அன்பும் காருண்யம் மிக்கவுள். அம்பாள் அவள் ஶ்ரீமாதா
அம்பாள் எப்படி பட்டவள் என்ற பதிவை கடந்த நான்கு நாட்களாக கண்டோம்.
அவள் அன்பும் காருண்யம் மிக்கவுள்.
காருண்யத்தால் லாவண்யம் மிக்கவள்.
இதை எனக்கு உணர்த்தவே கடந்த வாரம் பூர்ண மஹாமேரு டிரஸ்டில் வருமாறு அழைப்பு வந்ததோ என தோன்றுகிறது.
காரணம் அது ஶ்ரீநகரம் அம்பாள் வாசம் செய்யும் இடம்.
ஆதரவற்றோர்களுக்கு இரு விஷயம் மிக முக்யம் ஒன்று மன நிறைவு.
அங்கு அது ஏராளமாக இருக்கிறது.
மற்றொன்று பசிக்கும்போது உணவு அது அவர்களுக்கு வயிறு நிறைய கிடைக்கிறது.
காரணம் அங்கு அன்னை என்பவள் தனது குழந்தைகள் எவ்வாறு காப்பாலோ அவ்வாறு மாதிரியான ஒரு சுழல்.
அதை அங்கே உள்ளவர்களின் உள்ளங்களில் காண முடிந்தது.
இந்த பதிவை நான் பதிய ஆரம்பிக்கும்போது அதை நான் உணரவேண்டும் என்பதற்காக.
கடந்த வாரம் அவ்வில்லம் நோக்கிய பயணம்.
ஓம் ஶ்ரீமாதா ஶ்ரீமஹாராஜ்ஞீ
ஶ்ரீமத்ஸிம்ஹாஸனேச்வரீ
சிதக்னி குண்ட ஸம்பூதா தேவகார்ய ஸமுத்யதா.
ஸ்ரீமாதா என்றால் எல்லையில்லாக் கருணையுடைய தாய்.
"ஸ்ரீ' என்பதற்கு அழகு, பெருமை, மகிமை, செல்வம், லட்சுமி என்னும் பொருள்களோடு விஷம் என்ற பொருளும் உண்டு.
தேவர்கள் பாற்கடலைக் கடைந்த போது வெளிப்பட்ட விஷத்தால் பலர் மூர்ச்சையாயினர்.
எல்லோரும் சிவனைத் தஞ்சம் அடைந்தனர்.
அவர்களைக் காப்பாற்ற, விஷத்தைத் தானே விழுங்க முன்வந்தார் அவர். விஷத்தின் கொடுமையால் பெருமானது உடலிலும் வயிற்றிலும் உள்ள மற்ற உலகங்கள் பாதிக்கப்படுமே என்று அஞ்சினாள் உமாதேவி.
தொண்டையிலேயே தடுத்து நிறுத்தி உயிர்களைக் காப்பாற்றினாள்.
ஸ்ரீ என்றால் விஷம். "மாதி' என்றால் தடுத்து நிறுத்தியவள் என்று பொருள்.
இலக்கணக் குறிப்புகளால்
ஸ்ரீமாதி என்பதே "ஸ்ரீமாதா'வாகி நாமாவளியில்
நான்காம் வேற்றுமையாக
"ஸ்ரீமாத்ரே நம:' என்றாகியது
என்று அவரது உரையில் உள்ளது.
காரணம் அவள் லோகஜனனி/லோகமாதா/ஜகத்ஜனனி.
அனைத்து உயிர்களிலும் அவள் உரைந்துள்ளாள்.
அதனால் அவளை ஶ்ரீமாதா என்கிறது வாக்தேவிகளின் லலிதா சஹஸ்ர நாமம்.
ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ
ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ
ஜகத் காரணி நீ பரிபூரணி நீ
ஜகத் காரணி நீ பரிபூரணி நீ
ஜகத் காரணி நீ பரிபூரணி நீ
ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ
ஜனனி ஜனனி ஜனனி ஜனனி…
ஒரு மான் மழுவும் சிறு கூன் பிறையும்
சடை வார் குழலும் பிடை வாகனமும்
சடை வார் குழலும் பிடை வாகனமும்….
கொண்ட நாயகனின் குளிர் தேகத்திலே
நின்ற நாயகியே இட பாகத்திலே
நின்ற நாயகியே இட பாகத்திலே …
ஜகன் மோகினி நீ சிம்ம வாகினி நீ
ஜகன் மோகினி நீ சிம்ம வாகினி நீ…
ஜகன் மோகினி நீ சிம்ம வாகினி நீ
ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ
ஜகத் காரணி நீ பரிபூரணி நீ…

Comments
Post a Comment