மஹாபெரியவா
மஹாபெரியவா
பங்காரு காமாக்ஷி நாலு கையோட இருக்கல்லை. ஒரு கையைத் தொங்கப் போட்டுண்டு,
ஒரு கைல கிளியை வெச்சுண்டு, நின்னுண்டு இருப்பா...மீனாக்ஷி மாதிரியே..."*
1961 ல் சங்கர ஜெயந்திக்கு மதுரைக்கு விஜயம் பண்ணிய பெரியவர்,
மீனாக்ஷி அம்மனுக்கு முத்துநகை ஒன்றை சாத்தினார். அம்பாளுக்கே முத்துநகை என்ற நாமமும் உண்டு.
அங்கயற் கண்ணியின் சந்நிதியில் பெரியவர் கண்களில் நீர் சொரிய நின்றது பேரானந்தமான காக்ஷி!
அன்று அம்பாளின் சந்நிதியில்
அவள் முன்னால் நின்றதும் என்ன அனுபவமோ!
யாருக்குத் தெரிந்துகொள்ள முடியும்?
தெரிந்தாலும் எதை புரிந்து கொள்ளமுடியும்?
முப்பத்தி மூணு வர்ஷங்களுக்கு முன்னால் அவர் ப்ரவேசித்த சந்நிதி!
"நம்ம மடத்துக்கு அதிதேவதை அம்பாள் காமாக்ஷி.
அவதான் சக்ரவர்த்தினி
லலிதாம்பா......மீனாக்ஷி அவளுக்கு மந்த்ரி.... மந்த்ரிணின்னு சொல்றோமே,
அந்த ஷ்யாமளாம்பாள்தான் மீனாக்ஷி!
அவளோட சேனாதிபதி திருவானைக்கா அகிலாண்டேஸ்வரிதான்!"
இதில் விந்தையான விஷயம் பெரியவர் முதன்முதலாக அகிலாண்டேஸ்வரியையும், மீனாக்ஷி அம்மனையும் தர்சித்த பின்,
[1922 லும் 1928 லும் மதுரை வந்தபோது மீனாக்ஷி அம்மனை தர்சனம் பண்ணினார்].
1931 ல்தான் முதன்முறையாக காஞ்சிபுரம் சென்று காமாக்ஷி அம்மனை தர்சனம் பண்ணினார்.
1908 ல் பட்டத்துக்கு வந்த புதுசில் நடந்த சதுர்மாஸ்யத்துக்கு
அப்புறம் தஞ்சாவூர் பங்காரு காமாக்ஷியை தர்சனம் பண்ணிவிட்டு அவர் சொன்னது,
"பங்காரு காமாக்ஷியோட சந்நிதில காமாக்ஷியையே மீனாக்ஷியாத்தான் பாத்தேன்..." என்று புதிர் போட்டவர்,
"பங்காரு காமாக்ஷி நாலு கையோட
இருக்கலை....
ஒரு கையை தொங்கப்போட்டுண்டு ஒரு கைல கிளியை வெச்சுண்டு நின்னுண்டு இருப்பா.....
மீனாக்ஷி மாதிரி ..." என்று சொல்லிப் புதிரை அவிழ்த்தார்.
ஆதி சங்கரர் அகிலாண்டேஸ்வரிக்கு சேனா நாயகிக்கான கிரிசக்ர தாடங்கம் அணிவிக்காமல்,
அவளை ராணி லலிதையாகவே தர்சித்து, ஸ்ரீசக்ர தாடங்கமே அணிவித்திருக்கிறார்.
பெரியவருக்கும் மீனாக்ஷி என்றாலே அலாதி பக்தி, நெகிழ்ச்சி. அவளைப் பற்றிச் சொல்லும்போதே மெழுகாக உருகி விடுவார்.
1961 ல் அவள் சந்நிதியில் நின்றவுடன் அவராலேயே அவரைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாதபடி ஆனந்தப் பரவசம் பெருக்கெடுத்தது! முதலில் வைத்த கண் வாங்காதபடி தாயை நோக்கியபடி கற்சிலைபோல் நின்றார்.
ஆனால், அர்ச்சனை
செய்யும் பட்டர் உச்ச கோஷத்தில் தொடங்கி ராஜ மாதங்கியின் முதல் நாமத்தை சொல்லி அவளுடைய பாதபங்கஜத்தில் குங்குமார்ச்சனை செய்யக் குங்குமத்தை தூவினாரோ இல்லையோ....
பொங்கி வெடித்தது பெரியவரின் ஆனந்த பரவசம்!
பார்வை நிலைகுத்திட்டு நின்றது! நயனங்களிலிருந்து தாரை தாரையாக கண்ணீர் பெருக்கெடுத்தது!
கண் மட்டுமா பொழிந்தது? அவருடைய ஆவியே உருகி உடலை உருட்டிப் புரட்டிப் பிழிந்து கண்வழியாக மடை பெருக்குவது போல,
அவருடைய திருவுடல் முழுதும் படபடவென்று ஆட ஆரம்பித்தது! புயல் காற்றில் சிக்கிய மெல்லிய சருகுபோல!
பெரியவரை யாருமே தொட்டதில்லை, கூடக் கைங்கர்யம் பண்ணும் பாரிஷதர்கள் முதற்கொண்டு!
விழுந்து விடப்போகிறாரே! என்று அஞ்சிக் கூட வந்தவர்கள் ஓரளவு நெருக்கமாக, அதே சமயம் அவரைத் தொடாமல் அவரைச் சுற்றி அரண்போல் நின்று
கொண்டனர்.
"என்பெலாம் உருகியுக்கிட்டு என்னுடை நெஞ்சமென்னும் அன்பினால் ஞானநீர் கொண்டு ஆட்டுவன் அடியனேனே"
என்று ஆழ்வார் பாடியதில், அன்பு என்பது த்வைதமான பக்தி. இங்கே பெரியவா என்னும் அத்வைத ஞானமலை தன் ஞானநீரால் தனக்கே அபிஷேகம் பண்ணிக்கொண்ட பேரானந்தக் காட்சியை நாம் மானசீகமாகவாவது கற்பனை பண்ணிக்கொண்டு நாம்
ஜென்மத்தை கடைத்தேற்றுவோம்.
மஹாபெரியவா திருவடிக்கே...
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
.jpeg)
Comments
Post a Comment