லலிதா சஹஸ்ர நாமத்திற்கு ஒப்புநோக்கதக்க சௌந்தயலஹரி ஸ்லோகம் மற்றும் அபிராமி அந்தாதி பாடல்.
பகுதி 78.
லலிதா சஹஸ்ர நாமத்திற்கு ஒப்புநோக்கதக்க சௌந்தயலஹரி ஸ்லோகம் மற்றும் அபிராமி அந்தாதி பாடல்.
#லலிதாசஹஸ்ரநாமம்#
#சௌந்தயலஹரி#.
நாப்யாலவாலரௌமாலி லதாபலகுசத்வயீ
லக்ஷ்யரோம லதாதாரதா ஸாமுந்நேய .மத்யமா
ஸ்தநபார தலந்மந்த்ய பட்டபந்த வலித்ரயா
தநுமத்யா
முலை மொட்டுக்கள் முளைத்த பாத்தி
(ஸர்வலோக வச்யம்)
"ஸ்திரோ கங்காவர்தஹ ஸ்தானமுகுலரோமாவலீலாதா-
கலாவாலம் குண்டம் குஸுமாஷரதேஜோஹுதபூஜஹ!
ரதேலீலாகாரம் கிமபி தவ நாபிர்கிரிசுதே
பிலத்வாரம் சித்தர்கிரிஷனாயனாநாம் விஜயதே!"
மலையரசரன் பெண்ணே!
உன்னுடைய நாபியானது அசையாது இருக்கும் கங்கை நீரின் சூழலா?.
இல்லை நகில்ளாகிய மொட்டுக்களுடன் கூடிய ரோம வரிசையான கொடியின் கிழங்கு இருக்கும் (விளைநிலத்து) பாத்தியா?.
அல்லது மன்மதனுடைய ஓளியான அக்னியின் ஹோம குண்டமா?.
இல்லையென்றால் ரதி வசிக்கும் வீடா?. அல்லது பரமசிவனது யோகம் சித்திக்கும் குகையின் துவாரமா?. இவை என்னவென்று சொல்முடியாத அழகுடையதாக விளங்குகிறது.
நாபியானது சுழல் மாதிரி வட்ட வடிவோடு ஆழம் தெரியயதாக இருப்பதால் அதற்கு கங்கையின் நீர்ச்சுழல் உமையாகிச் சொல்லி.
அந்த நீர்சுழல் நகர்வது போல இல்லாமல் ஸ்திரமாக சலனமின்றி இருப்பதாக சொல்லி இருக்கிறார். நாபியை விளை நிலத்துக்கு பாத்தியாகச்சொல்லி,அதில் முளைத்துக் கிளம்பிய ரோமங்களான கொடியில் ஸ்தனங்களான மொட்டுக்களும் இருப்பதாகச் சொல்லபடுவது.
#நாப்யாலவாலரோமாளிலதாபலகூசத்வயீ#
என்ற லலிதா சஹஸ்ர நாமத்தை நினைவுக்கு கொண்டு வருகிறது.
லலிதையின் இந்த நாமத்தை ஸ்தனங்களை ரோமா கொடியில் பழுத்த பழம்களாக வர்ணிக்கின்றனர் வாக்தேவிகள்.
யோகிகள் தபஸ் செய்ய குகைகளிலோ அல்லது நிலத்தில் இருக்கும் த்ராவங்களிலோ அமர்த்திருப்பர்.
அதுபோல பரமசிவன் அமர்ந்து அன்னையின் சௌர்தரிய தரிசனத்திற்கு தபஸ் செய்யும் இடமாக அன்னையின் நாபியைச் சொல்லி இருக்கிறார்.
நாபியை ஹோமங்களுக்கு ஆதாரனமான ஹோம குண்டங்மாக தியானிபது வழக்கம். ஞானா அக்னியைக் கொண்டு ஸகல ஸபாபங்களுக்கும் காரணமாக அக்ஞானத்தை சுட்டெரிக்கும் சக்தி உள்ளவர்களாகிறார்கள் ஞானிகள் என்று சொல்கிறார்.
#அபிராமிஅந்தாதி#.
கோமளவல்லியை, அல்லியந் தாமரைக் கோயில் வைகும்
யாமள வல்லியை, ஏதம் இலாளை, எழுதரிய
சாமள மேனிச் சகலகலா மயில்தன்னை, தம்மால்
ஆமளவும் தொழுவார், எழு பாருக்கும் ஆதிபரே.
என் அபிராமி அன்னையை,
இளமையும் அழகும் மிக்க கோமள வல்லியை, அழகிய மென்மையான தாமரையைக் கோயிலாகக் கொண்டு உறையும் யாமளவல்லியை, குற்றமற்றவளை,
எழுதுதற்கு இயலாத எழில் கொண்ட திருமேனியுடையவளை,
சகல கலைகளிலும் வல்ல மயில் போன்றவளை,
தம்மால் கூடுமானவரை தொழுகின்ற அடியவர்களே,
ஏழுலகையும் ஆட்சி புரியும் அதிபர்கள் ஆவார்கள்.

Comments
Post a Comment