மாத்ருகா பஞ்சகம் நான்காவது ஸ்லோகம்.
மாத்ருகா பஞ்சகம் நான்காவது ஸ்லோகம்.
தாய் என்பவள் தன்னலம் பாராமல் நம்மை வளர்க்கிறாள்.
அந்த தாயிற்கு செய்ய வேண்டிய கடமை இந்த மகனுடையது.
அதற்காக இந்த ஸ்லோகத்தை சமர்ப்பிக்கிறேன்.
4.முக்தாமணி ஸ்த்வம் நயனம் மமேதி
ராஜேதி ஜீவேதி சிரம் ஸுதத்வம் I
இத்யுக்தவத்யா ஸ்தவ வாசி மாத:
ததாம்யஹம் தண்டடுலமேஷ சுஷ்கம் II
தாயே,
என்னை, முத்தே, மணியே கண்ணே என பலவாறு கொஞ்சி மகிழ்ந்தீர்கள்.
நல்ல பழக்கங்களை தங்கள் அமுத மொழிகளால் புகட்டினீர்கள்.
பலவிதமாக பாராட்டி ஆனந்தம் அடைந்தீர்கள்.
அத்தகைய அன்பான தங்களுக்கு என்னால் கொடுக்க முடிந்தது இந்த காய்ந்த வாய்க்கரிசி மட்டுமே. இதனை ஏற்று என்னை ஆசீர்வதிக்க வேண்டும் என கதறுகிறார்.

Comments
Post a Comment