மாத்ருகா பஞ்சகம் முதல் ஸ்லோகம்
பந்தங்களில் மிக உயர்ந்தது தாய் எனும் பந்தம்.
அந்த ஐந்து ஸ்லோகங்களை இப்பகுதியில் காண்போம்.
இவை ஐந்தும் ஐம்பெரும் சாகரங்கள். இவற்றின் ஆழம் காண இயலாது.
1..ஆஸ்தாம் தாவதியம் ப்ரஸ¨திஸமயே துர்வாரசூலவ்யதா
நைருச்யம் தநுசோஷணம் மலமயீ சய்யாச ஸாம்வத்ஸரீ I
ஏகஸ்யாபிந கர்பபாரபரண க்லேசஸ்ய யஸ்ய க்ஷம :
தாதும் நிஷ்க்ருதிமுந்நதோsபி தநய தஸ்யை ஜநன்யை நம:
தாயே, நான் கருவாக உங்கள் கர்பத்தில் இருந்த சமயம் எத்தனை வேதனை அடைந்தீர்கள்.
மசக்கையால் வாந்தி எடுத்து சிரமபட்டீர்கள்.
சிசு ஆரோக்கியமாக வளர காஷாயத்தையும், மருந்துகளையும் முகம் சுளிக்காமல் உட்கொண்டீர்கள்.
சுவையான உணவை உண்ண இயலாது நாவை அடக்கி, வாயை அடக்கி, ருசி பாராமல் பத்திய உணவை ஏற்றீர்கள். தூங்கவும் இயலாது, விழித்திருக்கவும் இயலாது சிரமப்பட்டீர்கள்.
பிரசவ நேரத்தில் தாங்கொணா வேதனையில் அரற்றினீர்கள்.
சிசுவாக நான் தங்கள் அருகே விஸர்ஜனம் செய்ய, தாங்களோ முகம் சுணங்காமல் என்னை அள்ளியெடுத்து சுத்தம் செய்தீர்கள்.
நான் வளர வளர என் நலனுக்காக தாங்கள் பல தியாகங்களை செய்தீர்கள்.
இவை யாவற்றிற்கும் என்னால் ஒரு பிரதியுபகாரம் செய்ய இயலாது. அந்த பரமேஸ்வரனே மகனாக பிறந்தாலும் செய்ய முடியாது.
தங்கள் திருவடிகளில் என் சிரசை வைத்து நமஸ்காரம் செய்வதேயன்றி வேறொன்றும் செய்யும் வகையறியேன்.
இதனை ஏற்று என்னை ரக்ஷிக்க வேண்டும் என முறையிடுகிறார்.
#தாயேஜகன்மாதா#

Comments
Post a Comment