மாத்ருகா பஞ்சகம் இரண்டாவது ஸ்லோகம்.
மாத்ருகா பஞ்சகம் இரண்டாவது ஸ்லோகம்.
உறவுகளில் மிக உயர்ந்த ஸ்தானம் தாய்.
அந்த தாய்க்காக இந்த ஸ்லோகத்தை சமர்பணம் செய்கிறார் ஆச்சாரியர்.
2.குருகுலமுபஸ்ருத்ய ஸ்வப்ன காலே து த்ருஷ்ட்வா
யதிஸமுசித வேஷம் ப்ராருதோ மாம் த்வமுச்சை :I
குருகுலமத ஸர்வம் ப்ராருதத்தே ஸமக்ஷம்
ஸபதி சரணயோஸ்தே மாதரஸ்து ப்ரணாம :II
அன்னையே,
நான் குருகுலத்தில் இருந்த சமயம் ஓர் நாள் விடியற்காலையில் நான் துறவறம் ஏற்றதாக கனவு கண்டு அங்கு வந்தீர்கள்.
அவ்வமயம் நான் குருசேவை நிமித்தமாக வெளியே சென்றிருக்க என்னை காணாமல் தவித்தீர்கள்.
நான் தங்கள் அனுமதியின்றி துறவறம் ஏற்று சென்றுவிட்டேனோ என்ற பயத்தில் அழுதீர்கள்.
தாங்கள் அழுவதை கண்டு குருகுலமே அழுதது.
நான் வந்தவுடன் என்னை கண்டு சமாதானம் அடைந்தீர்கள்.
அந்த தாய்பாசத்திற்கு ஈடாக எதை தர இயலும்.
எந்த ஒரு செயலாலும் அதை ஈடு செய்ய முடியாது.
அதற்காக தங்கள் பாதார விந்தங்களுக்கு என் நமஸ்காரத்தை சமர்ப்பிக்கிறேன்.
அன்போடு அதனை ஏற்று என்னை காத்தருளவேண்டும் என கூறுகிறார்.
#ஓம்ஶ்ரீமாத்ரேநமஹ#

Comments
Post a Comment