பரபிம்மத்தின் சக்தியானது ,அம்பாள்

 #நேற்றுஇந்தஉலகேஅம்மையும்அப்பனும் 

என பதிவிட்டு இருந்தேன்.

அதற்கு காரணம் சாக்த தத்துவத்தின் படி 

பரபிம்மம் அசையாது யோக நிஷ்டையில் ப்ரளய காலத்திற்கு பிறகு இருக்கும்.


பரபிம்மத்தின் சக்தியானது ,



அது பரபிரம்மத்திலிருந்து வெளிப்பட்டது.


எதற்காக பரபிரமம் யோக நிஷ்டையிலிருந்தால்,


சிருஷ்டியை யார் செய்வது.


அதனால் பரபிரம்மத்தை சலனப்படுத்தி ச்ருஷ்டியை ஏற்படுதுவது அம்பாள் என்கிறது சாக்தம்.


எனவே அம்மையும் அப்பனும் இருவரும் இணைந்தது தான் இந்த உலகம் என்கிறார்கள் ஞானிகள்.


எனவே ஒன்றிலிருந்து மற்றொன்று வெளிப்பாட்டை விளக்கவே.


#அர்த்தநாதீஸ்வரர் தத்துவம் .


அதுவே #சிவசக்தி ஐக்கியம்.


இதை தான் சங்கர பகவத் பாதாள் சௌந்தயலஹரி முதல் பாடலில் விளக்கியுள்ளார்.


சிவ: சக்த்யா யுக்தோ


 யதி பவதி சக்த: 


ப்ரபவிதும்


ந சேதேவம் தேவோ ந கலு குசல:


 ஸ்பந்திதுமபி


அதஸ்த்வாம் ஆராத்யாம்


 ஹரிஹரவிரிஞ்சாதிபிரபி


ப்ரணந்தும் 


ஸ்தோதும் வா கதமக்ருத புண்ய:


 ப்ரபவதி.


சிவசக்தி யுக்தோ


 (சிவ: சக்த்யா யுக்தோ) என்பது ஆதிசங்கரரின் சௌந்தர்ய லஹரி முதல் ஸ்லோகத்தின் தொடக்கம்.


 சக்தி (அருள்/ஆற்றல்) உடன் இணைந்தால் மட்டுமே சிவன் (செயல்) 


உலகைப் படைக்க, காக்க, இயக்க முடியும் என்றும், 


இல்லையேல் அவர் அசையக்கூட முடியாது என்றும் இது கூறுகிறது.


இது சிவனும் சக்தியும் ஒன்றே என்ற அத்வைத தத்துவத்தை விளக்குகிறது. 


இதை விளக்கவே திருசெங்கோட்டில் மற்றும் திருவண்ணாமலையில் அர்ததநாதீஸ்வரர் தத்துவம்.


அதேபோல் அம்பாள் வேறு நாரயணன் வேறு அல்ல.

 அதனால் சங்கரநாரயணன் சொரூபம். இதை அம்பாளுக்கு விளக்குவது போல் நாம் அனைவரும் அறிவே சங்கரன்கோவிலில் சங்கரநாரயணன் சொரூபம்.

இதன் பொருள் ஒன்றில் அனைத்தும் அடக்கம். அது எது அதுவே பரப்பொருள் அதிலிருந்து வெளிப்பட்டதே இந்த ஜீவாத்மா . அது கடையில் ஒடுக்கிற இடமே பரமாத்மா.

Comments

Popular posts from this blog

துஷ்ட சக்திகள் விலக Deliverance from the hold of evil spirits

தனது பக்தைக்காக ஶ்ரீலலிதா சஹஸ்ர நாம உச்சரிப்பை மாற்றிய அம்பாள்ச

பெண் குழந்தைகளுக்கு வைப்பதால் அதன் சிறப்பு).