அம்மையும் அப்பனும்

 போன  வார சனிக்கிழமை #சனிவாரபிரதோஷம்.


அப்பன் சிவப்பெருமானுக்கு மிகவும் விசேஷமான நாள்.


அதற்கு மறுநாள் #மஹாசிவராத்திரி ஊரே கோலக்கோலப்பட்டது.


அவற்றில் ஒன்று அம்மையும் அப்பனும் திருமணக் கோலத்தில் இணைந்த நாள்.


மற்றொன்று தேவர்கள் பாற்கடலை கடைந்த போது உருவான ஆலகால விஷத்தை சிவப்பெருமான் உண்ட நாள்.


நேற்று வடமாவட்டங்களில் கொண்டாடும் #மயானக்கொள்ளை திருவிழா.


அடுத்து அடுத்து மூன்று நாட்கள் அம்மைக்கும் மற்றும் அப்பனுக்கும் மிகவும் விசேஷமான நாள்.


இதன் ஐதீகம். சிவப்பெருமான் பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டதால்.


மயானத்தில் இருந்து சிவராத்திரி மறுநாள் வரும் அமாவாசை அன்று அங்காள பரமேஸ்வரி மூலமாக சாப விமோசனம் பெற்றார் என்பது ஐதீகம்.


இவை அனைத்திலும் அம்பாள் அப்பனுடன் கூட இருந்து,அப்பனுக்கு உதவி இருப்பார்.


இவை அனைத்தும் நமக்கு  உணர்த்துவது கணவன் மனைவிடம் உள்ள அந்நோன்யத்தை விளக்கும் விதமாக அமைந்து இருக்கும்.


காரணம் ஆதிசங்கரர் அம்பாளை குறிப்பிடும் போது,உனது தடாங்க மஹிமை மற்றும் உனது பெருமை அப்பனின் விஷமானது அமிர்த மாற்றி அவரை காப்பாறியது என்று பாடுவார்.


அதனால் அமிர்த உண்ட அனைவரும் ஒன்றுமில்லாமல் ஆனாலும் ஆனால் விஷயத்தை உண்ட அப்பனின் ப்ரயள காலத்து ஊழி நடனத்து சாக்ஷி என்கிறது ஶ்ரீலலிதா சஹஸ்ர நாமம்.


இவ்வாறு அம்பாளினால் அப்பனுக்கும் அப்பனுக்கும் பெருமை என அடியார்கள் குறிப்பிடுகிறார்கள்.


#ஓம்ஶ்ரீஅர்த்தநாதீஸ்வராநமஹ#


Comments

Popular posts from this blog

துஷ்ட சக்திகள் விலக Deliverance from the hold of evil spirits

தனது பக்தைக்காக ஶ்ரீலலிதா சஹஸ்ர நாம உச்சரிப்பை மாற்றிய அம்பாள்ச

பெண் குழந்தைகளுக்கு வைப்பதால் அதன் சிறப்பு).