சிவராத்திரி இரண்டாம் கால அபிஷேகம்

 ஶ்ரீ மஹா லலிதா திரிபுர சுந்தரி உடனுறை  ஜெயந்தீஸ்வரர் ஆலயம்

@இராமாவரம்


சிவராத்திரி இரண்டாம் கால அபிஷேகம்


மற்றும் அதன் விசேஷம் என்ன? 


சிவபெருமானின் திருவடியைத் தேடிச் சென்ற மகாவிஷ்ணுவால், ஈசனுக்கு செய்யப்படும் பூஜையாக இது கருதப்படுகிறது. 


அப்போது இறைவனுக்கு பஞ்சாமிர்த அபிஷேகம் செய்யப்படும்.


பச்சைக்கற்பூரம், பன்னீர் சேர்த்து அரைத்து சாத்தப்படும். 


வெண்பட்டு ஆடை அணிவித்து அலங்காரம் செய்வர். 


வில்வம், தாமரைப் பூவால் அலங்காரம் செய்யப்படும். 


துளசி கொண்டு அர்ச்சிக்கப்படும்.


நைவேத்தியமாக பாயசம் படைக்கப்படும். 


யஜூர் வேதம்,8-ம் திருமுறையில் கீர்த்தி திருவகவல் ஆகியவை பாராயணம் செய்யப்படும்.


நல்லெண்ணெய் தீபத்துடன் பூஜை நடைபெறும். 


இந்த கால வேளையில் சிவப்பெருமானை வழிபட்டால், செல்வம் செழித்தோங்கும்,


திருமாலின் அருளும் கிடைக்கும்.


சுவாமிக்கு நடைப்பெற்ற அபிஷேக காணொளியின் இணைப்பு


https://photos.app.goo.gl/ZKeKatZGCRYARfXv9

Comments

Popular posts from this blog

துஷ்ட சக்திகள் விலக Deliverance from the hold of evil spirits

தனது பக்தைக்காக ஶ்ரீலலிதா சஹஸ்ர நாம உச்சரிப்பை மாற்றிய அம்பாள்ச

பெண் குழந்தைகளுக்கு வைப்பதால் அதன் சிறப்பு).