அம்பாள் : எப்படிபட்டவள் - 1.

 அம்பாள் : எப்படிபட்டவள் - 1.



அழகு – அன்புகளின் முழுமை : 

தெய்வத்தின் குரல்

(ஆறாம் பகுதி).


அவள் அழகே உருவானவள் என்பது போல அன்பே உருவானவளும்! 


அன்பே அழகாக ஆகி உருவானவள். எந்த பக்ஷணமானாலும் அதற்குத் தித்திப்பைத் தருவது சர்க்கரை என்கிற மாதிரி, 


நாம் எங்கெங்கே எந்தெந்த அழகைக் கண்டாலும் அதையெல்லாம் அழகாக்கும் தாய்ச் சரக்கு அவள்தான்! 


பிரம்ம சக்தியான அவளுடைய பூர்ண அழகின் துளித்துளிதான் மற்ற அழகுகளிலெல்லாம் தெறித்திருக்கிறது. 


இப்படியே நாம் பார்க்கிற அத்தனை அன்புகளுக்கும் மூலமாயிருப்பதும் அவள் தான்.


அவளுடைய அருள் உள்ளமே தான் அழகு வெள்ளமான ரூபமாக ஆகியிருக்கிறது.


அன்பு என்பது ரூபமில்லாத தத்வம்.


 நாம் பார்க்கிற லோகத்திலே, அன்போடு இருப்பது, 


வெளி ரூபத்தில் அழகில்லாமலும் இருக்கிறது;


அன்பு இல்லாமலிருப்பது வெளி ரூபத்தில் அழகாகவும் இருக்கிறது.


ஆனாலும் அன்பு வந்துவிட்டால்,

எந்த ரூபத்திலும் அது அவயவ லக்ஷணத்தை மீறி ஒரு 

ஸெளந்தர்ய சோபையைக் கொடுத்து விடுகிறது.


அதாவது அரூபமான அன்பு எப்படியோ ரூபத்திலேயே பிரதிபலித்துவிடுகிறது. 


இப்படி ரூபத்தில் பிரதிபலிக்க மட்டும் செய்யாமல் அன்பே ரூபமாக, 


அன்பே அவயவங்களாக ஆனதுதான் #அம்பாள்#.


#அரூப# அன்பே அவளுடைய #ஸ்வரூப# ஸெளந்தர்யமாயிருக்கிறது.


அவளிடம் அன்பின் முழுமை அழகின் முழுமையாக ரூபம் கொண்டிரு க்கிறது.


அரூபமாக இருக்கிற தன்னைக் குழந்தைகள் புரிந்து கொள்ள முடியவில்லையே என்பதற்காகத் தானே பரப்ரஹ்ம சக்தியானது அம்பாள் என்ற ரூபமே எடுத்துக் கொண்டிருப்பது? 


இப்படி அன்பு எண்ணத்தின் மேலேயே எடுத்துக் கொண்டதால் அந்த ரூபமே ப்ரேமஸ்வரூபம் தானே?


பார்ப்பதற்குப் பரம ஸெளந்தர்யமான ரூபமாக இருந்தால் தான் 

பாமர ஜனங்களிலிருந்து, கொஞ்சங் கூடப் பக்குவமில்லாதவர் களிலிருந்து, எல்லோரும் இந்த லோகத்தின் சின்ன அழகுகளை விட்டுத் தன்னிடம் திரும்புவார்கள் என்பதால்தான் அவள் பரம லாவண்யமான சரீரத்தை எடுத்துக் கொண்டாள்

Comments

Popular posts from this blog

துஷ்ட சக்திகள் விலக Deliverance from the hold of evil spirits

தனது பக்தைக்காக ஶ்ரீலலிதா சஹஸ்ர நாம உச்சரிப்பை மாற்றிய அம்பாள்ச

பெண் குழந்தைகளுக்கு வைப்பதால் அதன் சிறப்பு).