அம்பாள் : எப்படிபட்டவள் -3.
அம்பாள் : எப்படிபட்டவள் -3.
அழகு – அன்புகளின் முழுமை :
தெய்வத்தின் குரல்
(ஆறாம் பகுதி).
அன்பே அழகாகிவிட்டால்?
பராசக்தியின் அன்பு அல்லது அருளைவிட சாச்வதப் பேரானந்தமான மோக்ஷத்துக்கு என்ன உபாயமிருக்கிறது?
இந்த அன்பையே நாம் அழகாக அநுபவிப்பதால்தான் அது மோக்ஷோபாயமாகிறது.
அன்பே சிவமாவ(து) ஆரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே (-திருமந்திரம்)
என்றபடி,
இந்த அன்பில் நன்றாக உருகிக் கரைந்தபின் அதுவாகவே, அவளாகவே,
அத்வைதமாகி விடலாம். ”பவாநித்வம்” [ச்லோ. 22],
”ஸரஸ்வத்யா லக்ஷ்ம்யா”
[ச்லோ. 99] ஆகிய ச்லோகங்களில் இந்த அகண்ட பரிபூர்ண நிலையைத்தான் சொல்லியிருக்கிறது.
ஆகையால் அழகு வழியாக மோக்ஷமே பெறலாம் என்பது அதிசயோக்தியே இல்லை.
ஸாக்ஷாத் அம்பாள் எப்படியிருப்பாள் என்பதை நாம் எப்படி ரூபப்படுத்திப் பார்ப்பது?
பச்சையாயிருப்பாளா, அவள் மீனாஷி யா
சிகப்பாயிருப்பாளா, அவள் லலிதாவா
கறுப்பாயிருப்பாளா? இல்லை காளியா
இந்த எல்லாக் கலரிலும்தான் அவளுக்கு ரூப பேதங்கள் சொல்லியிருக்கிறது.
பிரம்மாவுக்கு நாலு தலை,
சிவனுக்கு ஐந்து தலை,
ஸுப்ரஹ்மண்யருக்கு ஆறு தலை என்கிற மாதிரி அவளுக்கு எத்தனை தலை என்று வைத்துக்கொள்வது?
விச்வரூபத்தில்,
விஸ்வ ரூபத்தில் ஆயிரம் தலை –
”ஸஹஸ்ர சீர்ஷம்” – என்று வேதம் சொல்கிறதென்றால் அந்த மாதிரிக் கணக்குப் போட்டுக் கண்ணுக்குள் கொள்கிற விதத்தில் நினைக்கவே முடியவில்லையே!
இரண்டு கை மீனாக்ஷியிலிருந்து
பதினெட்டுக்கை மஹிஷாஸுரமர்த்தினி வரை அவளுக்குப் பல ரூபம்,
அந்தந்த ரிஷிகள் கண்ட விதத்தில், சொல்லியிருப்பதால் எத்தனை கை என்று கல்பித்துப் பார்ப்பது?
சடைவிரி கோலமாக இருக்கிறாள் – அழகாகக் கிரீடம் வைத்துக் கொண்டிருக்கிறாள்;
ஸர்வாபரண பூஷிதையாக இருக்கிறாள் –
துணியே கட்டிக்கொள்ளாமல் ரத்தத்தைப் பூசிக்கொண்டு கபாலமாலையோடு திரிகிறாள் என்றெல்லாம் வித்யாஸமாகச் சொன்னால் எப்படி அவள் ரூபத்தை பாவிப்பது?
இப்படிக் கேட்டால்-
“எந்த ரூபமானாலும்
அன்புதான் அப்பா, முக்கியம்.
அதனால் பரம அன்புருவாகக் கல்பித்துப் பார்”.
”பரம அன்பு என்றால் எப்படியிருக்கும், தெரியல்லியே!”
“எங்கேயாவது ஒரு நல்ல ஆத்மா
ஒரு பிரதிப் பிரயோஜனமும் எதிர்பார்க்காமல் மனஸார அன்னதானம் பண்ணினால் அங்கே போய் நின்று அவன் முகத்தைப் பார்.
தானம் வாங்கிக் கொள்கிறவர் களைவிட, போடுகிற அவனுக்கு எத்தனை ஆனந்தம் உண்டாகிறது, பார்! அதைப் பார்த்தால் உன் மனஸ்கூடக் கொஞ்சம் உருகுகிறதல்லவா?
இப்படி ஒரு வேளை,
இரண்டு வேளை நூறுபேருக்கு,
ஆயிரம் பேருக்குப் போடுகிறவன் முகத்தில் இத்தனை அன்பும் ஆனந்தமும் இருக்கிற தென்றால்.
லோகத்திலுள்ள கோடானாகோடி ஜீவன்களுக்கும் –
மஹாபாவங்களைச் செய்கிற –
காரியத்தில் செய்யாவிட்டாலும், மனஸினாலாவது நினைக்கிற –
நம் அத்தனை பேருக்கும் கல்பகோடி காலமாக வேளாவேளை சோறு போடுகிறவளின்
அன்பும் ஆனந்தமும் எப்படியிருக்கும் என்று multiply பண்ணி (பெருக்கி)ப்
பார்த்துக்கொள்!
தொடரும்.

Comments
Post a Comment