உடல் உயிர் ஆன்மா என்பது என்ன பகுதி-8.
உடல் உயிர் ஆன்மா என்பது என்ன பகுதி-8.
உதாரணமாக
ஒரு மரம் நூறு ஆண்டுகள் வாழும் ஆனால் அதிலுள்ள கலங்கள் புதிய கலங்களை உருவாக்கிய பின்னர் முதிர்ந்து இறந்து விடுகின்றன, ஒரு கலத்தின் வாழ்க்கைக் காலம் ஒரு வாரமாகக்கூட இருக்கலாம்.
உதாரணமாக
மனிதரில் குருதிக் கலங்கள் புதிய குருதியை (இரத்தத்தை) உருவாக்கிக் கொண்டிருக்கும் ஒரு கட்டத்தில் அவை இறந்து போகும்.
அதுபோல தோலில் உள்ள சில கலன்கள் இறந்து தலை முடியாகவும், நகமாகவும் வளர்கின்றன.
இதிலிருந்து நாம் ஒன்றை விளங்கிக் கொள்ள வேண்டும்
ஒரு உயிரில் இருந்துதான் இன்னொரு உயிர் பரிணமிக்க முடியும்.
அதாவது உடல் உயிரோடு இருக்க உயிர் தேவை.
எனவே எமது உயிர் எமது மூதாதையரின் இருந்து வந்ததாகும். எனவே எமது குணாதிசயங்களும் எமது பரம்பரையை ஒத்ததாக இருக்கும்.
இதன் அடிப்படையிலேயே #DNATest” மூலமாக ஒருவருடைய பரம்பரை கண்டுபிடிக்கப் படுகிறது
இந்த முறையை விளங்கிக்கொள்ள
இன்னொரு உதாரணமாக நெருப்பை எடுத்துக் கொள்ளலாம்.
அதாவது ஒரு இடத்தில் எரியும் நெருப்பில் இருந்து அதனைக் கொளுத்தி எடுத்து இன்னொரு இடத்தில் அல்லது பல இடத்தில் எரிய வைக்கலாம்.
அவ்வாறே உயிரும் ஒன்றிலிருந்து ஒன்றாக தொடர முடியும்.
அவ்வாறே ஒரு உயிர் உடல் இன்னொரு உயிர் உடலை உருவாக்குகிறது.
அதாவது ஒரு ஆணின் உயிருள்ள விந்துவும் ஒரு பெண்ணின் உயிருள்ள முட்டையும் இணைந்து அதன் DNA யின் தன்மைக்கு ஏற்றவாறு ஒரு உயிர்உடலை உருவாக்குகிறது.

Comments
Post a Comment