செல்வ செழிப்பு Accumulation of riches and wealth
பகுதி 87.
செல்வ செழிப்பு
Accumulation of riches and wealth
#லலிதாசஹஸ்ரநாமம்#
#பதத்வயப்ரபாஜாலபராக்ருதஸரோருஹா#.
பதத்வய ப்ரபாஜால பராக்ருத ஸரோருஹா…’’
என்கிற இந்த நாமமானது,
மொத்தமாக அம்பிகையினுடைய திருவடிகளை சொல்கிறது.
இப்போது, மொத்தமான திருவடியை இந்த நாமம் வர்ணிக்கின்றது.
இந்த நாமாவினுடைய அர்த்தத்தை பார்ப்பதற்கு முன்பு,
“பதத்வய’’ என்கிற வார்த்தை அடுத்து வருகிற
“ப்ரபாஜாலா…’’ என்கிற நாமத்தை கொஞ்சம் விட்டு விடுவோம்.
“பதத்வய பராக்ருத ஸரோருஹா…’’
என்கிற பதத்தை எடுத்துக் கொள்வோம்.
இதில் வருகிற #ஸரோருஹம்# எனில் #தாமரை# என்று பொருள்.
பராக்ருஹ ஸரோருஹா என்று சொன்னால்,
தாமரையை விட…
அதாவது தாமரையே வெட்கப்படும் படியாகச் செய்யும்,
தாமரையையே மதிப்பிழக்கச் செய்யும்.
#ஸரோருஹம்# என்கிற #தாமரையை# மதிப்பிழக்கச் செய்யும்.
எதுவெனில்,
#பதத்த்வயம்…#
அதாவது இந்த #அம்பிகையினுடைய##இரண்டுபாதங்கள்#இருக்கின்றனவே.
அவை இரண்டும் தாமரையையே வெட்கப்படும்படிச் செய்யும்.
இதற்கு நடுவே #ப்ரபாஜாலா…#
என்கிற ஒரு வார்த்தையை போட்டிருக் கிறார்கள்.
#ப்ரபை#என்றால் #ஒளி#என்று பொருள்.
அந்த #ஒளிக்கு# ஒரு #ஜாலம்# இருக்கிறது.
இப்போது மொத்தமாக இதன் பொருள்.
தாமரையை மதிப்பிழக்கச் செய்யும் திருவடி
எதனால் என்று பார்த்தால்,
தன்னுடைய ஒளியினால் மதிப்பிழக்கச் செய்கிறது.
இதன் பொருள் ஒளிப்பொருந்திய இரண்டு பாதங்கள்
யாருடையது
அது அம்பாளுடைய பாதங்கள்.
அது சரி.
அதெப்படி முடியும்.
தாமரைக்கும்
அம்பிகையின் திருவடிக்கும்
என்ன ஒப்புமை எனில்,
ஆச்சாரியர் கற்பனையின் கைவண்ணம் இங்கு மிளிர்கிறது.
தாமரை மென்மையானது.
அம்பிகையின் திருவடியும் மென்மையானது.
தாமரை வாசம் மிகுந்தது.
அம்பிகையின் திருவடியும்
வாசம் மிகுந்தது.
தாமரை குளத்தில் பூக்கக் கூடியது.
அம்பிகையினுடைய திருவடி பக்தனுடைய மனம் என்கிற குளத்தில் பூக்கக் கூடியது.
அதற்குப் பிறகு தாமரையைத் தேடி தேனீக்கள் வரும்.வண்டுகள் வரும்.
அம்பிகை என்கிற திருவடியைத் தேடி ஞானி என்கிற வண்டு வரும்.
இப்படியே அம்பிகையினுடைய திருவடி, தாமரை என்று ஒப்புமை இருந்து கொண்டே இருக்கிறது.
ஆக, தாமரையைவிட அம்பிகையின் திருவடி ஒரு படி மேலேயிருந்தால் தானே மதிப்பிழக்க முடியும்.
ஆகவே அம்பாளின் தாமரை திருவடிகள் தாமரையை மிக உயர்ந்தது காரணம் பக்தகர்களின்
சரணாகதியால்.
#சௌந்தயலஹரி#.
தாமரையை வெற்றிக்கொள்ளும் திருவடி தாமரை.
(ஸர்ப்ப வச்யம்).
"ஹிமாநீஹந்தவ்யம் ஹிமகிரிநிவாசைகச்சதுரௌ
நிஷாயாம் நித்ராணாம் நிஷி சரமபாகே ச விஷாதௌ!
வரம் லக்ஷ்மீபாத்ரம் ஶ்ரியமதிஸ்ருஜந்தௌ சமயிநாம்
சரோஜம் த்வத்பாதௌ ஜனனி ஜயதஷ்சித்ரமிஹ கிம்!
தாயே
பனிமலையிலேயே இருக்க கூடியவையும்,இரவு பகல் சந்த்யா காலம் போன்ற எல்லா காலத்திலும் மலர்ந்து இருப்பதும். ஸமாசாராமுடைய பக்தகர்களு லெக்ஷ்மியை கொடுக்ககூடியதுமான உனது பாதங்கள் பனியில் கருகியும் இரவில் உறங்கியும் லக்ஷ்மி விரும்பிக்கின்ற நேரத்தில் மட்டும் வந்து அமரும்படியான தாமரை மலரை ஜெயித்து இருப்பத்தில் வியப்பில்லை..
இரவும் பகலும் பிரகாசிக்கவும்
ஸ்ரீ லட்சுமியின் அருளை ஈர்க்கும் திறன்; கொண்டது தாமரை
பக்தர்களுக்கு ஸ்ரீ லட்சுமி (செல்வம்) வழங்கும் திறன் கொண்டது,
(எனவே, ஒரு தாமரைக்கும் உங்கள் தாமரை கால்களுக்கும் இடையில்,)
அம்மா ஸ்ரீதேவி !
உங்கள் தாமரை பாதங்கள் தாமரையை வென்றால் என்ன ஆச்சரியம்?
தாமரை இரவில் தன்னை மூடுகிறது (தூங்குகிறது),
அதேசமயம் ஸ்ரீதேவியின் தாமரை பாதங்கள் எல்லா நேரங்களிலும் பிரகாசிக்கும் மற்றும் விழித்திருக்கும்.
ஏனெனில் ஸ்ரீதேவி காலத்துக்கும் இடத்துக்கும் அப்பாற்பட்டவர்.
ஸ்ரீதேவி லட்சுமி தாமரையில் வசிக்கிறார் என்று நமது வேதாகமம் கூறுகிறது.
(நமது வேதங்கள் பத்மாலயா) அவளுக்கு தாமரை பிடிக்கும்
(அவள் பத்ம பிரியா).
எனவே, தாமரை அவளுக்கு விருந்தளிப்பதற்கும் அவளுக்கு மிகவும் பிடித்தமானதற்கும்
ஸ்ரீ லட்சுமியின் அருளைப் பெற்றுள்ளது.
ஸ்ரீதேவியின் தாமரை பாதங்கள் பற்றி என்ன?
அவர்கள் பக்தர்களுக்கு ஸ்ரீ லட்சுமியை வழங்க முடியும்!
வசனத்தின்படி,
ஸ்ரீதேவியின் தாமரைக்கும் தாமரைக்கும் இடையே உண்மையான ஒப்பீடு இல்லை.
ஸ்ரீதேவியின் தாமரை பாதங்கள் தாமரையை வென்றால் என்ன ஆச்சரியம்?.
#அபிராமிஅந்தாதி#
வருந்தாவகை,
என் மனத்தாமரையினில் வந்து புகுந்து
வருந்தாவகை,
என் மனத்தாமரையினில் வந்து புகுந்து,இருந்தாள்,
பழைய இருப்பிடமாக;
இனி எனக்குப்
பொருந்தாது ஒரு பொருள் இல்லை-விண் மேவும் புலவருக்கு
விருந்தாக வேலை மருந்தானதை நல்கும் மெல்லியலே! .
என்னுடைய மனத் தாமரை,
எம் அன்னை அபிராமியின் இருப்பிடம்.
அவள் இங்கேயே இருந்தவள்தான். நானும்,
அவளின் அடியிணையிலேயே இருந்தவந்தான்.
ஆனாலும், என் செய்வினையால் என் அன்னையை விட்டுப் பிரிந்துவந்து விட்டேன்.
ஆயினும், அபிராமி அன்னை, இன்று, தன்னுடைய அந்தப் பழைய இருப்பிடத்திற்கு வந்துவிட்டாள்.
இனி, எனக்குக் கிடைக்காதது என்று ஏதேனும் உண்டா என்ன?
அவளே கிடைத்த பின்னர், வேறு எதுதான் கிடைக்காமல் இருக்க முடியும்!!
அவளும், எப்படிப் பட்டவள்?
தனது அன்பர்களுக்கு,
எதையும் தரக் கூடியவளாயிற்றே அவள்!
தேவர்களும் அசுரர்களும் சேர்ந்து கடலைக் கடைந்த போது, தேவர்களுக்காக, அமிர்ததையே வழங்கியவள் அல்லவா அவள்!
அசுரர்கள் போட்டியிட்ட போது, மோகினியாய் உருவெடுத்து வந்து, தேவர்களுக்கு சேர வேண்டிய அமிர்தத்தை, அவர்களுக்கு வழங்கியவள் அன்னை அபிராமி அல்லவா!
அந்த அனை அபிராமி என் உள்ளத்தில் குடி கொண்டிருக்க,
வேறு என்ன வேண்டும்! அனைத்தையும் தர அவள் காத்திருக்க, எனக்கு வேறு என்ன வேண்டும்!
#ஓம்ஶ்ரீமாத்ரேநமஹ#

Comments
Post a Comment