#பஞ்சப்ரேதாஸநாஸீநா# #பஞ்சப்ரமஸ்வரூபிநீ#

 நாளைய சௌந்தயலஹரி 92வது ஸ்லோகத்திற்கான பதிவுக்கு முன்பே அம்பாள் அதே கோலத்தில் காட்சி தந்தாள்.


#பஞ்சப்ரேதாஸநாஸீநா#

#பஞ்சப்ரமஸ்வரூபிநீ#



சில விஷயங்கள் நமது மனதிற்கு இதமானதாகவுமும் மிகவும் வருடுவதற்காகவும் இருக்கும்.


அவ்வாறான நிகழ்வே இன்றைய நிகழ்வு.


தீடீரென காலை எனது நண்பரை சந்திப்பதற்கான ஏற்பாடு. 


அவரை சந்திப்பதற்கான மாலை அவரது இல்லம் நோக்கி பயணம்.


ஆனால் இன்று சங்கடஹர சதுர்த்தி வீட்டில் அருகில் விநாயகருக்கு கைங்கர்யம் செய்யவில்லையே என்று வருத்தம்.


நண்பரின் வீட்டை நெருங்கும் போது மஹாதிரிபுரசுந்திரி ஆலயம்.


அம்பாளை தரிசிக்க வேண்டும் என்ற எண்ணம். எனது நண்பர் மாலையில் திறப்பார்களா என சந்தேகம் என கூறினார்.


அதற்கு அவரிடம் அம்பாள் நிச்சயம் எனக்கு தரிசனம் கொடுப்பார் என பதில் அளித்தேன்.


அவ்வாறு நண்பரை சந்தித்து திரும்பி வரும்போது . கோவிலில் வாசலில் பூக்காரி நீ சரியான நேரத்திற்கு வந்துள்ளீர்கள்.


ஐயரு அம்பாள் சன்னதியை திறந்துக் கொண்டுள்ளார் என பதில் அளிக்கிறார்.


அவளிடம் செவ்வரளி பூ வாங்கிக் கொண்டு சந்நிதியை நெருங்கும் போது.


கோவில் ஐயர் என்னிடம் இன்று சங்கடஹர சதுர்த்தி பிள்ளையாருக்கு அபிஷேகம் உள்ளது. 


அதற்கு பாலும் மற்றும் இரவு அம்பாளுக்கு நைவேத்தியத்திற்கு பால் வாங்கி தர இயலுமா என வினாவினார்.


எனக்கு ஒன்றுமே புரியவில்லை நான் முன்பு எழும்பிய வினாவிற்கு.


அதாவது பிள்ளையாருக்கு சங்கடஹரசதுர்த்திக்கு கைங்கர்யம் செய்யவில்லையே என எண்ணியதற்கு உடனடியாக


கோவில் குருக்கள் மூலம் எனக்கு தனது பிரியமான பிள்ளைக்கு அபிஷேகத்திற்கு பால் கொடுக்கச் சொல்லி கைங்கர்யத்தில் என்னை ஈடுபடுத்துக்கிறாள்.


மேலும் நாளைய மறுநாள்  அம்பாளின் ஆசனத்தைப் பற்றிய பதிவு.


அதற்கு முன்பே பஞ்ச ப்ரேத ஆசனாவில் அமர்ந்து காட்சி தருக்கிறாள் அம்பாள்.


நான் ஒரு நிமிடம் மெய்சிலிர்த்து போனேன். 


இது எவ்வாறு சாத்தியம் என நண்பரின் வினா அதற்கு அம்பாளின் நினைவு நம்முள் இருந்தாள் இவை அனைத்தும் சாத்தியம் என பதில் அளித்தேன்.


என்னை இன்று அம்பாள் எதற்கு நண்பரை சந்திக்க வைத்தார் என்பதற்கு சொல்லாமல் பதில் தந்தாள்  அம்பாள்.


நாளை பஞ்சமி மஹாமேரு மூலமாக இன்று எனது வீட்டை வந்து அடைந்தாள்.


எல்லாம் அவளின் செயல் என்னை சரணாகதி அடைய வைத்து என்னை ஆட்க்கொள்கிறாள் என்பதே உண்மை.


#ஓம்ஶ்ரீலலிதாம்பிகையேநமஹ#.


எல்லாம் அவளே அவளில் நான் அடக்கம் .


இந்த தருணத்தில் எனது நண்பருக்கு நன்றிச் சொல்ல கடமைப் பட்டுள்ளேன்.


காரணம் அவரின் அழைப்பு இல்லையேல் இந்த அம்பாளின் காட்சி சாத்தியம் இல்லை.


இந்த கீழே உள்ள லிங்க் மூலமாக அனைத்து போட்டாகளை காணலாம்


https://photos.app.goo.gl/4jxYHzuvxysaaoiXA

Comments

  1. wonderful explanation, by combining the 3 beautiful stotram. I am not able to read from the 1st share, can you please share that link also

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

துஷ்ட சக்திகள் விலக Deliverance from the hold of evil spirits

தனது பக்தைக்காக ஶ்ரீலலிதா சஹஸ்ர நாம உச்சரிப்பை மாற்றிய அம்பாள்ச

பெண் குழந்தைகளுக்கு வைப்பதால் அதன் சிறப்பு).