அம்பாள் : எப்படிபட்டவள் -2.

 அம்பாள் : எப்படிபட்டவள் -2.



அழகு – அன்புகளின் முழுமை : 

தெய்வத்தின் குரல்

(ஆறாம் பகுதி).


அவளுடைய காருண்யத்தினாலேயே உண்டான லாவண்யம் அது!


காருண்யத்தின் லாவண்யமே அம்பாளுடைய சரீரம். 


மநுஷ்யர்கள் விஷயத்தில் உள்ளன்பும் வெளி அங்க லக்ஷணமும் ஸம்பந்தப்படாமாதிரி இல்லாமல் உள்ளன்பே வெளி அவயவ அழகாக ஆன உருவந்தான் அம்பிகை; குறிப்பாக 


ஸ்ரீவித்யா அதிதேவதையான த்ரிபுரஸுந்தரியாயிருக்கும் அம்பாளின் ரூபம். 


திரிலோகத்திலும் அவள்தான் மஹா அழகு என்பதால்தான் த்ரிபுரஸுந்தரி என்று பேர். 


அதற்கு வேறே தத்வார்த்தங்களும் உண்டு. அது இருக்கட்டும்….


அழகும் அன்பும் ஒன்றுதானென்பதைப் பல வார்த்தைகள் காட்டுகின்றன.


 ‘ஸு’ என்கிற அடைச்சொல்லுக்கு நல்லது, அழகானது என்று இரண்டு அர்த்தமும் இருக்கிறது. 


ஸுகுணம் என்றால் நல்ல குணம்;


ஸுரூபம் என்றால் அழகான ரூபம். நல்லது, 


நல்லது என்றால் எது நல்லது?


அன்பு தான் மிகவும் நல்லது.


 ‘அன்பே சிவம்’ என்கிறோம். 


சிவம் என்றாலும் சுபம் என்றாலும் ஒன்று தான். 


சுபம் என்றால் நன்மை. 


நல்லதுகளில் உயர்ந்த நன்மை எது?


 அன்புதானே? 


ஆகையால் சுபம் என்றால் அன்பு.


 ‘சுப’த்திலிருந்துதான் ‘சோபை’ என்ற வார்த்தை வந்திருக்கிறது.


'சுப சோபனம்’ என்று சேர்த்துக் சொல்வது வழக்கம். 


‘சோபை’ என்றால் ‘அழகு’.


 ‘சுப’த்திலிருந்து ‘சோபை’ என்கிறபோது அன்பிலிருந்தே அழகு வருகிறதென்றாகிவிடுகிறது!


சுப நிகழ்ச்சிகளில் கல்யாணம் என்பதை முக்யமாகச் சொல்கிறோம்.


 ‘சுப முஹுர்த்தப் பத்ரிகை’ என்று இன்விடேஷனில் போடுகிறோம்.


கல்யாணம்’ என்ற வார்த்தைக்கு உள்ள அநேக அர்த்தங்களில்


ஒன்று ‘நல்லது’, 


அதாவது ‘அன்பு’; 


இன்னொன்று ‘அழகு’!


 ‘சிவம்-ஸுந்தரம்’ என்று சொல்வது இப்படித்தான் ஏற்பட்டது. 


சிவத்துக்கே ஸுந்தரேச்வரன் என்றும் பேர் இருக்கிறது.


உள்ளத்தின் அன்பே உருவத்தில் ஸுந்தரமாகி ஏற்பட்ட மூர்த்தி!


அம்பாள் இப்படி அன்பே அழகானவளானதால் தான்.


அவளுடைய அழகு வெள்ளத்தில் ஊறியிருப்பதே அன்பு வெள்ளத்தில் கரைவதாகவும் ஆகிறது! 


அது அப்படியே அவளுடைய 

உள் நிலையான அத்வைதத்துக்கு,


ஆத்மானந்தத்துக்கு அழைத்துக் கொண்டு போய்விடுகிறது! 


அன்புக்கு வேறேயாக அழகு இருந்தால் அது தாற்காலிக ஆனந்தத்தோடு முடிகிறது.


தொடரும்.

Comments

Popular posts from this blog

துஷ்ட சக்திகள் விலக Deliverance from the hold of evil spirits

தனது பக்தைக்காக ஶ்ரீலலிதா சஹஸ்ர நாம உச்சரிப்பை மாற்றிய அம்பாள்ச

பெண் குழந்தைகளுக்கு வைப்பதால் அதன் சிறப்பு).