்து ஆட்சி செய்பவள்.
சதாசிவமானவள்,
எப்போதும் ஐஸ்வர்யத்தை அளிப்பவள்.
வரம் அளிப்பவள்.
அவள் ஐந்து செயல்பாடுகளில்
படைத்தல்,
பாதுகாத்தல்,
அழித்தல்,
மறைத்தல்
மற்றும்
மீண்டும் தோன்றுதல்.
அர்ப்பணிக்கப்பட்டவள்.
அவளே சகலமும் ஆனாள் அவர் மூத்தவள்
ஆதிபராசக்தியிலிருந்து அனைத்தும் தோன்றியது அதனால் அவள் மூத்தவள்.
மூவா முகுந்தர்க்கு இளையவள்
நாராயணன் தங்கை நாராயணி
அதனாள் இளையவள்.
உலக நம்மைக்காக சிவம்பெருமான் விஷத்தை உண்டார்.
கொடிய விஷத்திலிருந்து சிவனை காத்தாள் ஆதனால் அவள் மூத்தவள்.
ஸ்ரீ' என்பதற்கு அழகு, பெருமை, மகிமை, செல்வம், லட்சுமி என்னும் பொருள்களோடு விஷம் என்ற பொருளும் உண்டு.
தேவர்கள் பாற்கடலைக் கடைந்த போது வெளிப்பட்ட விஷத்தால் பலர் மூர்ச்சையாயினர்.
எல்லோரும் சிவனைத் தஞ்சம் அடைந்தனர்.
அவர்களைக் காப்பாற்ற, விஷத்தைத் தானே விழுங்க முன்வந்தார் அவர். விஷத்தின் கொடுமையால் பெருமானது உடலிலும் வயிற்றிலும் உள்ள மற்ற உலகங்கள் பாதிக்கப்படுமே என்று அஞ்சினாள் உமாதேவி.
தொண்டையிலேயே தடுத்து நிறுத்தி உயிர்களைக் காப்பாற்றினாள்.
ஸ்ரீ என்றால் விஷம். "மாதி' என்றால் தடுத்து நிறுத்தியவள் என்று பொருள்.
இலக்கணக் குறிப்புகளால்
ஸ்ரீமாதி என்பதே "ஸ்ரீமாதா'வாகி நாமாவளியில்
நான்காம் வேற்றுமையாக
"ஸ்ரீமாத்ரே நம:' என்றாகியது

Comments
Post a Comment