#அறிந்ததலம்அறியாததகவல்கள்#

 #அறிந்ததலம்அறியாததகவல்கள்#



முக்தித் தலங்களில் ஒன்று, 


முக்தித் தலங்களான அயோத்தியா, வடமதுரா, மாயா, காசி, காஞ்சி, அவந்தி, துவாரகாபுரி எனும் ஏழு தலங்களில்,


தமிழ் நாட்டில் இருக்கும் ஒரே தலம் #காஞ்சி#


கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளான


 தியாகராஜ சுவாமிகள்,


 முத்துஸ்வாமி தீட்சிதர், 


சியாமா சாஸ்திரிகள் 


எனும் மூவரும் அன்னை காமாட்சியைப் பாடியிருக்கிறார்கள்.


அன்னை காமாட்சியை வேண்டி சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான சியாமா


சாஸ்திரிகள் பாடிய தமிழ்க் கீர்த்தனை,


தருணம் ஈதம்மா என்னை ரட்சிக்க


கருணாநிதியான காமாட்சி ரட்சிக்க


அனுதினமும் எந்தன் நாக்கில் உன் நாமம்


அதுவலால் மற்றொன்றும் இல்லை


என் நேமம்மனக்கவலை தீர்க்க மறு தெய்வம்


உன்னைப்பார்க்க எனக்கு உண்டோ உனக்கேற்க


இரங்கி உன் கண் பார்க்க....


.(தருணம் ஈதம்மா)


காஞ்சி காமாட்சி தன்னிடம் இருந்து இரு காமாட்சிகளைத் தோற்றுவித்தார். 


1. தபஸ் காமாட்சி. 


(காமாட்சியின் வலது பக்கத்தில்)


2. ஹேம காமாட்சி எனப்படும் பங்காரு காமாட்சி.


காமாட்சியும் ஐந்தும்; 


அன்னை காமாட்சிக்கும் ஐந்திற்கும் பல விதமான தொடர்புகள் உண்டு. 


அவற்றில் ஒரு சில, 


பஞ்ச ஆயுதங்கள்: 


ஐம்புலன்களை வசப்படுத்த 


`பஞ்ச 5’ ஆயுதங்களை ஏந்தி உள்ளார். 


நான்கு திருக்கரங்களுடன் அன்னை காமாட்சியாகத் தோன்றுவதற்கு முன்னால், 


ஐந்து வயது பாவையாக அவதரித்தார்.


ஐந்து காமாட்சிகள்: 


மூல காமாட்சி, 


தபஸ் காமாட்சி, 


ஹேமபங்காரு காமாட்சி, 


பிலம் காமாட்சி, 


ஸ்ரீசக்கர காமாட்சி.


 *மூல காமாட்சியின் ஐந்து 


திரு நாமங்கள்:* 


திரிபுரை, 


ராஜ ராஜேஸ்வரி, 


மகா காமேச வல்லபை,


காமாட்சி, 


காமகோடி.


 *தபஸ் காமாட்சியின் 


ஐந்து திருநாமங்கள்:* 


 தபஸ்வினீ, 


கனசியாமா, 


சர்வ சைவ ஆலயேஸ்வரீ, 


காமாட்சி, 


காளி.


ஹேம காமாட்சி எனப்படும் 


பங்காரு காமாட்சியின் ஐந்து திருநாமங்கள்:


 சுவர்ணாங்கீ, 


சுக ஹஸ்தை, 


சூதலிங்க வல்லபை, 


காமாட்சி, 


தர்ம தேவி. 


(மேற்சொன்ன மூன்றிலும் `காமாட்சி’ எனும் திருநாமம் இடம் பெற்றிருப்பதைப் பார்க்க வேண்டும்)


காமாட்சி இருக்கும் 


அந்த இடத்தின் ஐந்து திருநாமங்கள்:


 ஸ்ரீபுரம், 


பத்ம நாபகம்,


 ஜீவன் முக்தி புரம், 


காம கோட்டம், 


பஞ்ச பாண


நிகேதனம்.


 *பஞ்சமி தேவி:* 


 காமாட்சிக்குப் `பஞ்சமி தேவி’ என்ற திருநாமம் உண்டு. 


அப்படிப்பட்ட பஞ்சமி தேவிக்கு 1976ல் பஞ்சமியிலேயே கும்பாபிஷேகம் நடந்தது. அதுவும் 


`வசந்தபஞ்சமி’ யில் நடந்தது.


#ஆறும்காமாட்சியினிடத்தில்ஆறும்#


இங்கே அன்னை காமாட்சியின் சந்நதிக்கு முன் அமைந்துள்ள,


ஜகத்குரு ஸ்ரீஆதிசங்கரரின் சந்நதிக்கு மேல் அமைந்துள்ள ஆதிசங்கரரின் கீழே, 


ஆறு சீடர்கள் இருப்பார்கள். 


மற்ற 


இடங்களிலும், 


படங்களிலும் நான்கு சீடர்களுடன் காட்சி தரும் ஸ்ரீ ஆதிசங்கரர், 


இங்கு மட்டும் ஆறு சீடர்களுடன் காட்சி அளிக்கிறார். 


விநாயகர்,


முருகன், 


சூரியன், 


திருமால், 


சிவபெருமான், 


பராசக்தி ஆகியோரின் 


அறுவகை வழிபாடுகளை,


ஸ்ரீஆதிசங்கரரின் அருளைப் பாடி பரப்பிய 


கிரிஜாகுமாரர்,


ஹஸ்தாமலகர், 


திவாகரர்,


லட்சுமணர், 


பரமத காலானலர், 


திரிபுரா குமாரர் என்பவர்களே 


அந்த ஆறு சீடர்கள்.


மன்னர்களும் மாதாவும்: 


காமாட்சி ஆலயத்தில் தர்மசாஸ்தா கோயில் கொண்டிருப்பார்.


இவருடைய அருள்பெற்று திக்விஜயயாத்திரை செய்து, 


வெற்றி பெற்ற மன்னர் கரிகாற்சோழர். 


அவர் திக்விஜய யாத்திரைக்குப் புறப்படும் முன், 


இங்கே அன்னை காமாட்சியின் அருள் வேண்டி வந்தார்.

Comments

Popular posts from this blog

துஷ்ட சக்திகள் விலக Deliverance from the hold of evil spirits

தனது பக்தைக்காக ஶ்ரீலலிதா சஹஸ்ர நாம உச்சரிப்பை மாற்றிய அம்பாள்ச

பெண் குழந்தைகளுக்கு வைப்பதால் அதன் சிறப்பு).