ஏன் இந்த உமையொருபாகன்?.

 உமையொருபாகன்

ஏன் இந்த உமையொருபாகன்?.

நேற்றைய முந்தைய நாள்  அபிராமி அந்தாதி பதிவு.

மூன்று கோலங்கள்.

வவ்விய பாகத்து இறைவனும் 

நீயும் மகிழ்ந்திருக்கும்,

செவ்வியும் 

உங்கள் திருமண கோலமும்,

சிந்தையுள்ளே

அவ்வியம் தீர்த்து

என்னை ஆட்கொண்ட 

பொற்பாதமும் ஆகிவந்து.

வவ்விய பாகம் - எஞ்சிய பாகம் - எது எஞ்சிய பாகம் அம்பாள் ஆட்கொண்டத்தின் மற்றொரு பாகம்.

அதாவது வாமபாகத்தின் மற்றொரு பாகம்

வலது பக்கம் - சிவன், 

உமையம்மை இருவரும் மகிழ்ந்திருக்கும் கோலம் -

அர்த்தநாரீஸ்வர கோலம்.

அம்மையப்பர் கோலம் என்றும் சொல்வர்.

கொடிய காலன் என் மேல் பாசக்கயிற்றை விடும்போது,

நம் சிந்தனையுள் இருக்கவேண்டியவை:

1. அர்த்தநாரீஸ்வர திருக்கோலம் (திருச்செங்கோடு என்னும் ஸ்தலத்தில் இக்கோலம் ப்ரசித்தி)

2. சிவன் - பார்வதி கல்யாண கோலம்

திருமணஞ்சேரி, திருவீழிமிழலை போன்ற ஸ்தலங்களில் 

இக்கோலம் ப்ரசித்தி)

3. நம் அறியாமையினை அகற்றும் அம்பாளின் பொற்பாதம்

இம்மூன்றும் தன் முன்னே நிற்க வேண்டும் என்று பட்டர் வேண்டுகிறார்.

மேலே கூறப்பட்டுள்ள 

அர்த்தநாரீச்வர கோலம், 

திருமண கோலம் ஆகியவை ஆகிய இரு கோலங்கள் அம்மை அப்பனுக்கு உயர்ந்த கோலங்கள்.

எப்பொழுது எல்லாம் அம்மை அப்பனைவிட்டு பிரிந்து இருக்காலோ அப்பொழுது அவர்கள் இணைவு நடக்கும்.

அவையாவன

மதுரை மீனாக்ஷி திருக்கல்யாணம்

காஞ்சி காமாக்ஷி தவம் அது திருவண்ணாமலையில் அர்த்தநாரீஸ்வரராக இணைவு.

சங்கரன்கோயில் ஆடி தபசு அரியும் ஹரனும் இரண்டும் ஒன்று என உணர்த்தவதற்காக.

திருவானைகா அகிலாண்டஸ்வரி அப்பனை நோக்கி தவம்.

இவை அனைத்தும் அவர்களின் இணைவே ஆகும்.

அதனால் தான் அப்பனை பாடிய திருமூலர் அம்மையும் சேர்த்து பாடினார்.

அம்மையை பாடிய பட்டர் மற்றும் சங்கர பகவத்பாதாள் அப்பனையும் சேர்த்து பாடினார்.

காரணம் உதாரணமாக 

ஒவ்வொரு வீட்டிலும் குழந்தைகளுக்கு ஏதாவது காரியம் ஆக வேண்டும் என்றால் அப்பாவிடம் கேட்கமால் அம்மாவின் மூலமாக அப்பாவிடம் கேட்பார்கள்.

அதே தான் இங்கேயும் சிவனிடம் கேட்டு பெறுவது எளிதல்ல அதற்கு மாதவம் செய்தல் வேண்டும்.

அதே அம்மையின் மூலமாக அப்பனை நாடினால் கேட்டதை பெறுவது எளிது.

அதை தான் அனைத்து மஹான்களுக்கும் செய்தனர்.

நாமும் அவ்வழியை பின்பற்றினால் நமக்கான மோக்ஷத்தை அடைவது எளிது.

இதைதான்   ஶ்ரீலலிதாசஹஸ்ரநாமம், சௌந்தர்யலஹரி மற்றும் அபிராமி அந்தாதி விளக்கிறது.

ஏன் அம்பாளை துதிக்கவேண்டும் என்ற பதிவை நாளைய பதிவாக  எனது நண்பர் திருவாளர். பிரபு சர்மா அவர்களது பதிவாக காணலாம்.



Comments

Popular posts from this blog

துஷ்ட சக்திகள் விலக Deliverance from the hold of evil spirits

தனது பக்தைக்காக ஶ்ரீலலிதா சஹஸ்ர நாம உச்சரிப்பை மாற்றிய அம்பாள்ச

பெண் குழந்தைகளுக்கு வைப்பதால் அதன் சிறப்பு).