அம்பாளுக்கு அப்படியே என்ன ஒரு ப்ரேமை அப்பன் மேல்.

 அம்பாளுக்கு அப்படியே என்ன ஒரு ப்ரேமை அப்பன் மேல்.



குழையத் தழுவிய கொன்றையந்தார் கமழ் ‘கொங்கை வல்லி’ என்று பாடுகிறார் அபிராமி பட்டர். 


அதனால்  உருவாகிய தலம் இது.


நகரேஷு காஞ்சி’ என்கிறார், கவிகாளிதாசர். 


(நகரங்களுள் சிறந்தது காஞ்சி என்று பொருள்படும்.)


ஆற்றுப் பூவரசு எனப்படும் காஞ்சி மரங்கள் நிறைந்த ஊர் ஆதலாலும்,


ஊரின் அரசியாக விளங்கும் அன்னை காமாட்சியின் இடையிலுள்ள ‘காஞ்சி’ எனும் ஆபரணத்தின் பெயராலும்,


#நிலையாமை#எனும் பொருளில்,


நிலையற்ற இவ்வுலகில் நிலைத்திருப்பது பரம்பொருள் மட்டுமே என்று அன்னை உலகிற்கு உணர்த்தியதாலும் #காஞ்சிபுரம்# என்ற பெயர் ஏற்பட்டது என்பர்.


🌹தழுவக் குழைந்த நாதர் என்றும் 

அழைப்பர் ஏகாம்பரநாதர் ஏலவார்குழலி🌹


சிவனார் அன்னையை நோக்கி, 


‘‘என் வலக் கண்ணும் இடக் கண்ணும் சூரிய சந்திரர்களாக ஒளி கொடுப்பதால் உலகம் சக்திமயமாகும் போதும் அதன் உயிராயிருப்பது நானே’’ என்றார். 


இதைச் சோதிக்க எண்ணி அம்பிகை  விளையாட்டாக ஐயனின் பின்னால்  நின்று அவரது இருகண்களையும் தன் கைகளினால் மூடினாள். உலகமே இருண்டுபோய்ப் 


படைப்புத் தொழிலும் நின்று போயிற்று.


இறைவனுக்குக் கணநேரம் என்பது நமக்குப் பல்லூழி காலமாகும். 


கண நேரத்தில் தேவி நடுநடுங்கிக் கையை எடுத்துவிட்ட போதிலும், இறைவன், 


அதற்குப் பரிகாரமாய் ‘‘மருமலர்க் குழலினாய் நீ மரபுளி இயற்றல் வேண்டும்’’ என்று ஆணையிட்டார்.


 (மர புளி = முறையான தவம்)


இறைவி பத்ரிகாஸ்ரமத்தில், கார்த்யாயன முனிவருக்கு மகளாய்த் தோன்றி #கார்த்யாயினி# என்ற பெயரில் வளரலானாள். 


அவளது அவதார காரணத்தை அறிந்த முனிவர் தகுந்த வயது அடைந்ததும் அன்னையைப் பல பொருட்களுடன் தென் திசைக்கு அனுப்பி வைத்தார்.


காஞ்சி வந்தடைந்ததும், முனிவர் கூறியிருந்தபடி அப்பொருட்களில் பல மாற்றங்கள் ஏற்பட்டன. 


கங்கை மணல் லிங்கங்களாகவும், விசிறி கிளியாகவும், சாமரங்கள் தோழிப் பெண்களாகவும் மாறின.


தவமியற்றத் தகுந்த தலம் இதுவே என்றுணர்ந்த அம்பிகை கம்பை நதிக்கரையில் மணல் லிங்கம் அமைத்துப் பூஜை செய்ய ஆரம்பித்தாள்.


 ‘வம்பறாச் சில’ என்று துவங்கும் திருப்புகழில் அருணகிரியார் இந்நிகழ்ச்சியைக் குறிப்பிடுகிறார்.


பார்வதியும் காஞ்சிபுரத்தில் வேகவதி/கம்பா நதிக்கரையில் ஒரு மாமரத்தின் அடியில் மணல் லிங்கம் செய்து பூஜித்தார். 


பார்வதியின் தவத்தை உலகினுக்கு அறியச் செய்ய சிவபெருமான் வேகவதி/கம்பா நதியில் வெள்ளத்தை உண்டாக்கினார்.


பார்வதி தனது மணல் லிங்கத்தை வெள்ளம் அடித்து செல்லாமல் இருக்க கட்டி அணைத்துக் கொண்டார். 


உடனே சிவபெருமான் அந்த மாமரத்தின் அடியில் தோன்று பார்வதிக்கு அருள் புரிந்து, 


இரண்டு படி நெல்லைக் கொடுத்து காமாட்சி என்ற பெயரில் காம கோட்டத்தில் 32அறங்களைச் செய்ய பணித்தார். 


பார்வதி வழிபட்ட மணல் லிங்கம் தான்# பிரித்விலிங்கம்#.


அந்த #மாமரம்#தான் ஸ்தலவிருட்சம்


#காமகோட்டம்#தான் காமாட்சி அம்மன் கோவில். 


பார்வதி கட்டித் தழுவியதால் இங்கு உள்ள சிவப்பெருமானை 


#தழுவக்குழைந்தார் #என்றும் அழைப்பர்.


சுந்தரமூர்த்தி நாயனார் சங்கிலி நாச்சியாரை மணந்தபோது "உன்னைப் பிரியேன்" என்று 


சிவனை சாட்சியாக வைத்து சத்தியம் செய்தார். அந்த சத்தியத்தை மீறியதால் அவர் கண் பார்வை இழந்தார். 


இழந்த பார்வையில் இடக்கண் பார்வையை சுந்தரர் இங்கு பதிகம் பாடி பெற்றதாக வரலாறு உண்டு.


இங்கு 


சிவபெருமான், 

ஏகம்பர், 

கம்பர், 

ஏகாம்பரேஸ்வரர், 

திரு ஏகம்பத்தழுந்த செழுஞ்சுடர், செம்பொன் மலைக்கொடி, 

தழுவக் குழைந்த திருமேனிக் கம்பர் என்றெல்லாம் பலவாறாய் போற்றப்படுகிறார்.


 #ஏகாம்பரேஸ்வரர்கோவில்# காஞ்சிபுரம்.


தாயே காமாக்ஷி உனது மலரடி சரணம்.


உலகின் முதல்வனே அகிலம் காக்கும் தந்தை  அண்ணாமலையாரே உன்‌ மலர் பாதம்‌ சரணம் . 🌿🌿

Comments

Popular posts from this blog

துஷ்ட சக்திகள் விலக Deliverance from the hold of evil spirits

தனது பக்தைக்காக ஶ்ரீலலிதா சஹஸ்ர நாம உச்சரிப்பை மாற்றிய அம்பாள்ச

பெண் குழந்தைகளுக்கு வைப்பதால் அதன் சிறப்பு).