அர்த்தநாதீஸ்வரர்#தத்துவமும் எனது ஆன்மீக அனுபவமும்.
#அர்த்தநாதீஸ்வரர்# தத்துவமும் எனது ஆன்மீக அனுபவமும்.
இங்கு அர்த்தநாதீஸ்வரர் அம்பாள் தனது கணவருடன் ஶ்ரீசக்ரம் பிந்து ஸ்தானத்தில் காமேஸ்வரன் காமேஸ்வரியாக இணைந்து இருக்கும் தத்துவம்.
சபரிமலைக்கு மாலையிட்டு விரதம் ஆரம்பித்திலிருந்து நிறைய ஆன்மீக அனுபவங்கள்.
இருமுடி கட்டு முன்பு விநாயகர் மற்றும் சாஸ்தாவுக்கு அபிஷேக ஆராதனை.
இருமுடி நாளன்று விநாயகருக்கு சதுர்தேங்காய் இட்டுச் செல்லும் போது லேசான மழை தூரல் அதுவே நல்ல சகுனம் என உணர முடிந்தது.
Kk Nagar ஐய்யப்பன் கோவிலில் நுழையும் போது ஐயனுக்கு கற்பூர ஆரார்த்தி மற்றும் இருமுடி முடித்து கோவிலை விட்டு கிளம்பு முன்பு ஐயனுக்கு பால் மற்றும் நெய் அபிஷேகம்.
பம்பா நதியில் புனித நீராடல் மற்றும் பித்ருக்களுக்கு தர்பணம் முடித்து சிறியபாதை நடைப்பயணம் ஆரம்பம்.
வெகு நேரம் சந்நிதி மண்ணில் இருக்கும் பாக்கியம்.
மாலை பதினெட்டு படி தரிசனமும் மற்றும் 18 படி ஏறும் பாக்கியம்.
அன்று ஐயனுக்கு மாலை தங்க ஆபரண அலங்காரம்.
அதாவது ஜனவரி 14கில் நடப்பதை அங்கு தரிசனம் பண்ணும் பாக்கியம்.
அதனால் கிட்டத்தட்ட 10மணிநேரம் சந்நிதி மண்ணில் தங்கி இருக்க முடிந்தது.
பிறகு பழனி மற்றும் கணக்கம்பட்டி சித்தர் தரிசனம்.
மாலை சமயபுரம் அம்பாள் தரிசனம் . அம்பாளை கண்குளிர கண்டது மற்றும் மாலையிட்டு ஆசீர்வாதம்.
தரிசனம் முடித்து வெளிவரும்போது திருநங்கைகள் (அர்த்தநாதீஸ்வரர் தத்துவம்) கையால் ஆசீர்வாதம் மற்றும் காணிக்கை கிடைக்கப் பெற்ற பாக்கியம்.
அம்பாளுக்கு மிகவும் பிடிதது தனது கணவரின் இடப்பாகம் அதாவது வாமபாகம்,
அதை அம்பாள் தவமிருந்து மாங்காடு,காஞ்சிபுரம் இருந்து முடிவில் திருவண்ணாமலையில் கார்த்திகை பௌர்ணமியில் பெற்றது அர்த்தநாதீஸ்வரர் சொரூபம்
அந்த சொரூபத்தில் திருநங்கைகள் ஆசீர்வாதம் எனக்கு அம்பாளே ஆசீர்வாதம் பண்ணிய உணர்வு.
ஐயனும் சங்கர நாரயணனின் மைந்தன்.
அந்த மைந்தனை தரிசித்து வரும்போது இவர்கள் ஆசீர்வாதம்.
இவை அனைத்தும் முடித்து மாலை களையும் முன் விநாயகருக்கு கடதீர்த்தால் அபிஷேகம்.
மொத்தில் மாலை பூண்டு மாலையை களையும் வரை நிறைய இறை அனுபவத்தை எனக்கு ஐயனும் அவளது தாய் அம்பாளும் ஏற்படுத்தினார்.
பிறகு வீடு திரும்பும் முன் திரும்பவும் மழைத்தூரல் மொத்தத்தில் மிகவும் நிறைவான இறை அனுபவம் என்னுள் ஏற்படுத்தியது.
இந்த வருட சபரிமலைபயணம்.
#ஓம்ஸ்வாமியேசரணம்ஐயப்பா#

Comments
Post a Comment