அம்பாளின்திருவடிதாமரை
#அம்பாளின்திருவடிதாமரை
இதுகாரும் அபிராமி பட்டரின் #அபிராமிஅந்தாதி89பாடல்கள் நாம் கண்டு களித்தோம்.
அதில் அபிராமி பட்டர் எங்கே எதைப் பற்றி பேசினாலும் அவர் கடைசியில் அம்பாளின் திருப்பாதத்தை இருக்கப் பற்றி இருப்பார்.
மஹான்கள் நன்கு உணர்ந்தவர்கள் ,
அவர்களுக்கு அழிக்கின்ற தேகம் முக்கியமில்லை.
அதில் உறைக்கின்ற ஆன்மா தான் முக்யம்.
அதனால் பட்டரின் மனம் முழுவதும் அம்பாளின் திருபாதம் மட்டும் தெரியும் தவிர வேறு எதுவும் அவருக்கு பொருட்டல்ல.
இதை தான் சங்கர பகவதாபாதாள் தனது
#90வதுசௌந்தயலஹரிஸ்லோகத்தில்
அறுகாலி வண்டுப் போல் நான் முழுவதும் உனது திருபாதத்தில் ஒடுங்கவேண்டும் என்று கூறி இருப்பார்.
நிராதாராம் தத்வா
புவனபதிக்ருத் பிரத்யயமகி
கதம் வா மன்யேதா த்ருபதமபி தத்பாதயுகளம்
இதம் புத்ரீகாரம் ப்ரதிசதி
ஸுதார்த்ராத்ருபதயோ
பவத்யத்யாஸக்தம் பஜதி
மதுபத்வம் வசகதா
அம்பிகையின் பாதங்கள்,
பக்தர்களின் நியாயமான ஆசைகளை
(சத்பாதம்)
#பொருள்
நிறைவேற்றுவதில் தேன் போன்ற கருணையுடன் திகழ்கின்றன.
அந்த பாதங்கள்,
அகங்காரம் இல்லாதவர்களுக்கு ஆதரவாகவும்,
அவர்களின் அறியாமை மற்றும் வறுமையை நீக்கி,
அவர்களுக்கு அருள்புரியும்,
இந்த ஸ்லோகம் கூறுவது போல,
பாதங்களை சரணடைபவர்களுக்கு வண்டு போன்ற பக்தியை அளிக்கிறது.
ஸ்லோகத்தின் முக்கியத்துவம்:
பசி, வறுமை மற்றும் நியாயமான தேவைகள் தீர
இந்த ஸ்லோகத்தைப் பாராயணம் செய்யலாம்.
அம்பிகையின் கருணை பாதங்களில் வண்டாகச் சரணடைவதாக உருவகிக்கப்பட்டுள்ளது.
அறுகாலி வண்டு எவ்வாறு ஆறுகால்களையும் மாப்பூவில் உள்ள தேனை அருந்திய பிறகு அதிலையே ஒடுங்குகிறதோ
அதைபோல் எனது எனது அனைத்தையும் மலர்பாதத்தில் ஒடுங்கி உன்னோடு இரண்டர கலக்கவேண்டும் என பாடி இருப்பார்.
இதை அவர்கள் நமக்கு கூறியது போல இருக்கும். நாமும் அவ்வாறு இறலவனிடம் இரண்டர கலக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பாடி இருப்பார்.

Comments
Post a Comment