உடல்உயிர்ஆன்மாபகுதி6
#உடல்உயிர்ஆன்மாபகுதி6
.
புல்லில் இருந்து மனிதன் வரையுள்ள அத்தனை உயிரினத்திலும்
ஆன்மா வாழ்கிறது.
அதாவது ஒரு உடல் உயிருடன் இருக்கும் வரை ஆன்மாவானது அவ்வுடலில் வாசம் செய்கிறது.
ஒரு உயிருடல் செயற்படும் தன்மை அற்றுப் போகும் போது,
ஆன்மாவானது தனது அறிவுத்திறனைப் பயன்படுத்தி அவ்வுயிருடலைத் தக்க வைத்துக் கொள்ளப் (பாதுகாக்கப்) போராடும். முடியாத போது அவ்வுடலில் வாசம் செய்யும் ஆன்மா வெளியேறுகிறது என்பதே உண்மையான கோட்பாடாகும்.
இதுவே #மரணம் என்று அழைக்கப்படுகிறது.
இதற்கு ஒரு உதாரணமாக
ஒரு மான் காட்டில் தூங்குகின்றது என்று எடுத்துக் கொள்வோம்.
தூக்கத்தின்போது அதன் ஐம்புலன்களும் செயலற்ற (அறிவற்ற) நிலையில் இருக்கும்.
அப்போது அவ்வுடலில் வாசம் செய்யும் ஆன்மாவானது உடலுடன் தொடர்பற்ற நிலையில் இருக்கும்.
அப்போது ஒரு புலி வந்தால் அப்படியே அம்மானைக் கொன்று உண்ணும்.
இந்நிகழ்வு அவ்வுடலில் இருந்த ஆன்மாவின் அறிவுக்கு எட்டாமல் நடை பெறுவதால் ஆன்மாவினால் அவ்வுடலைக் காப்பாற்ற முடியாமல் போய்விடுகிறது.
ஆனால் அம்மான் சுயநினைவில் இருந்தால் அங்கு வாசம்செய்யும் ஆன்மாவானது அம்மானின் ஐம்புலன்களைப் பாவித்து தனக்கு நடைபெற இருக்கும் ஆபத்திலிருந்து தனதுடலைக் காப்பாற்றிக் கொள்ள முயற்சிசெய்யும்.
ஆன்மா என்பது,
தான் வாழ்ந்து கொண்டிருக்கும் உடலின் தன்மைக்கு ஏற்றவாறு அவ்வுடல் கொண்டுள்ள புலன்களைப் பயன்படுத்தி,
அப்புலன்களின் மூலமாக அவ்வவ் உயிரினத்தின் தகைமைக்கு ஏற்றவாறு சூழலை,
சூழ்நிலையை அறிந்து உணர்ந்து கொள்ளும். அதன்மூலமாக உலக நாட்டத்தில் ஈடுபடும்.
இதுவே பகுத்தறிவு எனப்படுகிறது.
உதாரணமாக
ஒரு மீன் பசி வரும்போது கல்லையும் உண்ணும். ஒரு நாய்க்கு கல்லாலான எலும்பும் ஒரு உண்மையான எலும்பும் வைக்கும்போது அது தனது பகுத்தறிவைப் பயன்படுத்தி கல்லிலாலானான எலும்பை உண்ணாது.
எனவே பகுத்தறிவு என்பது உலகிலுள்ள அத்தனை ஜீஎவராசிக்கும் அதனதன்
இயல்புக்கு ஏற்றவாறு உண்டு.
எனவே பகுத்தறிவு என்பது எல்லா உயிரினத்துக்கும் அதனதன் தன்மைக்கு ஏற்றவாறு அமையும். பகுத்தறிவு என்பது மனிதர்களுக்கு மட்டுமே உள்ளது என்பதும் அதுவே தான் ஆறாவது அறிவு என்பதும் சரியான கூற்றல்ல
விலங்குகளின் பகுத்தறிவுக்கு
இன்னொரு உதாரணமாக,
ஒரு கன்றுக்குட்டி அழும் குரல் கேட்டு தூரத்தில் நின்று புல் மேயும் அதன் தாய்ப்பசு ஓடிவந்து பால் கொடுக்கும். பல மாடுகள் மந்தையாக நின்று மேய்ந்துகொண்டு நின்றாலும் அந்தக்கன்றின் தாய் மட்டும் தன் குட்டியின் குரலை பகுத்தறிந்து ஓடிவந்து அக்குட்டிக்குப் பால் கொடுக்கும்.
இப்படியாக பகுத்தறிவுக்குப் பல உதாரணங்கள் எடுத்துக்கொள்ள முடியும்.
இவ்விடத்தில் பகுத்தறிவுக்கு இன்னொரு உதாரணமாக
நாம் வீட்டில் வளர்க்கும் ஒரு பூனை அல்லது ஒரு நாயின் பகுத்தறிவை ஒரு மனிதனின் பகுத்தறிவுடன் பின்வருமாறு ஒப்பிட்டுப் பார்க்கலாம்.
அதாவது ஒரு பிறந்த மனித குழந்தையும் ஒரு நாயின் குழந்தையும் (குட்டி) அறிவில் ஒரேமாதிரியாகவே செயல்படும். அதாவது பசி வந்தால் கத்தும்.
தாய் உணவு (பால்) கொடுக்கும். இரு குழந்தைகளும் வளர்ந்து மூன்று அல்லது நான்கு வயதுப் பருவத்தினை எட்டும்வரை இரு குழந்தைகளது செயற்பாடும் ஒரே மாதிரியாகவே தென்படும்.
உண்ணும், உறங்கும், ஓடி, ஆடி விளையாடும். சாதி இன மத பேதம் இல்லாமல் எல்லோருடனும் பழகும்.
கள்ளம், கபடம், சூது, வாது இல்லாமல் எல்லோருடனும் பழகும். தன்னை அணைத்தவர்களுன் விசுவாசமாக இருக்கும். ஆனால் நாய்க்குட்டி வளர்ந்தாலும் அதன் அறிவு வளர்ச்சி அத்துடன் மட்டுப் படுத்தப்படுகிறது.
அதாவது ஒரு நாயின் அறிவு வளர்ச்சினை மூன்று அல்லது நாலு வயதுக் குழந்தையின் அறிவு வளர்ச்சியுடன் மட்டுமே ஒப்பிட முடியும். இதனால்த்தான் நாயினை நன்றியுள்ள மிருகம் என அழைக்கிறோம்
ஆனால் குழந்தை வளருகிறது. அதன் அறிவு வளர்ச்சியும் வளருகிறது. பல கோணங்களில் சிந்திக்கின்றது அதன் சிந்தனைகளை ஐம்புலன்கள் வாயிலாகவே வெளிப் படுத்துகின்றது.
ஏனைய விலங்குகளில் இருந்து மனிதனின் பகுத்தறிவு பல படிகளில் முன்னேறி இருந்தாலும் மனிதனின் இக்குணாதிசயம் ஐந்தறிவு விலங்கு களுக்குள்ளேயே அடங்குகின்றது.
மனிதன் ஏனைய உயிரினங்களை விட மேலானவன். பாவ புண்ணியம் அறிந்தவன். மனிதர்கள் ஆறு அறிவு படைத்தவர்கள். இந்நிலையிலேதான் ஆறாவது அறிவு என்றால் என்ன என்ற கேள்வி எழுகின்றது.

Comments
Post a Comment