அம்பாளின் சொரூபம் -4
அம்பாளின் சொரூபம் -4
அம்பாள்51அக்ஷ்ரங்களின் ரூபங்களாக இருக்கிறாள் என்கிறது லலிதா சஹஸ்ர நாமம்.
(578. மாத்ருகாவர்ணரூபிணி
மாத்ருகா என்றால் 'ஆ' முதல் 'க்ஷ' வரையிலான எழுத்துக்கள்.
'க்ஷர' என்றால் அழியக்கூடியது.
'அக்ஷரா' என்றால் அழியாதது.
இந்திய மொழிகளில்,
எழுத்துக்கள் 'அக்ஷர்' அல்லது 'அக்ஷரா'.
ஒவ்வொரு எழுத்தும் தெய்வீக தாயின் சக்தி மற்றும் நிறத்தைக் குறிக்கிறது.
ஒவ்வொரு எழுத்துக்கும் ஒரு தெய்வம் உண்டு.
ஒவ்வொரு தெய்வத்திற்கும் சக்தி, நிறம் மற்றும் ஆயுதங்கள் உள்ளன.
மாத்ருகா வாஷிநீ யுக்தாம் யோகிநீபி ஸமன்விதாம்
காந்தத்வாராதி ஸஹிதாம் ஸம்ஸ்மரேத் த்ரிபுராம்பிகாம்
பொருள் -
வசினிய சக்திகள்,
யோகினிகள் மற்றும்
மாத்ருக்கள் போன்ற வடிவமான திரிபுராம்பிகையை
நான் பிரார்த்திக்கிறேன்.
அனைத்து அக்ஷர தேவதைகளும் சனத்குமார சம்ஹிதையில் விளக்கப்பட்டுள்ளன.
அதில், அக்ஷரங்கள்
5 பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
1. ஸ்வராத்மிகா சக்திகள் -
இவை 'ஆ' முதல் 'ஆஹா' வரையிலான எழுத்துக்களால் குறிக்கப்படுகின்றன.
இந்த சக்திகளுக்கு 8 கைகள் உள்ளன.
அவர்கள்
1.பாஷமு,
2.அங்குஷமு,
3.அபய முத்திரை,
4.வரத முத்திரை, 5.புஸ்தகமு(புத்தகம்),
6.அக்ஷ மாலை,
7.கமண்டலம்,
8.வியாக்யா முத்திரை ஆகியவற்றைக் கொண்டுள்ளனர்.
இவை தூம்ரா வர்ணத்தில் -
ஸ்மோக்கி சாயல் நிறத்தில் உள்ளன.
ஒவ்வொரு மாத்ருகாவின் வரம்பு
கீழே உள்ளது
(1 யோஜனா = 12 கிமீ)
2. வியஞ்சன சக்திகள் -
இவை 'க' முதல் 'க்ஷ' வரையிலான எழுத்துக்களால் குறிக்கப்படுகின்றன.
இந்த சக்திகளுக்கு 4 கைகள் உள்ளன.
இவை 4 பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
'கா' முதல் 'மா' வரையிலான சக்திகள்
1.பாஷா,
2.அங்குஷா,
3.அக்ஷமாலா மற்றும்
4.கமண்டலா
3. 'ய', 'ரா', 'ல','வ' சக்திகள் பாஷா, அங்குஷா, அபயா மற்றும் வரதா ஆகியவற்றைப் பிடித்துள்ளன. முத்திரைகள்.
4. 'ச','ஷா','ச','ஹா' சக்திகள் பாஷாவை வைத்திருக்கின்றன, அங்குசா, அபய மற்றும் வரத முத்திரைகள்.
5. 'ல', 'க்ஷ' சக்திகள் பாஷா, அங்குசா, கரும்பு மற்றும் மலர்களின் அம்பு
'க' முதல் 'தா' வரை சிந்தூர வர்ணங்கள். சிவப்பு ஆரஞ்சு நிறம்.
'டா' முதல் 'ப' வரை கௌர வர்ணங்கள். வெள்ளை அல்லது சிகப்பு நிறம்
'பா' முதல் 'ல' வரை அருண வர்ணங்கள்.
அதிகாலை சூரியனின் நிறம்.
'வ' முதல் 'ச' வரை கனக வர்ணங்கள். தங்க நிறம்
'ஹ' முதல் 'க்ஷ' வரை
வித்யுத் வர்ணங்கள்.
ஒரு மின்னல் நிறம்.
வியஞ்சன சக்திகளின்
வரம்பு 40 லட்சம் யோஜனைகள்.
பரமாத்மா எப்படி சிவனாகவும், சக்தியாகவும் கற்றுக் கொள்ளப்படுகிறாரோ,
அதுபோல மாத்ருக்களும் உயிரெழுத்துகளாகவும், மெய்யெழுத்துக்களாகவும்
கற்றுக் கொள்ளப்படுகின்றன.
உயிரெழுத்துக்கள் சக்தியின் வடிவங்கள்
மற்றும்
மெய் எழுத்துக்கள் சிவனின் வடிவங்கள்).
587 ஸ்ரீ ஷோடசாக்ஷரி வித்யா
பதினாறு எழுத்துக்கள் கொண்ட அறிவை உடையவள்.
588 திரிகூடம்,மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டவள்.
அவை
வாக்பவ கூடம்
காமராஜ கூடம்
சக்தி கூடம்
மாத்ருகா நியாஸம் என்பது
51 அக்ஷரங்களையும் தனது உடலின் பல பாகங்களிலும் ஆவிர் பவித்துக் கொள்வது.
இதன் காரணமாக அட்சர ரூபமாக
உள்ள அம்பிகையின் வடிவமாகவே வழிபடுபவரும் ஆகிவிடுகிறார்.
மாத்ருகா நியாஸம் இரு விதமாக செய்ய சொல்கிறது.
பஹிர்-மாத்ருகா, அதாவது
வெளியில் நம் அங்கங்களைத் தொட்டும்,
அந்தர் மாத்ருகா என்பதில் உடலுக்குள் இருக்கும் ஆதார சக்ரங்களை மனதால் நினைத்து அதன் இதழ்களிலும் நியாஸம் செய்வது.
மந்த்ர ரூபமாக, 51 மாத்ருகா அக்ஷரங்களாக இருக்கும்.
அன்னை நமது உடலில் எங்கெல்லாம் வாசம் செய்கிறாள் என்றும்
இன்றைய இந்தியாவில் எங்கு
இந்த 51 சக்தி பீடங்கள் இருக்கின்றன என்றும் பார்க்கலாம்.
சம்ஸ்கிருதத்தில் மாத்ருக அக்ஷரங்கள் 51.
உலகில் இருக்கும்
சகல மந்த்ரங்களுக்கும், வேத-வேதாந்த சாஸ்திரங்களுக்கும் தாய் போன்றவை.
இந்த 51 அக்ஷரங்கள்.
அதனால்தான் இவற்றிற்கு மாத்ருகா அக்ஷரங்கள் என்று பெயரே.
இவை எந்த அக்ஷரங்கள் என்பதெல்லாம் சம்ஸ்கிருதம் படித்தால் தெரிந்து கொள்ளலாம்.
முன்னர் சொன்ன 51 பீடங்கள்
இந்த 51 அக்ஷரங்கள் தோன்றிய காலத்திலேயே தோன்றியது என்றும்,
இதனாலேயே ஆதி பீஜாக்ஷர பீடங்கள் என்றும் வழங்கப்படுவதும் உண்டு.
அண்டத்தில் இருப்பதெல்லாம் பிண்டத்திலும் உண்டு.
இந்த 51அக்ஷரங்களும் நம் உடலில் ஆறாதாரங்களில் (ஆறு ஆதாரங்கள்) இருக்கின்றன.
இவை முறையே,
மூலாதாரத்தில் 4,
சுவாதிஷ்டானத்தில் 6, மணிபூரகத்தில் 10,
அநாகதத்தில் 12,
விசுக்தியில் 16,
ஆக்ஞையில் 2,
நெற்றிக் கண் பகுதியில்
சூக்ஷ்மமாக 1,
ஆக மொத்தம் 51 பீடங்கள்.
ஆதிசங்கரர் மந்த்ர சாஸ்திரங்களில் உள்ள விஷயங்களை.
தனது 'பிரபஞ்ச சாரம்' என்னும் நூலில் விரிவாகச் சொல்லியிருக் கிறார்.
அந்த நூலின் காப்பு செய்யுளில் பின்வருமாறு கூறியுள்ளார்.
"அகர முதலான உயிரெழுத்துக்களும், 'க' வர்க்கம்,
'ச' வர்க்கம்,
'ட' வர்க்கம்,
'த' வர்க்கம்,
'ப' வர்க்கம்,
'ய' வர்க்கம்
ஆகிய ஏழு எழுத்து வர்க்கங்களையும்
தனது
கை,
வாய்,
பாதம்,
இடை,
இதயம் ஆகிய அவயவங்களாக கொண்டு உலகனைத்துக்கும் ஈஸ்வரியாக உள்ள அம்பிகை நமக்கு மனத்தூய்மை அளிக்கட்டும்" என்கிறார்.
மஹாகவி காளிதாசனும் அம்பிகையை கூறும் போது
#அக்ஷர சுந்தரி#' என்றே வர்ணித்திருக்கிறாராம்.
அருணகிரிநாதர்
இந்த 51 அக்ஷர மகிமை உணர்ந்தே கந்தரனுபூதியை 51 பாடல்களாக எழுதியிருப்பதாக கேள்விப் பட்டிருக்கிறேன்.
ஜப-தபங்கள், வழிபாடுகள் ஆரம்பிக்கும்முன் சில நியாஸங்கள் உண்டு. அதில் முக்கியமானது மாத்ருகா நியாஸம்,
இது ஜபம் எடுத்துக் கொள்ளும் சமயம் குருவானவர்
த்ரிபுர-ஸித்தாந்த தத்துவங்களை சுருக்கமாமச் சொல்லி,
பின்னர் மாத்ருகா நியாஸம் செய்வித்தபின் மந்த்ரம் உபதேசிக்கப்படும்.
இவ்வாறாக அம்பாளை மனதார தியானித்து அதற்குரிய மந்திரங்களை ஜெபிக்கும்போது அவள் நம்முள் அம்பாள் ஆவிர்பவிக்கிறாள்.
அவளை பூஜையின் மூலம்,
மந்திர யந்திர தந்திரங்கள் மூலமாகவும் மேலும் நாமாவளி மூலமாக வேண்டி அவளை அடையலாம் என்பதே இந்த பதிவுகளின் சராம்சமாகும்.
நாமாவளி மிக பெருமை வலிமை வாய்ந்தது வாக்தேவிகள் இயற்றிய
#லலிதாசஹஸ்ரநாமம்#
எனவே அதை பாராயணம் செய்து பயன் பெறுவோமாக.
#ஓம்அக்ஷ்ரரூபிணியேநமஹ#.

Comments
Post a Comment