கலியுகத்தில் கண்கண்ட தெய்வம் #காமாக்ஷி#

 #அறிந்ததலம்அறியாததகவல்கள்#


கலியுகத்தில் கண்கண்ட தெய்வம் #காமாக்ஷி#



இங்கே அன்னை காமாட்சியின் அருள் வேண்டி வந்தார்.


அப்போது அவர் அகக் காதில்,


 “இங்கே ஆலயத்தில் சந்நதி கொண்டுள்ள தர்மசாஸ்தாவின் கைச்செண்டினைப் பெற்றுச் செல்! 


நீ போகும் இடமெலாம் வெற்றித் திருமகள் தாண்டவமாடுவாள்” 


என்று கூறி அருள் புரிந்தார் அன்னை.


அதன்படியே கரிகாற்சோழர், தர்மசாஸ்தா சந்நதி வந்து 

விழுந்து வணங்கினார்.


அப்போது தர்மசாஸ்தா விக்கிரகத்தின் கையில் இருந்து, 

ஆசி வழங்குவதைப்போல் செண்டு கீழே விழுந்தது.


அதைக் கைக்கொண்டு திக்விஜய யாத்திரைக்குப் புறப்பட்ட கரிகாற்சோழர்,


இமயமலை வரை சென்று இமயத்தில் புலிக்கொடி நாட்டினார்.


இச்செய்தியை சிலப்பதிகார மேற்கோள் பாடலாக அடியார்க்கு நல்லார் குறிப்பிடுகிறார்,


கச்சி வளைக்கைச்சி காமகோட்டம் காவல்


மெச்சி இனிதிருக்கும் மெய்ச்சாத்தன் கைச்செண்டு


கம்பக் களிற்றுக் கரிகாற் பெருவளத்தான்


செம்பொற் திகிரி திரித்த செண்டு - என்பதே அப்பாடல்.


துர்வாசர் வகுத்துத் தந்த `சிந்தாமணி தந்திரம்’ என்ற ஆராதனை முறைப்படியே, 


இங்கு அன்னை காமாட்சிக்கு வழிபாடுகள் செய்யப்படுகின்றன.


மற்ற ஆலயங்களில் இருப்பதைப் போல, 


அன்னை காமாட்சி ஆலயத்திலும் `துவஜஸ்தம்பம்’ எனப்படும் கொடிமரம் உண்டு. 


ஆனால், இங்கே அதிகப்படியான கொடி மரம் ஒன்று உண்டு. விசேஷமானது அது.


யாராலும் அழிக்க முடியாத பந்தகாசுரன் என்பவனை அழித்த அன்னை காமாட்சியின் ஆணைப்படி,


தேவர்கள் பந்தகாசுரனின் உடலைப் புதைத்து, அதன் மேல் ஒரு ஜெய ஸ்தம்பம் எனும் தர்மஸ்தம்பம் நாட்டினார்கள். 


இதுவே அதிகப்படியான கொடிமரம்.


கருவறைக்குள் நுழையும் முன் அதிகப்படியாக இருப்பதே இந்தக் கொடிமரம். 


காமமும், காமத்தின் மறு வடிவான கோபமும் புதைக்கப்பட்ட இடம் இதுவே.


 நம் அனைவரையும் ஆட்டிப் படைக்கும் காமமும் கோபமும் நீங்க, இங்கிருந்து வேண்டுவது வழக்கம்.


காஞ்சிபுரத்தில் வாரத்தின் ஒவ்வொரு நாளும், தீர்த்த விசேஷம் உள்ளதாக கூறப்படுகிறது.


மொத்தம் ஏழு தீர்த்தங்கள் உள்ளன.


 இவைகளில் சுக்கிரவார (வெள்ளிக்கிழமை) 

தீர்த்தமாக உள்ளது.


அன்னை காமாட்சியின் ஆலயத்தில் உள்ள பஞ்ச கங்கை தான்; 


இதை உலகாணி தீர்த்தம் என்றும் கூறுவார்கள்.


இந்தத் தீர்த்தக் கரையில் ஆணும் பெண்ணுமாக இரு பூதங்கள் காவல் காப்பதைக் காணலாம்.


அதையடுத்துக் கீழ்ப்பகுதியில், 


இரு மாடங்கள் கொண்ட 

மூன்று நிலை மண்டபம் இருப்பதைப் பார்க்கலாம். 


அதன் வரலாறும் அந்த இரு பூதங்களின் வரலாறும்; 


அசுரகுணம் கொண்ட ஆண்-பெண் பூதங்களை அடக்க, 


அவர்களைக் கீழே தள்ளி அவர்களின் மீது திருவடியை வைத்து அழுத்தி நின்றார். பூதங்கள் அடங்கவில்லை.


மறுபடியும் அவர்களைக் கீழேதள்ளி, அவர்களின் மீது சப்பணம் இட்டு அமர்ந்தார் மகாவிஷ்ணு.


அப்போதும் பூதங்கள் அடங்க வில்லை.முடிவாக, 


அவர்களைக் கீழே தள்ளிய பகவான், தம் திருமேனி முழுதும் அவர்களின் மீது படும்படியாக அவர்களின் மீது சயனம் கொண்டுவிட்டார்.


அலையாழி அறிதுயிலும் மாயனல்லவா? 


பகவானின் திருமேனி முழுதும் பட்டதும் பூதங்களின் கொட்டம் அடங்கி, மன்னி்ப்பு வேண்டின.


குளக்கரையில் உள்ள இரு பூதங்களும்; 


அதன்கீழ்ப்பகுதியில் உள்ள மூன்று மாடங்களில் பகவானின் நின்ற, அமர்ந்த, சயனித்த திருக்கோலங்களில் தரிசனம் தரும் மகாவிஷ்ணுவும், 


இவ்வரலாற்றை விவரிக்கின்றன.


வெள்ளிக்கிழமை அன்று இத்திருக்குளத்தில் மூழ்குவோரின் பாவங்கள் எல்லாம் தீரும் என்பது சிவபெருமான் வாக்கு.


 *காமாட்சியின் இருப்பிடம்:* 


பந்தகாசுரனை சங்காரம் செய்த அன்னை காமாட்சியின் அருளாணைப்படியே அமைக்கப்பட்டது. 


அன்னை காமாட்சி, 


ஸ்ரீ சக்கரம், பிலாகாசம் உள்ள கர்ப்பக்கிரகம் எனும் கருவறை,


அர்த்த மண்டபம் எனும் அனைத்தும், காயத்ரி மண்டபத்தை ஆதாரமாகக் கொண்டிருக்கின்றன. 


அற்புதமான அந்த அமைப்பின் விவரங்கள்: 


முன் சொன்ன `ஜய’ஸ்தம்பத்தில் இருந்து பிலாகாசத்திற்கு வாசல் அமைத்தார்கள். 


காயத்ரி கதிர்கள் பரவிய எல்லைக்குள், 


அதன் 24 அட்சரங்களுக்கும், எழுத்துக்களுக்கும், 


24 தூண்களை எடுத்து, காயத்ரி மண்டபமாக ஆக்கினார்கள்.


வேதங்களையே இந்த மண்டபத்தின் சுவர்களாக எழுப்பினார்கள்.


இவ்வாறு வேதங்கள், வேத சாரமான காயத்ரி என்பவைகளால் ஆன கோயில் இது.


 *சக்திகள் அனைவரும்:* 


இந்த ஆலயத்தில் 


ஞான சரஸ்வதி, 


லட்சுமி, 


அரூப லட்சுமி,


சியாமளா, 


வாராகி, 


அன்னபூரணி, 


அர்த்தநாரி, 


ஆகிய சக்திகள் அனைவரும் இருக்கிறார்கள்.


பராசக்தியின் அம்சங்கள் அனைத்தையும் தரிசிக்க, இக்கோயில் ஒன்றே போதும்.


மந்திரசக்தி, 


மந்திர ஸித்தி, 


மழலைச் செல்வம், 


கல்வி, 


கலைகள், 


செல்வம், 


ஆரோக்கியம், 


கவிபாடும் ஆற்றல் என


அனைத்தையும் அருளும் அன்னை காமாட்சியை வணங்குவோம்! நல்லவைகளுடன் இணங்குவோம்!


#ஓம்ஶ்ரீகாமாக்ஷியைநமஹ#.

Comments

Popular posts from this blog

துஷ்ட சக்திகள் விலக Deliverance from the hold of evil spirits

தனது பக்தைக்காக ஶ்ரீலலிதா சஹஸ்ர நாம உச்சரிப்பை மாற்றிய அம்பாள்ச

பெண் குழந்தைகளுக்கு வைப்பதால் அதன் சிறப்பு).