உடல்உயிர்ஆன்மா - பகுதி5.

 #உடல்உயிர்ஆன்மா - பகுதி5.



உதாரணமாக கடலில் வாழும் உயிரினங்களின் உடல், 


நீரில் வாழ்வதற்கு ஏற்பவே அமைந்திருக்கின்றது.


உயிர் அந்த உடலினை இயக்குகின்றது. 


நீரில் இருக்கும் வரை அதன் உடலினை உயிரானது அழியாது பாதுகாக்கின்றது. 


அவ்வுடலினுள் வாழும் ஆன்மாவானது அவ்வுடல் வாழ்வதற்குரிய திறனைக் கொடுக்கிறது. அதாவது கண்கள் மூலமாக இரையைக் கண்டறிந்து, அதனைத் தேடிச் சென்று எடுத்துக் கொள்ளும் ஆற்றலை ஆன்மா கொடுக்கிறது. 


எதிரியிடமிருந்து தப்பித்துக் கொள்ளும் ஆற்றலை ஆன்மா கொடுக்கிறது.


ஆனால் அதே உயிரினம் எப்பொழுது நீரில் இருந்து வெளியேறி தரைக்கு வருகின்றதோ, அப்பொழுது அந்த உயிரினால் அந்த உடலை இயக்க முடியாதிருக்கும். 


காரணம் தரையில் இருந்து இயங்க அந்த உடலுக்கு ஆற்றல் இல்லை. இந்நிலையில் ஆன்மாவானது, 


அந்த உடலின் உறுப்புகளை தன்னால் இயன்ற அளவு பயன்படுத்தி மீண்டும் நீரினுள் செல்ல முயற்சிக்கும். 


ஆனால் மீண்டும் நீரினுள் செல்ல முடியாது போகும்போது அவ்வுடலின் உறுப்புக்கள் ஓவ்வொன்றாக இறந்து (உயிரற்றுப்போய்) செயலற்றுப்போக அவ்வுடலிலிருந்து ஆன்மா வெளியேறும். 


இதுவே மரணம் என அழைக்கப்படும்.


இதிலிருந்து புரிந்து கொள்ளக் கூடியது 


என்னவென்றால், ஒரு உடலின் உள்இயக்கம் அதாவது இதயத் துடிப்பு, சமிபாடு, சிறுநீரக செயற்பாடு போன்ற உள்ளக செயற்பாடுகள் அவ்வுயிரினத்தின் அறிவுக் கெட்டாதவாறு உயிருள்ள அங்கங்களால் செயற்படுத்தப் படுகிறது. 


ஒருவருக்கு சிறுநீரகங்கள் செயலற்றுப் போவதென்பது அவ்வங்கம் (சிறுநீரகம்) எதோ காரணத்தினால் உயிரற்று இறந்து விடுகிறது என்று அர்த்தமாகும்.


ஆனால் அவ்வுடலில் ஆன்மா இருந்துகொண்டே இருக்கிறது. இப்போது உயிருக்கும் ஆன்மாவிற்கும் இடையில் உள்ள வேறுபாட்டை விளங்கிக் கொள்ளக் கூடியதாக இருக்கிறது.


இன்னொரு உதாரணத்தினைப் பார்ப்போம். ஒருவர் சுவாசிக்கிறார்.


அது இயற்கையாக நடைபெறும். தூக்கம், மயக்கநிலை எல்லாவற்றிலும் சுவாசம் நடைபெறும். 


இது உயிருள்ள சுவாசப்பையில் நடைபெறும். ஆன்மா அதனைப் பற்றிச் சிந்திப்பதில்லை. ஆனால் நாம் யோகம் செய்யும்போது அதாவது மூச்சுப் பயிற்சி செய்யும்போது பல வழிகளில் அந்த மூச்சைக் கட்டுப்படுத்துகிறோம். இப்போது சுவாசம் ஆன்மாவினால்க் கட்டுப்படுத்தப்படுகிறது.


இதற்கு, நாம் அன்றாடம் உபயோகிக்கும் வாகனத்தினை உதாரணமாக எடுத்துப் பார்ப்போமாக இருந்தால், வாகனம் உடல் என்றும் அவ்வாகனம் இயங்க தேவையான சக்தி எரிபொருளினால்க் கொடுக்கப்படுகிறது. அவ்வாகனத்தை ஒரு மனிதன் இயக்குகிறான். இங்கு வாகனம் உடலுக்கும் அதக்குச் சக்தி கொடுக்கும் எரிபொருள் உயிர் எனவும் அவ்வாகனத்தை ஒரு இலக்கு நோக்கி ஓட்டுபவர் (இயக்குபவர்) ஆன்மா என்றும் உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம்.

Comments

Popular posts from this blog

துஷ்ட சக்திகள் விலக Deliverance from the hold of evil spirits

தனது பக்தைக்காக ஶ்ரீலலிதா சஹஸ்ர நாம உச்சரிப்பை மாற்றிய அம்பாள்ச

பெண் குழந்தைகளுக்கு வைப்பதால் அதன் சிறப்பு).