எது பரம்பொருள்

 எது பரம்பொருள்


.


#விநாயகனைச் சிவப்பரம் பொருளின் மூத்த மகன் என்றும் 


#முருகனை அப்பரம் பொருளின் இளைய மகன் என்றும் கூறுவதுபோல் 


#அம்பாளை அல்லது #சக்தியை அப் பரம்பொருளின் மனைவி என்று சிலர் உண்மை அறியாமல் கூறுவர்.


அம்மை அல்லது அம்பாள் என்கின்ற வடிவம் சிவப்பரம் பொருளின்


 மனைவியோ 


அல்லது


விநாயகன் முருகன் 


என்ற கடவுளர்களுக்கு அன்னையோ அல்ல. 


எங்கும் எதிலும் நீக்கமற


 நிறைந்திருக்கும் 


சிவம் என்கின்ற பரம்பொருள் 


ஓசை வடிவம் தாங்கி வந்த போது #விநாயகர் என்றும் 


அறிவு வடிவம் தாங்கி வந்தபோது #முருகன் என்றும் அழைக்கப் படுவதாய் அறிவோம்.


அதைப்போன்றுதான் தன் 

சிறப்பு நிலையில்


உண்மை, 


அறிவு, 


இன்ப வடிவாய் 


இருக்கின்ற பரம்பொருள் பொதுநிலைக்கு உயிர்களுக்கு அருள்புரிவதற்காக எடுத்த இன்னொரு  வடிவம் #அம்பாள் வடிவம்.


தமிழர்களைப் போன்று பெண்களுக்கு உயரிய இடத்தைக் கொடுத்த பெருமை வேறு யாருக்கும் கிடையாது. 


தமிழர்கள், 


கங்கை, 


யமுனை,


 காவிரி, 


சரசுவதி என்று ஆறுகளுக்கெல்லாம் பெண்களின் பெயர்களைக் கொடுத்தார்கள். 


பிறந்த மண்ணுக்குத் தாய் நாடு என்று சொன்னார்கள். 


ஈன்ற தாய் பேசும் மொழியைத் தாய்மொழி என்றார்கள். 


அதற்கெல்லாம் முத்தாய்ப்பு வைத்ததுபோல பரம்பொருளின்


 ஆற்றலுக்கு, 


பலத்திற்கு,


சக்திக்கு, 


அருளுக்கு அம்மை, 


#அம்பாள் என்று பெண்வடிவம் கொடுத்திருக் கிறார்கள் தனித்தன்மை வாய்ந்த தமிழர்கள்.


சிவப்பரம்பொருள் தன் இயற்கையான நிலையிலிருந்து முதலில் தன் அருளை வெளிப்படுத்தியே 


பின்பு ஓசையாகவும் ஒளியாகவும் முதலில் தன் அருளை வந்து நமக்கு அருள் பாலிக்கின்றது என்பதனைச் சைவ நூல்கள் கூறும். 


அப்படி இறைவனிடமிருந்து வெளிப்படும் அருள் 


ஒரு நல்ல அம்மாவைப் போன்று கருணையே வடிவாய் இருந்ததினாலே அவ்வருளுக்கும், 


ஆற்றலுக்கு, சக்திக்கு அம்மை அல்லது #அம்பாள் என்று பெயரிட்டு வழிபட்டனர் நம் முன்னோர். அவ்வருளுக்குப் பெண் வடிவமும் கொடுத்தனர். 


– திருச்சிற்றம்பலம் –

Comments

Popular posts from this blog

துஷ்ட சக்திகள் விலக Deliverance from the hold of evil spirits

தனது பக்தைக்காக ஶ்ரீலலிதா சஹஸ்ர நாம உச்சரிப்பை மாற்றிய அம்பாள்ச

பெண் குழந்தைகளுக்கு வைப்பதால் அதன் சிறப்பு).